இரா.ச.இமலாதித்தன்

இரு மாதங்களாகவே களை கட்டிய
திருவிழாக் கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது…

நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது…

சம்பளத்தேதிக்கு முன் வந்து போகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்து போகின்றன…

மூன்று ரூபாய் தினசரி நாளிதழை
வாங்க முடியாததை அறியாமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலகப் பொருளாதாரத்தை விமர்சிப்பது போல
சுயத்தின் வலியை அறிந்து கொள்ளமலேயே
வேறெங்கேயோயுள்ள அற்ப சுகத்தை
எல்லோரது மனதும் தேடிக் கொண்டிருக்கிறது…

இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
வாக்காளனாய்த் தமிழன் வக்கற்றுப் போனதால்
இவ்வருடத் திருவிழாக் காலமும்
சென்ற சில வருடங்களைப் போலவே
இருளிலேயே தனித்துக் கிடக்கிறது
வெறுமையோடு இரு மாதங்களாக…!

படத்திற்கு நன்றி

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

One Response to இருமாத விழாக்கோலம்

 • இலவசத்துக்கும் பணத்துக்கும் கையேந்தும்
  வாக்காளனாய்த் தமிழன் வக்கற்றுப் போனதால்
  இவ்வருடத் திருவிழாக் காலமும்
  சென்ற சில வருடங்களைப் போலவே
  இருளிலேயே தனித்துக் கிடக்கிறது
  வெறுமையோடு இரு மாதங்களாக…!
  >>>>>>>>>>>>>

  நல்ல அர்சியல் விமரிசனப் பார்வை. ஆனாலும் மக்கள் ஓட்டுக்குக் காசு வாங்கினாலும், மக்களின் ஓட்டை வாங்கக் காசால் முடியாது என்பதும் தெரியவரத்தானே செய்கிறது அல்லவா :-))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


7 − = four

Categories

Tags

அருண் காந்தி இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இரா.ச.இமலாதித்தன் இராஜராஜேஸ்வரி கமலாதேவி அரவிந்தன் கவிநயா காயத்ரி பாலசுப்பிரமணியன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெயபாரதன் சின்னராஜ் சு. கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செம்பூர் நீலு செல்வன் ஜெ.ராஜ்குமார் ஜெயஸ்ரீ டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நடராஜன் கல்பட்டு நாகேஸ்வரி அண்ணாமலை நாகை வை ராமஸ்வாமி நீலகண்டன் நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ புதுவை எழில் புவனா கோவிந்த் பெருவை பார்த்தசாரதி பேரா.பெஞ்சமின் லெபோ மு.முருகேஷ் முகில் தினகரன் மோகன் குமார் ராஜராஜேஸ்வரி ஜெகமணி ராஜி வெங்கட் ரிஷி ரவீந்திரன் விசாலம் வித்யாசாகர் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்