- Friday, April 8, 2011, 10:56
- பொது
- 1 views
அம்பத்தூரில் இயங்கிவரும் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் 2011 மார்ச்சு மாதக் கூட்டத்தில் மருத்துவர் சொக்கலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பரிசு பெற்ற சிரிப்புத் தெறிப்புகள். ==================================================
முதல் பரிசு
“ஏன்டி, புதுப் புடைவை எடுத்திருக்கியே உன் வீட்டுக்காரருக்கு தெரியுமா?”
“அடிப் போடி, நான் புடவை எடுத்தது, அந்தக் கடைக்காரருக்கே தெரியாதே!”
சொன்னவர்: சி.சுப்பிரமணியன், விநாயகபுரம், அம்பத்தூர்.
==================================================
இரண்டாம் பரிசு...
Full story
- Friday, April 8, 2011, 10:30
- பொது
- 1 views
அம்பத்தூரில் இயங்கிவரும் ரைட் சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் 2011 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் எழுத்தாளர் 'துக்ளக்' சத்யா பேசுகிறார். இது தொடர்பாக, அந்தச் சங்கத்தின் நிர்வாகி சிரிப்பானந்தா விடுத்துள்ள செய்தி:
இந்த மாதம் இரண்டு நகைச்சுவை விழாக்கள்! ஒன்று வழக்கம் போல நமது விழா! மற்றொன்று எந்த நகைச்சுவைச் சங்கமும் வழங்கமுடியாத எண்ணற்ற நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த தமிழகத் தேர்தல் திருவிழா!
தேர்தலை முன்னிட்டு, தேர்தல் காமெடிகளை தனக்கே உரித்தான அரசியல் நையாண்டிகளுடன் விளகக (கலக்க) வருகிறார் பிரபல எழுத்தாளர் துக்ளக் சத்யா....
Full story
- Friday, March 18, 2011, 18:11
- பொது
- 1 views
இராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, புராணங்கள் ஆகியவற்றிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கின்ற புதுமையான வினாடி வினா நிகழ்ச்சி, 2011 ஞாயிறு (20-03-2011) காலை பத்து மணிக்கு, சென்னை, அம்பத்தூர் சத் சங்கத்தில் நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழ் இங்கே:
வினாடி வினாவில் கேட்கப்படும் மாதிரிக் கேள்விகள் சில இங்கே:
தகவல்: சிரிப்பானந்தா
Full story
- Saturday, March 12, 2011, 13:42
- பொது
- 1 views
சிரிப்பானந்தா
சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்தச் சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு எனச் சிரிப்பைக் கலைவாணர் வகைப்படுத்தினார்.
புத்தரின் நேரடிச் சீடர் சாரிபுத்தா சிரிப்பை வகைப்படுத்தியுள்ளார் என்பது தெரியுமா?
சிரிப்பை அவர் 6 வகையாகச் சொல்கிறார்.
முதல் வகை- ஸிதா
முகபாவத்தின் அதிநுட்பங்களுடன் கட்டுப்பாடாய் வெளிப்படும் புன்னகை. இது நாமாக செய்யக்கூடியது அல்ல. புத்தரைப் போன்ற அதிநுட்ப உணர்வும் கவனமும் உடையவர்களுக்கே இது ...
