- Sunday, May 29, 2011, 12:43
- தொடர்கதை
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
ஹோவென 10,000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கர்சித்துக்கொண்டிருக்கும் பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி! வெண்பனி நுரையாகப் பொங்கி வழியும் நீர்க்கோலம்.1846ஆம் ஆண்டிலிருந்து உலக மக்களையெல்லாம் கவர்ந்து இழுக்கின்ற கற்பனைக்கெட்டாத அற்புத கலைக் களஞ்சியம்! வாழ்நாளில் ஒரு முறையேனும் அந்த அதிசயத்தைக் கண்டுவிடத் துடிக்கும் மனித மனம். கண்டபோதும் மீண்டு வர மனமின்றி அதற்குள்ளேயே கரைந்து போய்விடத் தோன்றும் மாயத் தோற்றம்! வட அமெரிக்காவின் மிகப் பழமையான, வரலாற்றுப் புகழ் வாய்ந்த நயாகரா நீர்விழ்ச்சியின் அழகை வர்ணிக்க, சாமான்ய மனிதரால் ஆகாது....
Full story
- Wednesday, May 25, 2011, 12:50
- சிறுகதைகள்
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
ரயில் பயணங்கள் கூட மிக இனிமையானவைதான். முன்பதிவு செய்யப்பட்ட குளுகுளு வசதியுடனான பஞ்சு மெத்தை இருக்கைகள். அத்தோடு கலகலவென அரட்டை அடித்துக்கொண்டு, நல்ல பொழுதுபோக்கான ஆசாமிகளுடன், நேரம் போவதே தெரியாமல் வம்பை வளர்த்துக்கொண்டு, அவ்வப்போது கொறிப்பதற்கு ஏதாவது தீனி. இடையில் சுகமான உறக்கம் கொஞ்சம். இப்படி ஒரு இரயில் பயணம் என்றால், ஏன் ஒருவர் வெறுக்கப் போகிறார்....?
பாரிராசன், வியாபார நிமித்தமாக அடிக்கடி பயணம் செல்லக்கூடியவர். ஆனால் சரியான சுகவாசி. ஒவ்வொரு முறை பயணம் ...
Full story
- Sunday, May 22, 2011, 14:45
- தொடர்கதை
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
'விரும்பிப் போனால், விலகிப் போகும். விலகிப் போனால் விரும்பி வரும்' என்பது வாழ்க்கையின் ஒரு விதி.
மாறன், தந்தையைப் பர்த்தவுடன் அழுதுவிடக் கூடாது, தைரியமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தது, தந்தையின் கலங்கிய விழிகளைப் பார்த்த அந்த நொடியில் தவிடு பொடியாகிவிட்டது. தன்னையறியாமல் கண்களில் மாலையாகக் கண்ணீர். என்னதான் கண்டிப்பான அப்பாவாக இருந்தாலும், சிறு வயதிலிருந்தே தங்களுக்கு வேண்டியதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்த மனிதராயிற்றே. இன்று இப்படி படுக்கையில் இருப்பதைக் ...
Full story
- Sunday, May 15, 2011, 10:46
- தொடர்கதை
- 2 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
பரந்து விரிந்த வனாந்திரம். திரும்பிய புறமெல்லாம் வறண்ட் நிலங்கள்! காய்ந்து சருகாய்ப் போன மரங்கள். அங்கங்கே கூட்டம் கூட்டமாய் முகம் தெரியாத விதவிதமான மூகமூடிகளுடன், எள்ளி நகையாடும் மனிதர்கள். இதில் அழகான முகமூடிகளைத் தாங்கிய உருவங்களை நாடிச் சென்ற மற்றொரு முகமூடி அதன் உண்மை முகத்தைக் கண்டு அலறிக்கொண்டு காத தூரம் ