Posts Tagged ‘தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2011’

Page 1 of 212

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு சீட்டுக் குறிப்பு

அருண் காந்தி ஆண்டுகள் ஐந்து கடந்து ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் இந்த வேளையில் வாழ்த்துகளுக்கும் விருந்துகளுக்கும் இடையே தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். 'இந்தத் தேர்தல் வெற்றியானது என்னுடையதோ / எங்களுடையதோ அல்ல மக்களுடையது' என்று கூறிய தங்களின் உணர்தலும் அந்த மனப்பாங்கும் பாராட்டுதலுக்கு உரியது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையை அவர்கள் வாக்குச் சீட்டில் பதிய முற்பட்டு, அது முடியாமல் போக ஒற்றை அழுத்தில் குறியீடாகக் காட்டினர். அவர்கள் பதிய நினைத்தது, சிறு குறிப்புச் சீட்டாக ... Full story

பர்னாலா, ஜெ.ஜெ. & 33 அமைச்சர்கள்

தமிழக முதலமைச்சராகச் செல்வி ஜெ. ஜெயலலிதா, சென்னையில் 16.05.2011 அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்களாக 33 பேர் பொறுப்பேற்றனர். பின்னர் தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் இணைந்து படம் எடுத்துக்கொண்டனர். நன்றி: பத்திரிகைத் தகவல் அலுவலகம், ... Full story

ஜெயலலிதா, தமிழக முதல்வர் ஆனார்; 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாகச் செல்வி ஜெ.ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 2011 மே 16 அன்று நண்பகல் இதற்கான விழா நடைபெற்றது. 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 147 இடங்களை அதிமுக கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து, ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்து, ஜெயலலிதா ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக்கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக்கொண்டார். ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ... Full story

அதிமுக அணி அபார வெற்றி – ஜெ.ஜெயலலிதா, புதிய முதல்வர்

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணி, பெரும்பான்மை இடங்களில்  அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இந்த அணி 204 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. திமுக அணி 30 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. திமுக ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, தனது பதவியிலிருந்து விலகினார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவை நேரில் சந்தித்து ... Full story

வாக்கு எண்ணிக்கை – பிரவீன்குமார் நேரில் ஆய்வு

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்ற போது எடுத்த படம். (படத்திற்கு நன்றி - பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை) Full story

தமிழகத்தில் 81.3% மறு வாக்குப் பதிவு

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, 2011 ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அதில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் பழுது, வாக்காளர் பட்டியல் மாறியது, வாக்குப் பதிவில் முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் 6 மாவட்டங்களில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 16 அன்று மறு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் 81.3% மறு வாக்குப் பதிவு நடைபெற்றதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்குப் பதிவு சதவிகிதப் பட்டியல் இதோ-... Full story

தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப் பதிவு

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு. 2011 ஏப்ரல் 13 அன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 75.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார். பின்னர் அனைத்து மாவட்ட நிலவரமும் வந்த பிறகு, 77.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் 1967இல் 76.57 விழுக்காடு பதிவானது. அதன் பிறகு 2011 தேர்தலில்தான் அதைக் காட்டிலும் அதிகமான வாக்குகள் பதிவாகி, தமிழக வாக்காளர்கள் வரலாறு படைத்துள்ளனர். இவ்வளவு ... Full story

வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2011 ஏப்ரல் 13 அன்று, சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நாள், தாய்த் திருநாடு குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் சிறந்த கொடை! உங்கள் அரசையும் அதற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கக் கூடிய பொன்னான வாய்ப்பு! நீங்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, கடந்த பல மாதங்களாக அரசு எந்திரம் இரவு பகலாக உழைத்துள்ளது. இனி வாக்களிப்பது உங்களது கடமை. வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது, உங்கள் தேர்தல் ... Full story