Full story
- Saturday, March 12, 2011, 13:12
- பொது
- 2 views
சென்னை, அம்பத்தூரில் இயங்கும் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கத்தின் மாதாந்தரக் கூட்டம், 13.03.2011 அன்று, சத் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரபல இதய நோய் நிபுணர் டாக்டர் வி. சொக்கலிங்கம், காட்சியுரை (பவர்பாய்ண்ட்) விளக்கங்களுடன் 'இதயம் காக்க நகைச்சுவை', என்னும் பொருளில் சிரிப்புரை ஆற்ற உள்ளார். இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் இதோ:
தகவல்: சிரிப்பானந்தா
Full story
- Friday, February 11, 2011, 20:29
- பொது
- 0 views
சிரிப்பானந்தா
"நான் சொல்லும் சிரிப்புகளில் எனது சொந்த நகைச்சுவை எது , காப்பியடித்த நகைச்சுவை எது என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?", என்று நமது நகைச்சுவை சங்க உறுப்பினர்களிடம் கேட்டேன். "கொஞ்சமாவது சிரிப்பு வந்தால் அது காப்பியடித்தது என்று கண்டுகொள்வோம்", என்றார்கள்! கீழே உள்ள ஜோக்(?!)குகள் என் சொந்த சரக்கு. ஏற்கெனவே யாராவது எழுதியிருந்தால் அவர்களதுதான் என்று உடனே ஒத்துக்கொண்டுவிடுவேன்.
======================
1."ஊழல்ன்னா நம்ம தலைவருக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னு எப்படிச் சொல்றீங்க?"...
Full story
- Friday, January 14, 2011, 19:52
- பொது
- 0 views
ஆக்கம்: சிரிப்பானந்தா
பொங்கலை முன்னிட்டு, இதோ சிரிப்புக் கரும்பு:
=================================
1. இவர்: அவர் வீட்டுல 'நான்வெஜிடேரியன்' பொங்கலா?
அவர்: அதான் முன்னமே சொன்னேனே, அவர் வீட்டுல பொங்கலன்னிக்கே 'மாட்டு'ப் பொங்கல்ன்னு!
=================================
2. ஜெயிலில் உள்ள மரண தண்டனைக் கைதிக்கு உங்க வீட்டிலேர்ந்து பொங்கல் போகுதாம்ல?
சித்திரவதை செஞ்சு சாகடிக்கணும்னு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறாரே!
=================================
3. உங்க மாமனார் காணும் பொங்கலைச் சிக்கனமா முடிச்சிட்டாரா?
பொங்கலை ஒரு தட்டுல கொண்டு வச்சு "நல்லாப் பாத்துக்கோங்க மாப்பிள்ளை, இதுதான் பொங்கல்"னு காமிச்சிட்டுப் போயிட்டார்.
=================================
Full story
- Friday, November 12, 2010, 20:26
- பொது
- 1 views
தொகுப்பு: சிரிப்பானந்தா
சில நகைச்சுவைத் துணுக்குகள் உங்களுக்காக:
===================================
"என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது"
"இப்போ சொல்லி என்ன பிரயோசனம்? வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்"
===================================
"நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னாங்க?"
===================================
"எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?"
"ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால ‘டச்’ விட்டுப் போச்சுய்யா."
===================================
"உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!"
"ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!"
===================================
"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!"
"எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."
===================================
"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் ...
Full story
- Sunday, August 8, 2010, 18:17
- பத்திகள்
- 2 views
அண்ணாகண்ணன்
அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்தி வருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடந்தது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்மிகு எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் கலந்துகொண்டார். அவர், 'சிலேடைச் செல்வம் ' என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் அருமையாகப் பேசினார். ஏராளமான இலக்கிய, வரலாற்று, ...
Full story
- Tuesday, August 3, 2010, 6:26
- பொது
- 1 views
அம்பத்தூர் ரைட்சாய்ஸ் நகைச்சுவை சங்கம் மாதந்தோறும் நகைச்சுவைக் கூட்டத்தினை நடத்திவருகிறது. இதன் 84ஆவது கூட்டம், 2010 ஆகஸ்டு மாதம் 08.08.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.25க்கு நடக்கிறது. அம்பத்தூர், வெங்கடாபுரம், வடக்கு பூங்கா தெருவிலுள்ள சத்சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர், பேச்சாளர், அமுதசுரபி ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், சிலேடைச் செல்வம் என்ற தலைப்பில் பேச இருக்கின்றார். அனைவரும் வரலாம்! அனுமதி இலவசம்!
இதனை இந்தச் சங்கப் பொறுப்பாளர் சிரிப்பானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் அழைப்பிதழ் இங்கே:
...
Full story