அண்ணாகண்ணன்


 

உடற்களைப்பு நீங்கவே
உளக்களிப்பு ஓங்கவே
சுடர்முகத்தில் பற்றவே
சுறுசுறுப்பு தொற்றவே
அடர்நலன்கள் சூழவே
அழகொளிர்ந்து வாழவே
உடன்அழுக்கு போகவே
ஒருமுழுக்குப் போடுவாய்!

 

உயிர்த்துடிப்பு கூடவே
உயர்சிறப்பு தேடவே
துயில்களைந்து துள்ளவே
துயர்தொலைந்து வெல்லவே
வயித்தியங்கள் தள்ளவே
வலிகழன்று செல்லவே
ஒயில்முழுக்கக் கொள்ளவே
ஒருமுழுக்குப் போடுவாய்!

 

கயல்இனம் கடிக்கவே
காற்றெழுந்து அடிக்கவே
நயந்திசை படிக்கவே
நரம்புகள் முடுக்கவே
செயலுரம் செழிக்கவே
சிந்தைவேர் விழிக்கவே
உயரவே உயிர்க்கவே
ஒருமுழுக்குப் போடுவாய்!

 

கலக்கமா? சுணக்கமா?
கவலையா? வருத்தமா?
இலக்கிலே விலக்கமா?
இறுக்கமா? இறக்கமா?
இலையெனும் நடுக்கமா?
இவையனைத்தின்உச்சியை
உலுக்கியே உலுக்கியே
ஒருமுழுக்குப் போடுவாய்!

=====================

படத்திற்கு நன்றி: சிஃபி.காம்
editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

4 Responses to ஒருமுழுக்குப் போடுவாய்!

 • kargil jay says:

  உண்மையிலேயே தண்ணீர் சிறப்பானது..
  உணவையும் தூய்மைப் படுத்தி,கையையும் தூய்மைப்படுத்தி, உடலையும் தூய்மைப் படுத்தும் நீரே, முழுகினால் உள்ளத்தையும் தூய்மைப் படுத்துகிறது… சனி நீராடினால் மும்மலம் குறைக்கிறது.. உள் அங்கங்களையும், உள்ளங்களையும் தூய்மைப் படுத்தும் நீரே. அதை நன்றாக கவிதை ஆக்கினீர் கவிஞர் நீரே.

 • உம்மை விரைவிலேயே கயல் இனம் கடிக்கக் கடவதாகக் கலைவாணி சபிப்பதற்குப் பரிந்துரைக்கிறேன்.
  ***

 • கலக்கமா? சுணக்கமா?
  கவலையா? வருத்தமா?
  இலக்கிலே விலக்கமா?
  இறுக்கமா? இறக்கமா?
  இலையெனும் நடுக்கமா?
  இவையனைத்தின்உச்சியை
  உலுக்கியே உலுக்கியே
  ஒருமுழுக்குப் போடுவாய்!
  Nice lines

 • R. S. Satyan says:

  Amazing verse!!

  It explains the 1st form of ablution, out of the Vedic 5 types.
  It instigates leadership, originality & freedom!
  It propels mankind…towards limitless contours!
  It makes us listen to our ‘innerself’.

  Worth becoming a daily prayer in every school!

  …heartfelt wishes to my dear friend Anna.

  Dr. Satyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


+ three = 8

Categories

Tags

அருண் காந்தி இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இரா.ச.இமலாதித்தன் இராஜராஜேஸ்வரி கமலாதேவி அரவிந்தன் கவிநயா காயத்ரி பாலசுப்பிரமணியன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெயபாரதன் சின்னராஜ் சு. கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செம்பூர் நீலு செல்வன் ஜெ.ராஜ்குமார் ஜெயஸ்ரீ டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நடராஜன் கல்பட்டு நாகேஸ்வரி அண்ணாமலை நாகை வை ராமஸ்வாமி நீலகண்டன் நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ புதுவை எழில் புவனா கோவிந்த் பெருவை பார்த்தசாரதி பேரா.பெஞ்சமின் லெபோ மு.முருகேஷ் முகில் தினகரன் மோகன் குமார் ராஜராஜேஸ்வரி ஜெகமணி ராஜி வெங்கட் ரிஷி ரவீந்திரன் விசாலம் வித்யாசாகர் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்