இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகள்

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் புதிதாகச் செயல்பட உள்ள இந்தியன் வங்கியின் 21 கிளைகளையும், 31 ஏ.டி.எம். மையங்களையும் தமிழக முதலமைச்சர், காணொலிக் காட்சி வாயிலாக 29.09.2010 அன்று, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இவற்றுள் தமிழகத்தில் மட்டும் 5 கிளைகளும், 21 ஏ.டி.எம். மையங்களும் அமைகின்றன.

இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர், ‘நாடு முழுமையிலும் செயல்படும் இந்தியன் வங்கியின் 52 புதிய கிளைகளைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்தியன் வங்கி, தமிழகத்தில் ஒரு முன்னணி வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி, மாநிலத்திலுள்ள சுய உதவிக் குழுக்களுக்குப் பெரிதும் உதவி வருகிறது.

தமிழகத்தில் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் இந்த வங்கியின் தலைவர், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சியின் வாயிலாகப் பாராட்டி வாடிநத்துகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின்போது, நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.எம். பாசின்
மற்றும் நிர்வாக இயக்குநர்கள் உடனிருந்தனர்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter 

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 2 = 3


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.