சாந்தி மாரியப்பன்

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார். திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

தூரிகை சின்னராஜ்

என் ஆசிரியர் பணி அனுபவங்களை இன்று பத்திரிகை மூலம் பகிர்வதற்குக் குழந்தைகளே காரணம். அவர்களின் கனவுகளை வண்ணத் தூரிகைகளால் வரைந்து சுருக்கி விட முடியாது. வானம் என்னும் திரையில் தோன்றும் குழந்தைகளின் கற்பனைகள் பால் வெளி நோக்கியும்  பயணிக்கும் வல்லமை படைத்தவை. சமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நாம். வண்ணம், வடிவம், எண்ணம், எழுத்து எல்லாமே என்… Continue reading

சாந்தி மாரியப்பன்

ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தின் சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலகக் குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலிலிருந்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். உலகம்… Continue reading

ராஜி வெங்கட்

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும்  உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின்  மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.

1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு… Continue reading

தி.சின்னராஜ்


அம்மா என்றால் அன்பு. அன்னை வழியில் அசத்தும் சுமதிகாசி அவர்கள் சேலத்தில் ஒரு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைக்குத் தாயாக இருந்த இவர், ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை தத்து எடுக்கலாமே என்று தன் கணவரிடம் யோசனை கூறவே அவர் ஆரம்பத்தில் மறுத்தார். இருப்பினும் தன் ஆர்வத்தைத் தொடர்ந்து அவரிடம் கூறவே சம்மதம்… Continue reading

தி. சுபாஷிணி

 

பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும் இந்த உலகும் மேலும் அழகுறும். (வண்ணதாசன்)

இனி சந்தியாவை பத்து நாட்களுக்குக் கையில் பிடிக்க முடியாது. நாம் சாப்பிடக் கூப்பிட்டால் கூட… Continue reading

இராஜராஜேஸ்வரி

மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படும் தெய்வீகப் பண்டிகை தீபாவளி. ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்ளும் பண்டிகை. அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள். கதிரவன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு துலாம் ராசியில் நுழைகிறான். மராத்தியர்கள் தாம்பூலம் அணியும் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

“தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்பது… Continue reading

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் கூட அங்குக் குடியேறியிருக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி ஒன்றுதான்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் குடி பெயர்ந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உதாரணமாக நேபாளம், இலங்கை, பர்மா, தென் ஆப்பிரிக்கா, மரீஷியஸ், கயானா, ட்ரினிடாட்  (Trinidad),  டோபாகோ (Tobago), சூரிநாம்,… Continue reading

விசாலம்

ஐப்பசி மாதம் என்றாலே தீபாவளிப் பண்டிகை தான் முதலில் நம் மனக்கண் முன் வந்து நிற்கும்.  ஐப்பசியில் அடைமழை என்பது இப்போதெல்லாம் மிகக் குறைந்து விட்டது, காடுகள் அழிந்து பல வீடுகள் முளைத்து வருவதும் இதற்குக் காரணம்.

இப்போது தீபாவளி பண்டிகையைப் பார்க்க நாம் இமயமலைப் பகுதிக்குப் போகலாமா?

இதோ வந்து விட்டது ஹிமாசலப் பிரதேசம்.… Continue reading

இரா.ச.இமலாதித்தன்

இரு மாதங்களாகவே களை கட்டிய
திருவிழாக் கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது…

நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது…

சம்பளத்தேதிக்கு முன் வந்து போகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்து போகின்றன…

மூன்று ரூபாய் தினசரி நாளிதழை
வாங்க முடியாததை அறியாமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலகப் பொருளாதாரத்தை விமர்சிப்பது… Continue reading

வை.கோபாலகிருஷ்ணன்

(1)

“என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள்.

அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

“ப்ளீஸ் அனு, நீ டெலிவரிக்குப் புறப்பட்டுப் போய் விட்டால் எனக்கு எவ்வளவு போர் அடிக்கும் தெரியுமா?,  ஐ வில் மிஸ் யூ ய லாட். இப்போ… Continue reading

ஸ்ரீஜா வெங்கடேஷ்

சென்னையில் ஒண்டுக் குடித்தன வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா?முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு இருந்தது, அவை இப்போது வழக்கொழிந்து போனவையாயிற்றே என்று நீங்கள் நினைத்தால், ஒன்று நீங்கள் சென்னைக்கு வந்தறியாதவர்களாக இருக்க வேண்டும், இல்லை  கஷ்டப்படும் ஜீவன்களின் இயக்கங்கள் தெரியாத,  ஏழை மனிதர்களையே பார்த்திராத பெரும் செல்வந்தர்களாயிருக்க வேண்டும்.

நான் சொல்ல வந்தது வளவு வீடுகள்,… Continue reading

சிங்கை கிருஷ்ணன்

அற்புத சோதி ஆனந்த சோதி !
அகிலத்தை உயர்த்தும் அருபெருஞ் சோதி !
வள்ளலார் கண்ட வாழ்க்கை சோதி !
நமக்கது தானே இதயத்தின் சோதி !
தீப விளக்குகளின் திருவிழாவாம் தீபாவளி திருநாள் !
உங்கள் உள்ளங்களின் அந்த தீபங்களின் ஒளி நிரம்பட்டும்!
பூக்கும் அன்பால் உங்கள் நல் இதயம் நிரம்பி… Continue reading

கயல்விழி முத்துலெட்சுமி

இடுப்பொடியச் சுடாதேயம்மா

அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு,

குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி

முறையிடுவான்.

 

காசைக் கரியாக்க ஆசையோடு,

அட்டவணையில் குறிப்பெடுப்போம்

வாழ்வினிமைக்கு வாழ்த்தி

மருந்தோடு வருவாள் ஆச்சி..

உனக்கெத்தனை? எனக்கெத்தனை?

பங்கிட்டோம் பட்டாசுகளை

சேர்ந்தே குதூகலிக்க,

 

வரிசை வரிசையாய் ஆசைகள்

கொளுத்தி வைத்து

பூக்கிண்ணமாய் சிதறிக் கொண்டிருந்தது.… Continue reading

புதுகைத்தென்றல்

நாம் பார்க்கப் போவது குழந்தைகளின் மனதை எப்படி வடிவமைப்பது என்பது பற்றி. இது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனால் பலரும் இதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக் கொள்வதில்லை.

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது’ என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதனால் குழந்தைகளின் மனதில் என்னென்ன நற்பண்புகளை  விதைக்க வேண்டுமோ அதை ஆரம்பத்திலேயே… Continue reading

ஜெயஸ்ரீ

மாரி பிஸ்கட்டுகள்(பொடித்தவை) – 200 கிராம்

பால் பவுடர் -100 கிராம்

கன்டன்ஸ்ட் பால்(மில்க் மெய்ட்) – 1 டின் (400 கிராம்)

வெண்ணெய் – ½ கப் (100 கிராம்)

சர்க்கரை – 3/4 கப்

கோக்கோ – 6 டீ ஸ்பூன்

உலர்ந்த திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்

கலந்த… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்