- Saturday, December 31, 2011, 23:59
- பொது
- 0 views
செழியன்
பனி பொழியும்
மார்கழியில் மலரும் புத்தாண்டே !நீ வருக !வருக ! வருக !வளமும் நலமும் தருக !தருக !தருக!மனம் உருக வேண்டுகிறோம் .நீ ...எங்களுடன் உறவு கொள்வது என்னவோ 12 திங்கள் அந்த 12 மாத உறவு காலத்தில் விதைகள் முளைக்கிறது .முளைத்த செடிகள் அரும்பு வைக்கிறது .அரும்பு மொட்டாகிறது .மொட்டு மலராக விரிகிறது .மணம் வீசுகிறது ....
Full story
- Saturday, December 31, 2011, 23:59
- home-lit, இலக்கியம், கவிதைகள்
- 0 views
சக்தி சக்திதாசன்
பறந்தோடியது ஒரு வருடம்
பாய்ந்து வந்தது புது வருடம்புதுப் புது நம்பிக்கைகளைபொலிவிக்கும் புத்தாண்டு
கடந்து செல்லும் வருடத்தினுள்புதைந்து போன கனவுகள்புதிதாய் மீண்டும் அரும்பாகிபுதுமலர்களாய் புத்தாண்டில்
மாற்றம் காண்பது இயற்கை நியதிமாற்றி வைப்பது இறையின் கணக்குமனிதன் மனதில் கொள்வது ஒன்றேமங்கா விளக்காய் நம்பிக்கையை
கேட்டது கிடைக்கவில்லை என்றுகொடுத்தது திரும்பவில்லை என்றுஎடுத்தது நிலைக்கவில்லை என்றுஎத்தனையோ ஏமாற்றங்கள் இருந்தாலும்
அடுத்தொரு வருடம் பிறந்திடும் போதுஅதற்குள் கிடைத்திடும் மகிழ்ச்சிகள் எனும்அசைக்க ...
Full story
- Saturday, December 31, 2011, 23:58
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
இன்னம்பூரான்01 01 2012
1.06: இன்று ஹோமர் என்ற கிரேக்கப் படைப்பாளரின் ‘ஒடிஸி’ என்ற காப்பியத்தை மறுபடியும் படிக்க நேரிட்டது. அவர் எழுதிய ‘ஒடிஸி’ &‘இலியட்’ என்ற காப்பியங்கள், நமது ராமாயணம், மகாபாரதங்கள் போன்ற இதிகாசங்கள்.
1.07: இதனுடைய காலகட்டம் கிருஸ்துவுக்கு முந்தய எட்டாவது நூற்றாண்டு என்பது புலவர்களின் ஏகோபித்த அபிப்ராயம். தொன்மை இலக்கியம்.
1.08: அதனுள் மிளிரும் இலக்கியச் சுவையைப் பற்றி சொல்லி மாளாது. பெருங்கதை; அபாரமான பின்னல்கள்; வரலாறும் கற்பனையும் ...
Full story
- Saturday, December 31, 2011, 23:57
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
சென்ற ஆண்டில் சிறப்புடனே
சேர்த்த நல்ல அனுபவங்கள்என்றும் இனிதாய்த் தொடர்ந்திடவும், ஏற்றம் வாழ்வில் பெற்றேவுயர்குன்றின் மேலே தீபமதாய்க் குறையாப் புகழைப் பெற்றிடவும்,வென்றிடும் வல்லமை நிலைத்திடவும், வாழ்த்துவேன் புதிய ஆண்டினிலே...!
அன்புடன், -செண்பக ஜெகதீசன்...
http://www.123greetings.com/tags/success.html Full story
- Saturday, December 31, 2011, 6:24
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
எல்லே! இளங்கிளியே! இன்னமும் உறங்குதியோ!
