- Friday, December 31, 2010, 17:26
- கவிதைகள்
- 0 views
குமரி எஸ். நீலகண்டன்
வருடங்கள் வளர வளர
வளர்ந்துகொண்டே
இருக்கிறோம்.
உடலெங்கும் மின் ஒளியில்
பகட்டாய்ப் பறக்கிறது பூமி.
காங்கிரீட் காடுகளில்
வாடாத பூக்களுடன்
பிளாஸ்டிக் தாவரங்கள்...
உயிர்களை உன்னதமாய்க்
காக்கிறோம்...
கொசுக்கள்.. வைரஸ்..
பாக்டீரியாக்களை
புதிது புதிதாய்
உருவாக்கியும் வளர்த்தும்...
வீட்டினுள் குளிரூட்டி
வெளியே அக்னி
வளர்க்கிறோம் .
பூமியின் அழுக்கான
கைகளின் வழி பணங்கள்
அவமானத்துடன்
அலைகின்றன
கட்டைப் பஞ்சாயத்தை
இன்னுமொரு
கட்டை பஞ்சாயத்தே தட்டித்
தனக்காய்த் தீர்ப்பு சொல்கிறது.
ஆயிரம் வருடத்தில் பிறந்த
அழகான ஒரு மரப்பாச்சி பொம்மை
மிகுந்த சலிப்புடன்
குழப்பங்களின் குழைவினுள்
குதூகலமாய் வரும்
குழந்தை 2011ஐப் பார்க்கிறது
பரிதாபமாய்.....
Full story
- Friday, December 31, 2010, 15:38
- பத்திகள்
- 0 views
விசாலம்
காலம் யாருக்கு நிற்கிறது? அது தன் கடமையைச் செய்தபடி ஒடிக்கொண்டே இருக்கிறது. அதில் நன்மைகள், தீமைகள் கலந்து வருகின்றன. இறைவன் சங்கல்பத்திற்கேற்ப இயற்கையும் ஆடுகின்றது. இன்று நடப்பது, பின்னால் ஒரு சரித்திரம் ஆகிவிடுகிறது.
2010ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால் குருவின் ஆதிக்கம் கொண்ட ஆண்டாக இருந்ததால் முன் ஆண்டுகள் போல் அத்தனை இழப்புகள் இல்லை எனலாம்.
ஜனவரியிலிருந்து டிசம்பர் வரை என் மனத்தில் நின்ற சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்க்கிறேன். முதலில் நடந்த நல்ல சம்பவங்களை நினைத்துப் பார்க்கலாம்.
நல்ல சம்பவங்கள் சில:
ஜனவரியில் மிகவும் நீண்ட பல ஆண்டுகளுக்கு ...
Full story
- Friday, December 31, 2010, 14:31
- பத்திகள்
- 0 views
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா இப்போது 11 ட்ரில்லியன் டாலர் கடனில் மூழ்கித் தவிப்பதற்கு நிதிப் பற்றாக்குறையோடு (இது பட்ஜெட் பற்றாக்குறையில் முடிகிறது) ஜனங்களிடம் சேமிப்புப் பற்றாக்குறை, (அமெரிக்கர்களிடம் சேமிக்கும் பழக்கமே போய், கடன் அட்டை இருப்பதால் வரவுக்கு மேல் செலவு செய்வதால் சேமிப்பு இல்லாத நிலை), வணிகப் பற்றாக்குறை (உற்பத்திக்கு மேல் மக்களிடையே நுகர்வு (consumption) இருப்பதால் ஏற்றுமதிக்கு மேல் இறக்குமதி அதிகம் இருக்கும் நிலை), தலைமைப் பற்றாக்குறை (leadership deficit) (நாட்டின் நலன்களை மனத்தில் கொண்டு நாட்டை நடத்திச் செல்லத் தகுந்த ...
Full story
- Thursday, December 30, 2010, 11:59
- பொது
- 0 views
நன்றி - அகநாழிகை பொன்.வாசுதேவன்
Full story
- Thursday, December 30, 2010, 9:38
- கவிதைகள்
- 0 views
குமரி எஸ்.நீலகண்டன்
பறக்கும் தூள்களுக்கு
இடையே
பரந்து நிற்கும்
மௌனத்தின் வெளி.
மணக்கும் மயக்கும்
மௌனத்தின் நெடி.
அடைத்த செவிகளுக்கும்
அடங்காமல் கேட்கும்
மௌனத்தின் ஒலி.
கால மாற்றத்தில்
புயலின் மையம்
மௌனம்.
புரிவதற்காகவும்
புரியாமல் இருக்கவும்
எழுதப்பட்டும்
ஓரளவு
புரிந்துவிடுகிறது
மௌனம்.
சலசலப்பில்
சல்லாபிக்கும்
மௌனம்.
எதுவும்
முடிந்துவிடுகிறது
உலகில் மௌனத்தில்.
இன்னொன்று
முளைத்தும் விடுகிறது
மௌனத்தில்.
