வீரு – 219
- Thursday, December 8, 2011, 20:46
- home-lit, கவிதைகள்
- 0 views
- 3 comments
அண்ணாகண்ணன்
மிரட்டல் அடியிது மின்னல் ஒளியிது
இரட்டைச் சதமிது இறக்கை விரியுது
விரட்டி அடித்தது வீ(ரு)ரம் விளைத்தது
அரியது சேவாக் அகில சாதனை!
நாலா புறத்தையும் நாடிய பந்து
மேலாய், கீழாய் மீட்டிய மட்டை
கோலாகலமாய்க் கொளுத்திய சேவாக்
காலா காலம் உன்பெயர் சொல்லும்!
துணிகர வேட்டை! துடியென வேட்கை!
தணியா வேகம்! தனிப்பெரு மோகம்!
அணியிதன் அணியே! முன்கள மணியே!
பணிவளர் சேவாக், பட்டையைக் கிளப்பு!
படத்திற்கு நன்றி : http://connect.in.com/virender-sehwag/photos-52-21292025.html

ஆடுகளத்தில் சேவாக்அசத்திய சாதனையைஅழகுதமிழில் அசத்தியஅண்ணாகண்ணனின் படைப்புஅருமை அருமை…! வாழ்த்துக்களுடன், -செண்பக ஜெகதீசன்…
வீறு கொண்டு எழுந்த வீருவுக்கு விறுவிறுப்பான கவிதை!
சேவாக்கின் ஆட்டத்தைப் போலவே வேகமான கவிதை நடை. மிக அருமை சார்.