ஷைலஜா

logoபிரார்த்தனை செய்ய ஏது சுவாமி எனக்கு நேரம்?

இப்படி அலுத்துக்கொண்டார் அந்த சீடர். அவர் வங்கநாடக உலகின் தந்தை.

கிரீஷ் ச‌ந்திர கோஷ் என்ற பெயரைத் தெரியாத வங்காளிகளே இருக்க முடியாது.

எப்படித் தமிழ் நாட்டில் சங்கரதாஸ் சுவாமிகளையும், பம்மல் சம்பந்த முதலியாரையும், மதுரைபாய்ஸ் கம்பெனிக் காரர்களையும், நவாப் ராஜமாணிக்கத்தையும், மேடை நாடகங்களைப் பற்றிப் பேசும்போது தவறாமல் குறிப்பிடுவார்களோ, அதுபோல வங்கத்தில் நாடகத்
தந்தையாகவே கிரீஷ் சந்திரகோஷ் இன்றளவும் போற்றப் படுகிறார்.

இந்த கிரீஷ் கோஷ் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர்.
இவர் எப்போதும் புதிய புதிய மதுபான வகைகளை விரும்பி அருந்துவார். பிறகு பரமஹம்சரின் அன்புக்கு பாத்திரமான அவருக்கும் பரமஹம்சருக்குமான மன உறவு அற்புதமானது.

“நீ இ்றைவனை பிரார்த்தனை செய் உனக்கு மன அமைதி கிடைக்கும்” என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லியபோது இப்படி பதில் வரவும் பரமஹம்சர், “ஒருநாளைக்கு இரண்டு தடவை காலையிலும் மாலையிலும் உன்னால் நேரம் ஒதுக்க முடியாதா?’ என்று கேட்டார்.

‘ம்ஹூம் எனக்கு நேரமே கிடையாது’

“அப்படியானல் ஒன்று செய் உனக்கு நான் பிரார்த்தனை செய்கிறேன் அதற்கான அதிகாரப்பத்திரத்தை எனக்குக்கொடுத்துவிடு” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பகவான்.

. கிரிஷைப்பொறுத்தவரை பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்கி செய்யப்படுவது பிரார்த்தனை அல்ல அவருடைய பக்தி மார்க்கத்தில் அவரால் கண்டு வழிபடத்தக்க தெய்வங்கள் அவரோடு நடமாடிக் கொண்டிருந்த உயிரினங்களே.

அதனால் கிரிஷ் சந்திரகோஷின் மீது பரமஹம்சர் வைத்திருந்த அன்பிற்கு அளவே இல்லை

ஒருதடவை கிரிஷ் இராமகிருஷ்ணரைக் காண வந்தபோது சீடர்கள் தனக்குக் கொடுத்திருந்த தின்பண்டங்களை அவருக்கு சிறுபிள்ளைக்கு ஊட்டிவிடுவதுபோல உண்ணச்செய்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் புனிதக்கரங்கள் தன் இதழ்களைத் தொட்டபோது குற்ற உணர்வில் கூசிப்போனார் கிரிஷ்.

அன்று விவேகானந்தர் தனது சீடர்களுக்கு ரிக்வேதத்தின் கருத்துகளை விவரித்துக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சி இராமகிருஷ்ணபரமஹம்சரின் பரிபூரணத்திற்குப் பிறகு நிகழ்ந்தது
அப்போது கிரிஷ் அங்கு வரவும் விவேகானந்தர் அவரை வரவேற்றார்,.

“இவற்றை நீங்கள் கற்க ஆர்வமே கொள்ளவில்லையே ஏன்?’ என்று விவேகானந்தர் கேட்டார்
.
“இந்த வேதப்புத்தக சாரத்தையெல்லாம் நான்தான் பரமஹம்சரின் வடிவத்தில் அனுபவித்துவிட்டேனே இவற்றைப்படித்து என்ன பயன் பெறப்போகிறேன்?” என்றாராம் கிரீஷ். ஒருகாலத்தில் புலன்களில் ஆசையால் வீழ்ந்து கிடந்தவர் இந்த கிரிஷ்!mom1

மேலும் அவரிடம் கிரீஷ் கேட்டார், “சகோதரரே நீங்கள் வேதம் வேதாந்தம் என நன்கு கற்று அதனைப் பேசுகிறீர்கள் சரி இந்த நூல்களைக் கற்பதின் மூலம் நம்மைச் சுற்றி சீரழித்துக் கொண்டிருக்கிற பசிப் பிணி போன்ற வேதனைகளுக்கு மாற்றம் காண இயலவில்லையே ஏன்?”

இந்த எதிர்பாராத கேள்வியில் மௌனமான விவேகானந்தரின் கண்கள் பனித்தன. அறையைவிட்டு மௌனமாய் வெளியேறி சிறிதுநேரம் கழித்து அறைக்குத் திரும்பியவரின் முகத்தில் வேதனை ரேகைகள் படர்ந்திருந்தன.

விவேகானந்தர் அறையைவிட்டுச் சென்ற அந்த பொழுதினில் அங்கிருந்த் சீடர்களிடம் கிரீஷ் சொன்னார்

“மனிதப்பிறவியின் அவலங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே கண்கலங்கிப்போகும் மனிதநேயம் தான் விவேகானந்தரை மகாஞானி ஆக்கி இருக்கிறது!”

ஆம் அந்த மனித நேய உணர்வுதான் இராமகிருஷ்ணரின் அன்புக்குப் பாத்திரமாக கிரீஷையும் ஆக்கி இருந்தது

ஷைலஜா

ஷைலஜா

எழுத்தாளர்.

2 Responses to மனித நேயம்!

  • விசாலம்
    rvishalam says:

    அன்பு ஷைலஜா .மனித நேயத்தின் முக்கியத்துவத்தை அருமையாக உணர வைத்திருக்கிறார் சுவாமிஜி .பலதடவை அவரது சரித்திரம் படித்தாலும் இது பொக்கிஷம் தான் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

  • R.Mohan raj says:

    Madam,
    Very super Example about manitha neyam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Tags

அருண் காந்தி இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இரா.ச.இமலாதித்தன் இராஜராஜேஸ்வரி கமலாதேவி அரவிந்தன் கவிநயா காயத்ரி பாலசுப்பிரமணியன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெயபாரதன் சின்னராஜ் சு. கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செம்பூர் நீலு செல்வன் ஜெ.ராஜ்குமார் ஜெயஸ்ரீ டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நடராஜன் கல்பட்டு நாகேஸ்வரி அண்ணாமலை நாகை வை ராமஸ்வாமி நீலகண்டன் நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ புதுவை எழில் புவனா கோவிந்த் பெருவை பார்த்தசாரதி பேரா.பெஞ்சமின் லெபோ மு.முருகேஷ் முகில் தினகரன் மோகன் குமார் ராஜராஜேஸ்வரி ஜெகமணி ராஜி வெங்கட் ரிஷி ரவீந்திரன் விசாலம் வித்யாசாகர் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்