மழலை நிலா..

சாந்தி மாரியப்பன்.

அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன

பௌர்ணமிச்சிதறல்கள்..

ஜன்னலில் பூத்த

மழலையின் மிழற்றல்களில்..

 

சோறூட்டவென்று

துணைக்கழைக்கப்பட்ட நிலா…

இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை,

தானே ஒப்பு நோக்கி

வெட்கித் தலைகுனிகிறது..

 

சாட்சிக்கழைக்கப்பட்ட

நட்சத்திரங்களோ,.. சிதறியோடி

மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,

ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..

 

தீர்ப்பு சொல்லவந்து

தோற்றுச்சரணடைகின்றன

இசைக்கருவிகள்,

தென்றலெனத் தழுவும்,….

‘அம்மா’ என்ற மழலைச்சொல்லின் முன்…

 

 

 

 

 

படத்திற்கு நன்றி.

 

 

 

 

 

 

 

 

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

3 Comments on “மழலை நிலா..”

  • கேப்டன் கணேஷ்
    Capt Ganesh wrote on 27 August, 2011, 22:57

    //சோறூட்டவென்று
    துணைக்கழைக்கப்பட்ட நிலா…
    இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை,
    தானே ஒப்பு நோக்கி
    வெட்கித் தலைகுனிகிறது..//

    வானத்து நிலா தேய்ந்து பின் வளரும்,
    வளர்ந்து பின் தேயும்.
    பிள்ளை நிலாவிற்கு வளர மட்டுமே தெரியும்!

    அருமையான கவிதை!

    வருடிச் செல்கிறது மனதை!

    தொடருங்கள்…….

  • shreeram wrote on 28 August, 2011, 0:31

    arumaiyana vaarthai jaalangal..manadhai thotta vaira varigal! :)

  • சாந்தி மாரியப்பன்
    சாந்தி மாரியப்பன் wrote on 29 August, 2011, 17:25

    கருத்துரையிட்டமைக்கு மிக்க நன்றி
    கேப்டன் கணேஷ்,
    ஸ்ரீராம்.

Write a Comment [மறுமொழி இடவும்]


9 × 1 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.