அம்மே! அனைவரும் நின்இல்லில் நிற்கின்றோம்!முள்ளில்லா சுள்ளி எரிமடுத்து எப்போதும்முகிலோன்கண் இணைய முயன்ற செய்தவம்முற்றுப்பெற மற்றும் அற்ற மங்கையாய்மூடுதிரை விலக்காய்! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.eprarthana.com/html/azhvarimage.asp?elid=eplp1azh&igname=Andal%20-%20Srivilliputhur&tdid=IG_TTL Full story
- Saturday, December 31, 2011, 6:14
- home-lit, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சக்தி சக்திதாசன்
என்ன இது ஒரு புரியாத புதிர் தலைப்பு ? எனப் புருவங்கள் உயர்வது தெரிகிறது. வருட இறுதியிலே இங்கிலாந்திலிருக்கும் ஒரு புலம் பெயர் தமிழனின் பார்வையில் அவ்வருட நடப்புக்களை அசை போட்டுப் பார்ப்பது என் வழக்கம். அந்த அசைபோடுதல் தான் இம்முறை இவ்வடிவத்திலான தலைப்பை எடுத்துள்ளது.
காரணம் என்ன என்கிறீர்களா?
2011 சிக்கலான பல கேள்விகளை அரசியல் தலைவர்கள் மத்தியில் குறிப்பாக மேலைநாட்டு அரசியல் தலைவர்கள் மத்தியில் தூக்கிப் போட்டுள்ளது.
இங்கிலாந்தைப் பொறுத்தளவில் இவ்வாண்டின் ஆரம்பமே சிக்கல்களுடன் தான் ஆரம்பமாகியது. ஆனால் ஆண்டின் ...
Full story
- Friday, December 30, 2011, 20:02
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
புமா
ஐந்துவிழுக்காடு
தவறுக்குஅவசரநிலை பிரகடனம்வன்கொடுமை வார்த்தைச்சூட்டில்வாடும் குழந்தை.
பொருளாதார அழுத்தத்தில்புதையும் வீடு.சதமே நிதர்சனமெனக்கருதும் கல்விமுறைப்பிழைகள்.
மானுடத்தின் யதார்த்தங்கள்பிள்ளைகள் அறிவதில்லை.அறிந்திருந்தால் கேள்விவரும்“ஏற்கும் பணிகளில்ஐந்துசதவிகிதம் கூடதவறிழைக்காதவர் உங்களில் யாரென்று?”
படத்திற்கு நன்றி :
http://sundaytimes.lk/070909/Plus/plus0001.html Full story
- Friday, December 30, 2011, 16:58
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பாகம்பிரியாள்
பந்தாய் முடிந்த கொண்டையை, பாங்காய்க் கட்டி வைக்க, நீ பயன்படுத்துவது ஒற்றைக் கற்றையான கூந்தல் மட்டுமே ! அதிலேயே அது ஒய்யாரமாய் நிற்கிறது. இதைப் போன்றே நம் காதல் பந்தை , இலகுவாய்க் கட்டி வைக்க நீ பயன்படுத்துவது உறுதியான ஓரிழை அன்பு மட்டுமே ! நீ தைரியமாகத்தான் இருக்கிறாய் , நான் தான் பயம் உந்த அடிக்கடி அதைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!
படத்திற்கு நன்றி:
http://digitaljournal.com/article/271661 Full story
- Friday, December 30, 2011, 7:40
- இ. அண்ணாமலை, இலக்கியம், கேள்வி-பதில்
- 0 views
சிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:
ஒன்று என்ற சொல்லைக் கொச்சை வழக்கில் எழுதும்போது, ஒன்னு / ஒண்ணு என இரு வகையாக எழுதுகிறார்கள். இது போன்றே மூன்று என்பதை மூனு / மூணு என்றும் தோன்றுகிறது என்பதை தோனுது / தோணுது என்றும் எழுதுகிறார்கள். இவற்றில் எது சரி?
–அண்ணாகண்ணன்
பதில்: பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்னும்போது அது தரமற்றது என்னும் பொருள் தொனிக்கிறது. கொச்சை வழக்கு ...
