நல்ல காட்சிதான்
- Wednesday, December 21, 2011, 12:26
- இலக்கியம், கவிதைகள்
- 1 views
செண்பக ஜெகதீசன்
நீந்திக் கரை சேர்ந்தமைக்கு
நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது
நிலா..
முப்பது நாள் முயற்சி
முழுமை பெற்று விட்டதால்
முகத்தில் பூரிப்பு…
அழகைப் பார்த்தாலே
அக்கம் பக்கத்தில்
ஆரவாரம்தானே-
மேக உரசல்கள்,
மின்னும்
நட்சத்திர பல்லிளிப்புகள்..
நடக்கட்டும்-
நல்ல காட்சிதான் நமக்கு…!
படத்திற்கு நன்றி: http://www.123rf.com/photo_2286955_full-moon-among-stars.html
செண்பக ஜெகதீசன்
எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.
இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…
வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…
தொடர்புக்கு: 9443980220.
Write a Comment [மறுமொழி இடவும்]
கவிஞருக்கு நல்ல காட்சி! படிப்பவருக்கு நல்ல கவிதை. கவிதை உலகில் நிலா எப்போதும் அட்சய பாத்திரம்தான்!