- Wednesday, February 29, 2012, 11:48
- home-lit, இலக்கியம், பத்திகள்
- 0 views
அவ்வை மகள்
பரிதாப நிலையில் பாயின் கேர்கள்
பாயின் கேர் எனும் கணித மேதை யார்? அவரது சாதனைகள் யாவை அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் யாவை என்பது அன்று- புத்தொளிப் பயிற்சிக்கு வந்திருந்த நாற்பது ஆசிரியர்களில் ஒருவருக்குக் கூடத் தெரியவில்லை!
ஒருவர் மட்டும் பாயின் கேர் எனும் பெயரை எங்கோ கேள்விப் பட்டிருக்கிறேன் என்றார்.
இது ஒரு சாம்பிள் அவ்வளவே! பாயின் கேர் எனும் ...
Full story
- Wednesday, February 29, 2012, 11:05
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
தமிழ்த்தேனீ
ஒரு உயிரை விதைத்ததால் ப்ரபஞ்சம் வளர்ந்தது
வாழைப் பயிரை நட்டதால் அதன்கீழ்
வாழையடி வாழையாய்க் குருத்து வளர்ந்தது.
ஒரு மரம் நட்டால் ஓங்கிப் பரந்து தோப்பாய் ஆகுது
உயர்ந்தே நிமிர்ந்து ஓங்கி வளர்ந்து குலைதள்ளி
இயற்கையாய்க் காயும் கனியும் காய்த்துப் பழுக்குது
ஒரு விதை நட்டதால் பூமியும் பிளந்தது
பூகம்பம் வெடித்தது விதையுண்ட நீரினால்
விருட்சமாய் வளர முளைவிட்டு வளர்ந்து
புதையுண்ட வேர்கள் உள்ளே நுழைந்தது.
மண்ணில் ஊன்றித் துளைத்தது, ஆழ்கடல் நீர்தேடி
அலைந்து திரிந்தது, ஆழமாய் வேரோடித் துளைந்து
வளர்ந்து பாதாளப் பயணம் போனது.
விதை ஒன்றை நட்டால் விருட்சமாய் ஆகுது,
சதைகொண்ட தாவரம் மண்ணில் வளருது
இது ...
Full story
- Wednesday, February 29, 2012, 6:39
- Featured, இலக்கியம், பத்திகள்
- 0 views
திவாகர் - நாடகம் (5)
சென்றவாரம் இங்கு (விசாகப்பட்டினத்தில்) ஒரு திருமண வரவேற்பு விழா.. எங்கள் நாடகங்களில் நாயகியாய் நடித்திருந்த ஸ்ரீவித்யாவுக்குதான் திருமணம். சென்று வாழ்த்தி விட்டு வந்தேன். (இவர்தான் என் ப்ளேய்ஸ்க்கெல்லாம் டைரக்டர், ’ஹி டாட் மீ டேமில் (he taught me tamil)’ என்று தன் கணவரிடம் என்னை அறிமுகப்படுத்திய கதையைப் பிறகு பார்ப்போம்).
பொதுவாக விஜயவாடாவில் நாடகம் நடிக்க பெண் கதாபாத்திரங்களுக்காக எத்தனை சிரமப்பட்டோம் என்பதை ஏற்கனவே எழுதி இருந்தேன் இல்லையா.. ஆனால் விசாகப்பட்டினத்தில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட நாடகங்கள் போட்டாயிற்று. சில நாடகங்களில் ...
Full story
- Tuesday, February 28, 2012, 13:33
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
சாந்தி மாரியப்பன்
ஒரு மனிதனின் செல்வச் செழிப்பைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பவை அவனது தேவைகளும் விருப்பங்களும் மட்டுமே.
பொறுமை, நம்பிக்கை, பொறுப்புணர்வு இவைகளை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்களா?.... ஒரு செடியை வளர்க்க ஆரம்பியுங்கள். பொறுப்பில்லாமல் ஒரு நாள் தண்ணீர் ஊற்ற மறந்தால் கூட, வாடி வதங்கி இது பிழைக்குமா இல்லையா என்று நம் பொறுமையையும், எப்படியும் பிழைத்து விடும் என்ற நமது நம்பிக்கையையும் ரொம்பவே சோதித்து விடும்.