46 தனித் தொகுதிகளில் 413 தலித்துகள் போட்டி

நடைபெற உள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 46 எஸ்சி / எஸ்டி தனித் தொகுதிகளில் 413 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 369 பேரும், பெண் வேட்பாளர்கள் 44 பேரும் களத்தில் உள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காடு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தொகுதிகள் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டவை. எஞ்சியுள்ள தனித் தொகுதிகள், எஸ்சி பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அரியலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ... Full story

தேர்தல் களத்தில் 136 பெண் வேட்பாளர்கள்

2011 ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை, 2748 பேர். இதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 136 பெண் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இவர்கள் போட்டியிடும் மொத்த தொகுதி 97 ஆகும். பெண் வேட்பாளர்களே போட்டியிடாத தொகுதிகளின் எண்ணிக்கை 137 ஆகும். இது கடந்த 2006இல் நடைபெற்ற சட்டப் பேரவையில் பங்கேற்ற பெண்களின் அளவை விடக் குறைவாகும். மாவட்ட வாரியாகப் பெண்கள் அதிகமாகப் போட்டியிடும் மாவட்டம், சென்னை மாவட்டமாகும். அதில் உள்ள 16 தொகுதிகளில் ... Full story

தமிழகத்தில் 54,016 வாக்குச் சாவடிகள்

நடைபெறவுள்ள தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கு 54016 இடங்களில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 32 மாவட்டங்களில் அதிக சட்டப் பேரவைத் தொகுதிகளையும் வாக்குச் சாவடிகளையும் கொண்ட மாவட்டம் தலைநகர் சென்னை என்பது குறிப்பிடத்தக்கது. 16 தொகுதிகளை கொண்ட சென்னையில் அதிகப்படியாக 3225 வாக்குச் சாவடிகள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாவட்டம், வேலூர் மாவட்டமாகும். இதில் உள்ள 13 தொகுதிகள், 2902 வாக்குச் சாவடிகளைக் கொண்டுள்ளன. அதற்கு அடுத்ததாக 11 தொகுதிகளைக் கொண்ட காஞ்சிபுரம் ... Full story

கவிஞர் தாமரையின் அரசியல் வேண்டுகோள்

  Full story

“காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம்” – உவரி மக்களின் உறுதிமொழி

2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சத்தியமாகக் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் உறுதி கூறினர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், நடைபெற இருக்கும் தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். 2011 மார்ச் 26 அன்று உவரி ... Full story

‘இங்கே எல்லாம் இலவசம்; ஓட்டுதான் காசு!’ – சீமான்

ஜனநாயகத்தைக் காக்க நடப்பதாகக் கூறிக்கொண்டு, நாட்டையும் மக்களையும் தேர்தல் சிதைத்துவிட்டது. இங்கே எல்லாம் இப்போது இலவசம். ஓட்டுக்கு மட்டும் காசு என்றாகிவிட்டது, என்றார் இயக்குநர் சீமான். இந்தத் தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை வீழ்த்தப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தனது 17 நாள் சூறாவளிப் பிரச்சாரத்தை, காங்கிரசுக்கு எதிரான போராட்டமாக அறிவித்துள்ள சீமான், நெல்லையில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திசையைன்விளை பேருந்து நிலையம் அருகே நாம் ... Full story

63 தொகுதிகளிலும் காங்கிரஸை வீழ்த்துவதே இலட்சியம்! – சீமான்

"காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, அந்தக் கட்சியை தமிழ்நாட்டில் இல்லாதொழிப்பது மட்டுமே நாம் தமிழர் கட்சியின் இப்போதைய நிலைப்பாடு" எனச் சீமான் அறிவித்துள்ளார். தமிழ் ஈழத்தின் தீவிர ஆதரவாளரான வைகோ, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி, தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டார். அப்படியெனில் அவரால் அதிமுக கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட மற்றொரு ஈழ ஆதரவாளரான நாம் தமிழர் கட்சி சீமானின் நிலை என்ன? வைகோ - அதிமுக உறவு முறிவுக்குப் பிறகு பலர் மனத்திலும் ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.