கனவு

பிரசாத் வேணுகோபால்


உறங்கும் உடலில்
உறங்கா நினைவுகள்
அமைதியாக ஆக்கிரமித்து
அழகான கதைகள் சொல்லி
அழைத்துச் செல்கிறதோர்
அதிசய உலகத்திற்கு…
கதை சொல்லும் தன்னையே
கதாநாயகனாக்கி.!

 

படத்திற்கு நன்றி

 

பிரசாத் வேணுகோபால்

பிரசாத் வேணுகோபால்

Share

6 Comments on “கனவு”

  • வில்லன் wrote on 19 June, 2011, 19:58

    பிரசாத் நீ உன் திறமையை வேஸ்ட் பண்றியோனு எனக்கு சந்தேகம். பின்நவீனமாக எழுத வேண்டும் என சொல்ல வரலை. கொஞ்சம் ஏற்கனவே சொல்லப்பட்ட விசயங்களை கடந்து வர வேண்டும் என நினைக்கிறேன்,

  • (IBNU HAMDUN)இப்னு ஹம்துன் wrote on 19 June, 2011, 20:42

    பிரசாத், வாழ்த்துகள்.

    சுவர்விடுத்த சித்திரம் சுற்றி அலைய
    தவமுயற்சி செய்தாற் கனவு.

    (அ)

    தேங்கிய உள்நினைவு தெம்மாங்குப் பாடியே
    தூங்கும் தருணம் விழிப்பு
    – – இப்னு ஹம்துன்

  • தணிகை wrote on 20 June, 2011, 2:52

    லைக் மச்சி..& பெஸ்ட் விஸ்ஷஸ் பார் யூ.. பட் நீ இன்னும் பெரிய கவிஞனா வரணும்னு ஆசைப்படறேன்

  • அச்சு wrote on 20 June, 2011, 13:27

    +1

    /*
    தணிகை
    June 20, 2011 at 10:25 am

    லைக் மச்சி..& பெஸ்ட் விஸ்ஷஸ் பார் யூ.. பட் நீ இன்னும் பெரிய கவிஞனா வரணும்னு ஆசைப்படறேன்
    */

  • prasath venugopal wrote on 20 June, 2011, 15:09

    நன்றி வில்லன், முயற்சி செய்கிறேன்…

    நல்ல வெண்பாக்கள் இப்னு ஐயா, நன்றி…

    நன்றி தணி மச்சி, உன் மனசுக்குள்ள இதை எழுதும் போது உனக்கே சிரிப்பு வரலையாடா… இலை என் லெவல் தெரிஞ்சும் இன்னும் அதிகம் எதிர்பார்க்குறியே…

    நன்றி அச்சு சார்…

  • ராஜசுப்ரமணியன் S wrote on 20 June, 2011, 18:54

    அழகான கவிதை.இளமையில் எல்லாக் கனவுகளும் இனிமையானவை. ப்டமும் மிகப்பொருத்தம்.

Write a Comment [மறுமொழி இடவும்]


1 + = 8


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.