நாம் எப்போதும் வளமான ...
Full story
- Tuesday, February 28, 2012, 12:41
- Featured, கட்டுரைகள்
- 0 views
அவ்வை மகள்
இன்றைய காலகட்டத்தில், மிக அதிகமான வருவாயுள்ள ஒரு தொழில் என்றால் அது கட்டிடத் தொழிலாளர் வேலைதான். இவர்கள் கேட்கும் கூலியைக் கேட்டாலே பயம் வந்து விடும் பலருக்கு. பல சமயங்களில் பேசாமல் கட்டிட வேலைக்குப் போய் விடலாமா என்று கூட நம்மை நினைக்க வைக்கும் அளவுக்கு இவர்கள் நாளொன்றுக்குச் சம்பாதிக்கிறார்கள். சரி இதன் மறு பக்கத்தைப் பார்ப்போமா? குடும்பமாகக் களத்தில் இறங்கி வேலை செய்து கை நிறையக் கூலி வாங்கினாலும் ஒன்றும் ...
Full story
- Tuesday, February 28, 2012, 11:58
- செய்திகள்
- 0 views
எண்டெர்டெயின்மெண்ட் அன்லிமிட்டட் சஞ்சய் வழங்கும் மறுமுகம்
எழுத்து - இயக்கம் கமல்
‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார்.
டேனியல் பாலாஜி- அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரன்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
மூன்று கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த மறுமுகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் கொடைக்கானலிலும் நடந்து ...
Full story
- Tuesday, February 28, 2012, 11:45
- Featured, கட்டுரைகள்
- 0 views
சு.கோதண்டராமன்
அண்மையில் ஒரு மாணவன் தன் இந்தி ஆசிரியையைக் குத்திக் கொன்றான் என்ற துயரமான செய்தி என் வாழ்க்கையில் 1966ஆம் வருடம் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவூட்டியது.
கும்பகோணத்தில் உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு வழக்கமான வேலையோடு பத்தாம் வகுப்பில் (அப்போதைய ஐந்தாவது பாரம்) இந்தி நடத்தும் வேலையும் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்திய கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ...
Full story
- Tuesday, February 28, 2012, 5:00
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
பாகம்பிரியாள்
தொலைவில் அலுவலகம், எல்லா நாளும்,ஓடுதலும், துரத்துதலுமாய் முடியும்.
சுவரெங்கும், நாம் போட்ட யுத்தக் கணக்கும்,பெற்ற முத்தக் கணக்கும் சிதறிக் கிடக்கும்.
அடுக்களைக்குள் உதவி செய்கிறேன் என்கிற சாக்கில் நம் காதலை நான் புதுப்பித்துக் கொள்கிறேன்.
அலுவலகக் கணினியைச் சீர் செய்வதாகச் சொல்லி,அகன்ற விழிகளால், எனை நீ சிறை பிடிப்பாய்.
ஓராயிரம் நாட்களுக்கு நம்மை அலுவலகத்திற்கு அனுப்பிய பெருமை கடிகார முட்களுக்குத்தான்!
செல்லச் சண்டை எட்டிப்பார்க்கும் நாளெல்லாம்,சிவப்பு ரோஜாவும் வந்து சேரும், சமாதானத்திற்காக.
அருமை மனைவியாய் நீ அணிந்து செல்லும் ...
Full story
- Monday, February 27, 2012, 16:02
- இலக்கியம், கவிதைகள்
- 0 views
ஜெ.ராஜ்குமார்
தத்தித் தவழும் காலங்களில்
நடை பயிலக் கற்றுக் கொடுத்தாள் அம்மா!
என்
கண்களினின்றும் கண்ணீர் வந்தால் - எனை
மடியில் போட்டுக்
கண்ணீர் துடைப்பாள்!
துள்ளிக் குதித்த காலங்களில்
பள்ளி செல்லும் -
பக்குவம் கற்றுக் கொடுத்தாள்!
