சாமிகளை நம்பினால்..?
- Wednesday, October 6, 2010, 12:00
- கவிதைகள்
- 1 views
- Add a comment
கவியோகி வேதம்
என்றன் நெஞ்சில் அழுக்கி லாததால்
யாரின் காலிலும் விழுவதில்லை!-தினம்
என்றன் கால்(காற்று)-ஏறி தியானம் உணர்வதால்
என்னைச் சாத்தான் பிடிப்பதில்லை!
எதுதான் ஆநந்தம் என்றே உணர்ந்தால்
யாரையும் நம்பிப் பிழைக்கணுமோ?-அட!
புதியவெண் மேகமும் தினமும் கறுத்தால்
பூமியில் வெப்பமும் தங்கிடுமோ?
பேசிப் பேசியே ஆச்ரமம் வளர்ப்பதா
பெரீய சாதனைகள்?-மகான்கள்
நாசி அதிர்விலே உலகே அதிர்ந்த(து!)-அது
நடராச முத்திரைகள்!
பூமியில் அவரவர் வினைகளே பாவ
புண்ணியம் நிர்ணயிக்கும்!-இன்றைச்
சாமிகளை நம்பினால் நமது கௌரவம்
சந்தி சிரிக்கவைக்கும்!
காவி உடைகண்டு ‘கடவுளே!” என்பதால்
கர்வம் குறைவதில்லை!-அட அட!
காவி உடையிலே கடவுள் யாருமே
கம்பி எண்ணவில்லை!