Full story
- Tuesday, December 28, 2010, 11:29
- இ. அண்ணாமலை, கேள்வி-பதில்
- 0 views
பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுப்பிய கேள்வி:
வட்டார வழக்குகளைத் தாண்டி, தராதரத் தமிழ் (செந்தமிழ்) அமையாவிடின்........ தமிழின் வகைகள் ஈழத் தமிழ், கன்னியாகுமரித் தமிழ், சென்னைத் தமிழ், ஊடகத் தமிழ் எனக் கிளைகளாவதைத் தவிர்க்க முடியாது. தோக்கியோ யப்பான் மொழியே வடக்கே சக்காலின் தொடக்கம் தெற்கே ஒக்கினாவா வரை நீண்ட யப்பான் நாட்டின் செம்மை மொழி.............. ஈழத் தமிழ் வேண்டுமா? தமிழகத் தமிழ் வேண்டுமா என்ற மாற்றுத் தேவையா?...
Full story
- Tuesday, December 28, 2010, 11:03
- கவிதைகள்
- 0 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
உறங்கியும் உறங்காமலும்
என் தாயின் சிறகுகளுக்குள்
நான் புதைந்து கிடந்த
அந்த இரவுகள்..
எந்தையொடு
தேயிலைக் காட்டு மலைகளில்
ஏறி இறங்கி
கடைகளுக்கும்
திரை அரங்குகளுக்கும்
நடந்த அந்தக் குளிர்ப் பொழுதுகள்..
பள்ளிக்குச் சென்று வருகையில்
மூங்கில் காடுகளினிடையே
புத்தகத்தை வைத்துவிட்டு
விளையாடி மகிழ்ந்த
அந்த இளைய காலங்கள்..
பனி சிந்தும்
நிலாப்பொழுதுகளில்
வரிசையான வீடுகளின்
முற்றத்தில்
அம்மாக்களும்.. பாட்டிகளும்..
கதைசொல்லி
அமர்ந்திருக்கையில்
கண்ணாமூச்சு ஆடிய
அந்த நிமிடங்கள்..
விடுமுறை நாட்களில்
தூரத்திலோடும் ஆற்றுநீரை
சுமந்து வருவதும்..
வீட்டுக்கு விறகு
சேர்ப்பதும்..
அந்தி வெய்யிலில்
கோலி, கில்லியில் எங்களை
இணைத்து கொள்வதும்..
அப்பப்பா..
இப்படி பின்னோக்கிய
எல்லாப் பொழுதுகளும்
நினைவுகளாய் முன்வந்து
நெஞ்சை நிரப்புகின்றன..
அறுபதுக்கும் எண்பதுக்கும்
இடையேயான
இனிய பாடல்கள்..!
Full story
- Tuesday, December 28, 2010, 10:41
- பொது
- 0 views
மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன், எழுத்தாளர் திருமதி பாரத தேவிக்கு எழுதிய கடிதங்களை ஒரு நூலாகத் தொகுத்து, திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகிறது. மேலும், மூன்று நூல்களும் வெளியாகின்றன. இதோ அழைப்பிதழ்:
Full story
- Tuesday, December 28, 2010, 10:14
- பத்திகள்
- 0 views
ஸ்ரீஜா வெங்கடேஷ்
நாடகம் போட்டுப் பார் என்று பழைய எழுத்தாளர் மெரீனா ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் நாடகத்தின் மேல் மோஹம் கொண்ட கதாநாயகன், நாடகம் போடுவதற்குப் படும் அல்லல்களை நகைச்சுவையாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருப்பார். அதே போன்று நாங்களும் நாடகம் போட்ட அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது நகைச்சுவையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நாங்கள் முதன்முதலில் நாடகம் போட்டது, எங்களுடைய பத்தாவது வயதில். இங்கே நாங்கள் என்று நான் குறிப்பிடுவது என் தோழியரைச் சேர்த்துத்தான். எங்கள் கிராமத்தில், எங்கள் தெருவில்தான் ...
Full story
- Monday, December 27, 2010, 23:47
- சிறுகதைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
கன்னிப் பருவத்திலே வழக்கமாய் வரும் கனவுகள், கற்பனைகள், எல்லோருக்கும் வருவது போலவே கனகாவுக்கும் வந்தன. வாழ்க்கை சொர்க்கமாகத் தோன்றியது. எதைப் பார்த்தாலும் குறும்பு மின்னியது. அடிக்கடி சிரிப்பும் வந்தது, வாழ்க்கையே சுவையாக மாறியது. நகைச்சுவை உணர்வு தானாக விளைந்தது. எதையுமே ரசிக்க வேண்டும் என்னும் ஆவல் கிளர்ந்தது.
ஆமாம் ஆனால் எல்லாம் இப்படி வறண்டு போகும் என்று எதிர்பார்க்கவில்லை அவள். எல்லா உணர்வுகளும் எல்லோருக்கும் வரும், ஆனால் சிலருக்கு மட்டும் நடக்கும். எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்னும் வாழ்க்கையின் யதார்த்தம் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது. அவளும் ...
Full story
- Monday, December 27, 2010, 12:26
- கவிதைகள்
- 0 views
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உப்பரிகை வாழ்வுக்கே உயர்ந்து விட்டோம்
செப்பரிய செழுமைகள் சேர்த்து விட்டோம்.