சொல்லில் சிறந்தவனாய் -
வெல்லும் தனித்திறமை
நாளும் கற்பித்தாள் -
நலமுடன் நான் வாழவே -
நல்ல உளமுடன் எனை அரவணைத்தாள்!
தெளிவுடன் நான் நடக்கும் - என் பாதை
தெரிந்தவர் பின்பற்றவே - எனை
உயிருடன் உருவாக்கினாள் - எனை
உயரத்தில் வைத்துப் பார்த்தாள்!
சிகரத்தைத் தொட்டு விடும் தைரியம் எனக்கிருக்கு!
விந்தை பல புரியும் சக்தியுமிருக்கு!
தந்தையும் தாயும் பெற்றெடுத்த செல்வன் நான்
சந்தனத் தேரிலே ஊர்வலம் ...
Full story
- Monday, February 27, 2012, 15:23
- செய்திகள்
- 0 views
ஜான் (பி.ஆர்.ஓ)
அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடட் S ஸ்ரீதரன் தயாரிக்க பெருசு, விலை. சுட்டபழம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கணேசன் காமராஜ் 4 வது படமாக இயக்கியிருக்கும் படம் யாருக்கு தெரியும்
உலகளவில் எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஹீரோ-ஹீரோயின் – வில்லன் இப்படி ...
Full story
- Monday, February 27, 2012, 15:14
- Featured, இலக்கியம், சிறுகதைகள்
- 0 views
வே.முத்துக்குமார்
சமாது கோவிலுக்குப் பூசை செய்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் சாமிக்கண்ணு ஓதுவார். கோவில் வாசலில் இருந்த கருவேலமரத்தில் நெடுநாட்களாகச் சினை பிடிக்காமல் இருந்த தனது ஆட்டைக் கட்டிப் போட்டுக் கொண்டிருந்தான் சீனி. சாமிக்கண்ணு ஓதுவாரைப் பார்த்தவுடன் வடக்குப் பக்கமிருக்கிற கருவேல மரக்காட்டுப் பாதை வழியாக வாய்க்காலை நோக்கி வேகமாக நடந்து சென்று விட்டான். தன்னைப் பார்த்தவுடன்தான் சீனி ஒளிந்து செல்கிறான் என்பது அவருக்குப் புரிந்தது. இன்று மட்டும் இப்படியில்லை. கடந்த ஒரு ...
Full story
- Monday, February 27, 2012, 14:52
- நறுக்..துணுக்...
- 0 views
பவள சங்கரி
நறுக்.. துணுக்.... (16)
நம் இந்திய ஆன்மீக வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் நம் வாழ்வியல் சம்பந்தப்பட்டவைகளாகவே இருப்பது கண்கூடு. அந்த வகையில் சிவ பெருமானின் அர்ச்சனைக்கு உகந்ததொரு பத்திரம் வில்வம். அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த வில்வ இலைகளை சில காலங்களில் பறிக்கக் கூடாது என்கின்றனர் ஆன்றோர். அக்காலங்களாவன:
திங்கட்கிழமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஏகாதசி, அம்மாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு ஆகிய காலங்கள். இக்காலங்களைத் ...
Full story
- Monday, February 27, 2012, 5:58
- வாசகர் கடிதம்
- 0 views
விசாலம்
கடந்த வாரம் நாங்கள் கோயம்புத்தூருக்கு ஒரு கோயிலைப் பார்க்க ஒரு நாள் மட்டும் போயிருந்தோம் ,காலையில் பிளேனில் ஏறி ஏர்போர்ட்டிலேயே ஒரு கார் அமர்த்திக் கொண்டோம் அந்த ஓட்டுனர் மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் இருந்தார் ,சிரித்த முகத்துடன் பேசினார் நெற்றியில் பளிச்சென்று திருநீரும் நடுவில் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார் , நிச்சயமாக ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருப்பார் என உணர முடிந்தது .நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
"எங்களுக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும்.அங்கும் எஙகளை அழைத்துப் போக முடியுமா "
இதைக்கேட்டு அந்த ஓட்டுனர் ...
Full story