Full story
- Friday, December 30, 2011, 6:46
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
செங்கண் எழவே திங்கள் உறங்கியது
செங்கழுநீர்வாய் நெகிழ ஆம்பல்வாய் கூம்பியதுவான் வெளுக்குமுன் தான் எழுந்துதண்பூக் கொய்து மலர்க்கணைத் தொடுத்துகாமனையும் சாமனையும் துதித்துப் போற்றியகண்ணனின் காதலியே! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி :
http://www.srivilliputtur.com/images/a6.jpg Full story
- Thursday, December 29, 2011, 16:11
- Featured, இலக்கியம், கவிதைகள்
- 0 views
யாழினி முனுசாமி
இப்பொழுதெல்லாம் அவள்தற்கொலை குறித்துப் பேசுவதில்லைமுன்பெல்லாம்நேரிலோதொலைபேசியிலோ பேசினால்தற்கொலையில்தான் முடிப்பாள்.தற்கொலைதான் துயரங்களிலிருந்துதன்னைப் பூரணமாக விடுவிக்குமெனநம்பினாள்.முன்னெப்பொழுதும் காணாத சிரிப்புகள்அவள் முகத்தை அலங்கரிக்கின்றன இப்போது.உண்மையில்இப்போதுதான் இந்த உலகம்அவள் காலின்கீழ் இருப்பதை உணர்கிறாள்.இப்பொழுதுதான் அவள்தன் இருப்பைமுழுமையாய் உணர்கிறாள்.தளைகளை அறுத்தெறிந்த மகிழ்ச்சி அவள் நடையில்.சிறைச்சுவரைத் தகர்த்தெறிந்த பெருமிதம் அவள் பேச்சில்.ஊர் பாட்டுக்குப் பேசிக்கொண்டு திரிகிறதுஅவள் பாட்டுக்கு ...
Full story
- Thursday, December 29, 2011, 14:00
- செய்திகள்
- 0 views
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி விஷம் குடித்து உயிர் நீத்த தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த இராமமூர்த்திக்கு வீரவணக்கம் செலுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
”முல்லைப் பெரியாறு அணையை நிச்சயம் காப்போம், உயிர் துறக்க வேண்டாம்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசின் அடாவடித்தனமான அரசியலால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் ...
Full story
- Thursday, December 29, 2011, 13:54
- செய்திகள்
- 0 views
ஸ்ரீ சுவாதி கிரியேஷன்ஸ் என்னும் புதிய நிறுவனம் உன்னதமானவன் என்ற திரைப்படத்தை தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் பிரம்மாண்ட முறையில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
கதாநாயகன் பிரபா, வர்ஷினி, புதுமுகம் ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு, சிங்கம் புலி, மனோபாலா, ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மதுரையை மையமாக வைத்து எடுத்த வெற்றிப்படங்களின் வரிசையில் இதுவும் வெற்றியடையும். காதலின் வேறு ஒரு பரிமாணத்தை சொல்லும் இது ஒரு புது கதைக்களம் மதுரை, திண்டுக்கல் சுற்றியுள்ள அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. காமெடிக்கு கஞ்சா கருப்பும், சிங்கம்புலியும், போட்டி போட்டு ...
Full story
- Thursday, December 29, 2011, 13:29
- செய்திகள்
- 0 views
திருநின்றவூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா சேவை மையத்தில் 27.12.2011 அன்று காலை 11.00 மணியளவில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின விழாக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர்.ஜெகன் மூர்த்தி, (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரக்கோணம்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மனிதனின் வேண்டுதல்கள் பலவாயினும் வேறுபாடுகள் இறைவனிடம் இல்லை. இந்த எண்ணம் இறைவனிடம் இருப்பதால் தான் இந்த சிறிய கிராமத்தில் சேவாலயாவை திரு.முரளிதரன் மூலமாக இறைவன் நிறைவேற்றியிருக்கிறார். மேலும் இந்த குழந்தைகளின் சிரிப்பினிலே நான் இறைவனைக் காண்கிறேன். ஏழைகளாய் பிறப்பது தவறல்ல. அவ்வாறு ...
Full story
- Thursday, December 29, 2011, 8:11
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தி.சுபாஷிணி
புள்ளின்வாய் கீண்டுப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தான் கீர்த்திமை பாடினாய்!புள்ளும் சிலம்பினகாண்! போதரிக் கண்ணினாய்!பிள்ளைகள் அன்றோ! தள்ளிட மாட்டாய்!பள்ளிக் கிடத்தியோ! பெண் பாவாய்!கள்ளம் தவிர்த்து எழுவாய்நீ நாச்சியாரே!
படட்திற்கு நன்றி :
http://indiatempletour.blogspot.com/2011/12/markazhi-thingalmarkazhi-month-begins_17.html Full story