வீடென்பது

சாந்தி மாரியப்பன்

அவனும் அவளுமான சிற்றோடைகள்

கை கோர்த்து நடந்த

பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்

சங்கமமாயின வீடெனும் கடலில்..

வீடெனும் சொல்

திறந்து விட்டு விட்ட

நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த

ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,

கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது

கம்பிகளினூடே வெயிலில்

பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்

வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..

பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே

ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்

கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன

இப்போதாவது வந்தாயாவென..

தனக்கென்றதோர் கூடாயும்

அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,

அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்

உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்

வீசப்பட்ட பின்னர்

அன்னியப் பட்டும் நிற்கிறது

வீடென்பது சிலருக்கு.

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

7 Comments on “வீடென்பது”

  • இளங்கோவன் wrote on 15 December, 2011, 14:26

    கவிதையைப் படித்த தருணத்தில், என்றோ வாழ்ந்த எங்கள் கிராமத்து வீடும், மழைக்காலத்தில், கூரையில் இருந்து சொட்டிய மழை நீரும் மனதில் ஒரு நொடி வந்து சென்றது.. வாழ்த்துக்கள் !

  • செண்பக ஜெகதீசன்
    -Shenbaga Jagatheesan... wrote on 16 December, 2011, 22:40

    அன்னியோன்யமாக இருந்த வீடு
    அடுத்த தலைமுறையில்
    அன்னியப்பட்டு நிற்பதை
    அழகாய்ச் சொன்ன
    சகலகலா சாந்திமாரியப்பனுக்கு
    வாழ்த்துக்கள்…!
                       -செண்பக ஜெகதீசன்…

  • சாந்தி மாரியப்பன்
    சாந்தி மாரியப்பன் wrote on 18 December, 2011, 9:42

    @ இளங்கோவன்,
    @செண்பகப் பாண்டியன்,..

    கருத்துரையிட்டதற்கு மிக்க நன்றி.

  • செண்பக ஜெகதீசன்
    -Shenbaga Jagatheesan... wrote on 18 December, 2011, 22:08

    பாராட்டிய என்னைப்
    பாண்டியனாய் முடிசூட்டியமைக்கு
    நன்றி…! 
                 -செண்பக ஜெகதீசன்…

  • DEVA wrote on 23 December, 2011, 21:37

                                       அழகான வார்த்தைகளின் ,வர்ணஜாலம் ,                                   ஆண்டவன் ,அற்புத,ஓவியம் ,இயற்கயின் ,                                   வார்த்தையில் ,படம்பிடித்த அழகு ,                                     அழகை வரவேற்பவன் என்பதால்                                       சும்மா சொல்ல கூடாது ,   உங்கள் ,கவிதையும்,அழகுதான் ,,                                                                                                                                   *****தேவா****   
                        

  • editor2
    editor2 wrote on 25 December, 2011, 0:28

    @செண்பக ஜெகதீசன்
    :-)

    @ தேவா,
    தொடர்ந்து அளித்து வரும் உற்சாகமூட்டும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :-)

  • புவனா ஞானசெல்வம் wrote on 4 February, 2012, 20:23

    ஞாபகம் வருதே,  ஞாபகம் வருதே…. ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பில்….
    ஓளிந்து நிற்கும் ஞாபகங்கள் …வாழ்த்துக்கள்…

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 8 = 13


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.