இரா.ச.இமலாதித்தன்

மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகி விடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக் கொண்டிருந்தது…
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்குக் கைம்மாறாய்
தையில் கொண்டாடப்படும்
வழிபாட்டுத் திருவிழாவில்…!

நிலவில் குடிபுகுந்தாலும்
நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று
மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிரினமாய் இருக்க
முயற்சிக்க வாழ்த்துகளைச்
சொல்லி விட்டுச் சென்றது
கடவுளும் மனிதனுமில்லா ஏதோவொன்று…!

 

படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/File:Office_Pongal_celebration.jpg

ச-இமலாதித்தன்

ச-இமலாதித்தன்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


5 + = twelve

Categories

Tags

அருண் காந்தி இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இரா.ச.இமலாதித்தன் இராஜராஜேஸ்வரி கமலாதேவி அரவிந்தன் கவிநயா காயத்ரி பாலசுப்பிரமணியன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெயபாரதன் சின்னராஜ் சு. கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செம்பூர் நீலு செல்வன் ஜெ.ராஜ்குமார் ஜெயஸ்ரீ டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நடராஜன் கல்பட்டு நாகேஸ்வரி அண்ணாமலை நாகை வை ராமஸ்வாமி நீலகண்டன் நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிச்சினிக்காடு இளங்கோ புதுவை எழில் புவனா கோவிந்த் பெருவை பார்த்தசாரதி பேரா.பெஞ்சமின் லெபோ மு.முருகேஷ் முகில் தினகரன் மோகன் குமார் ராஜராஜேஸ்வரி ஜெகமணி ராஜி வெங்கட் ரிஷி ரவீந்திரன் விசாலம் வித்யாசாகர் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்