கயல்விழி முத்துலெட்சுமி

இடுப்பொடியச் சுடாதேயம்மா

அடுக்கு நிறைய மட்டும் வேண்டுமெனக்கு,

குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி

முறையிடுவான்.

 

காசைக் கரியாக்க ஆசையோடு,

அட்டவணையில் குறிப்பெடுப்போம்

வாழ்வினிமைக்கு வாழ்த்தி

மருந்தோடு வருவாள் ஆச்சி..

உனக்கெத்தனை? எனக்கெத்தனை?

பங்கிட்டோம் பட்டாசுகளை

சேர்ந்தே குதூகலிக்க,

 

வரிசை வரிசையாய் ஆசைகள்

கொளுத்தி வைத்து

பூக்கிண்ணமாய் சிதறிக் கொண்டிருந்தது.

 

இன்று

பக்கத்திற்கொன்றாய்

தெறித்தப் பட்டாசாய்

வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு

எவருக்குமில்லை..

 

படத்திற்கு நன்றி

சாந்தி மாரியப்பன்

எழுதவும், அதை விட வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறார்.

திண்ணை, வார்ப்பு, கீற்று,வல்லமை ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள் ஆகிய அச்சுப் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.

Share

7 Responses to அன்றொரு காலத்தில்

  • நீங்களே அன்றொரு காலத்துக்குப் போய்விட்டீர்களா முத்துலக்ஷ்மி.
    நாங்க பத்து ரூபாஉக்குப் பட்டாசு மத்தாப்பு வாங்கி மூணு நாள் வெடிப்போம்.
    இப்பொழுது 300ரூபாய்க்கு வாங்கினாலும், எங்கவீட்டு உதவியாளரின் பேரன் பேத்திகளுக்கு ஒரு நாள் கூடத் தங்குவதில்லை.

    காலம் மாறிப் போச்சு.

  • நினைவுகளை மீட்டெடுத்த அருமையான கவிதை. தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும்:)!

  • பாரதி மணி says:

    முத்துலக்ஷ்மி: பழைய ஞாபகங்களைத்தூண்டிவிட்டது உங்கள் கவிதை. நான் இப்போது தில்லியில் தான் இருக்கிறேன். தீபாவளி முடிந்து கிளம்புவேன். ஆசிகள்!

    பாரதி மணி

  • அருமை.. அருமை… வாழ்த்துக்களும்…

  • prakash says:

    வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு
    எவருக்குமில்லை..

    அருமை.. ஆனால் தவிர்க்க முடியாத உண்மை.

  • அருண் காந்தி says:

    நன்று…குளிக்க மறுப்பவன் முன்னால் எழுப்பச் சொல்லி
    முறையிடுவான்.’நானும் முறையிட்டவன் அன்றொரு காலத்தில்… ‘

  • இன்று

    பக்கத்திற்கொன்றாய்

    தெறித்தப் பட்டாசாய்

    வாழ்வைப்போன்ற இரட்டை நாக்கு

    எவருக்குமில்லை..
    >>>>>>>>>>>>

    என்ன யதார்த்தமான வரிகளின் ஆழம். அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*


*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்