தப்பறியாத் தமிழ்மொழியைத் தாயின் பாலை
அப்படியே மறந்துவிட்டோம் ஏணி தன்னை!
நாட்டில் மொழிகாக்க நல்லுயிரை ஈகின்றார்
வீட்டில் தமிழில்லை விறகிட்டு எரித்தோமே
ஊட்டினார் உயர்தமிழை உயிர்க்குள்ளே- உதைத்து
ஓட்டினோம் நம்தாயை நம்நெஞ்சு கல்லாமோ?
இல்லத்துள் வருகவென இனிது அழைக்கத் தமிழ் இனிக்கும்
வெல்லத்தைத் தேனுடன் பிசைந்ததுவே தமிழன்றோ?
பள்ளத்துள் விழலாமோ? பாழ்மாயை மோகத்தில்
வெள்ளத்தில் நாவற்றி அலைவோராய் ஆனோமே!
வளர்விக்கும் உயர்விக்கும் வாழ்விக்கும் எழுச்சிதரும்
தளர்ச்சிக்கே இடமில்லாத் தமிழொன்றே தமிழர்க்கு
அழற்சிக்கு இடம்கொடீர் ஆங்கிலத்தின் பொய்மாயைச்
சுழற்சிக்குள் வீழாதீர் வீழ்ந்துவரும் கோழைகளே!
எணினியில் தமிழ்வந்து ஏற்றமிகு பணிகளையே
பிணியின்றிச் செய்துதந்து பெருவாழ்வு தருநாளில்
கணினியுள் ...
Full story
- Sunday, December 26, 2010, 12:04
- பொது
- 0 views
மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் "நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" என்ற புதினம், 2009ஆம் ஆண்டுக்கான தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது. இதே புதினம், 2007ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்றது, குறிப்பிடத்தக்கது.
இதற்கான பரிசளிப்பு விழா, 01.01.2011 அன்று மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரில் டெசன் சோன் சாலையிலுள்ள சிவீல் சர்விஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பாக, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழவேள் கோ.சாரங்கபாணி ...
Full story
- Saturday, December 25, 2010, 22:49
- திரை, பத்திகள்
- 0 views
அண்ணாகண்ணன்
'மன் மதன் அம்பு' படத்தினை 24.12.2010 அன்று பார்த்தேன். கமல், திரிஷா, மாதவன் என அனுபவம் வாய்ந்த பெரும் நட்சத்திரங்கள், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம், நல்ல ஒளிப்பதிவு.... எனப் பல பலங்கள்; பணத்திற்குப் பஞ்சமில்லாதபடி உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு; இவ்வளவு இருந்தும் கதையில் ஏன் இப்படி சொதப்பினார்கள் என்பது புரியாத புதிர். அதிலும் இந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள், மகா சொதப்பல். துப்பறியும் மன்னார், தொழிலதிபர் மதன கோபால், நடிகை அம்புஜாஸ்ரீ ஆகிய மூவரின் பெயர்ச் சுருக்கமே 'மன் மதன் அம்பு'.
தான் காதலிக்கும் ...
Full story
- Friday, December 24, 2010, 23:46
- பத்திகள்
- 0 views
விசாலம்
ஜான் என்ற பையன் தன் தாயுடன் இருந்தான். அவனுக்குத் தந்தை இல்லை. அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தனர். தினப்படி சாப்பாடுக்கே வழி இல்லாமல் இருந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஜானுக்கு மிகவும் பசி எடுத்தது. தன் தாயிடம் காலைச் சிற்றுண்டி கேட்டான். அவன் அம்மாவுக்கோ, வீட்டில் ஒன்றுமில்லாததால் கொடுக்க முடியவில்லை.
"அம்மா, எனக்கு கேக்கும் ஸ்வீட் பன்னும் தாருங்கள்"
"ஜான், நீ முதலில் சர்ச்சுக்குப் போய் பிரார்த்தனை செய். அப்போது வேண்டியதைக் கேள்"
"அம்மா, அப்படி நான் கேட்டால் ஜீஸஸ் கொடுப்பாரா?"
"நிச்சயம் கொடுப்பார். மனம் ஒன்றிப் பிரார்த்தனை ...
Full story
- Friday, December 24, 2010, 13:08
- பத்திகள்
- 0 views
(நினைவுகளின் சுவட்டில் - பாகம் II - பகுதி 11)
வெங்கட் சாமிநாதன்
உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில் எனக்குச் சந்தோஷமாக இருந்தது. என் தம்பி கிருஷ்ணன் நிலக்கோட்டையில் என் இடத்தை எடுத்துக்கொண்டிருந்தான். கற்பரக்ஷையின் வளர்ப்புத் தாயாரைப் பார்த்தது, ஷண்முகத்தை மீண்டும் சந்தித்தது எல்லாம் மனத்துக்கு நிறைவாக இருந்தது. இதை எழுதும்போது நினைத்துக்கொள்கிறேன், ஷண்முகத்தை அதற்குப் ...
Full story