பரவசமூட்டும் பஜன்கள் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

வாரத்தின் ஏழு நாட்களுக்கும் வரப்பிரசாதமாய் உங்களது வரவேற்பறையை பக்தி மணம் கமழ வைக்க பவனி வரும் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி “பஜன்ஸ்”.

தினந்தோறும் அதிகாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாகவதரின் பரவசமூட்டும் பஜனை இசைப் பாடல்கள் அணிவகுக்கின்றன.

ஒவ்வொரு நாளின் விடியலும் இறைவன் நமக்களிக்கும் ஒப்பற்ற பரிசு.  அந்த பரிசளிக்கும் பரம்பொருளை நாம் மனதார மகிழ்ந்து வணங்க வாய்ப்பளிக்கும் இந்நிகழ்ச்சி பக்தப் பெருமக்களுக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி நேயர்கள் அனைவருக்கும் அரிய வரப்பிரசாதமாகும்.  கண் விழிக்கும் போதே கடவுளின் திருநாமம் நமது செவி வழி சேரும்போது இதயத்தில் எழும் இன்ப நாதத்தை வார்த்தைகளால் கூற இயலாது.

உரிய பக்க வாத்தியங்களுடன் உள்ளம் உருக பாகவதர்கள் பாடும்போது நமது உள்ளங்களில் மட்டுமல்ல இல்லங்களிலும் ஆன்மீக அருள் ஊற்று பெருக்கெடுப்பதை மறுக்க முடியாது.

 

 

 

கேப்டன் கணேஷ்

எழுத்தாளர்

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


4 × = 36


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.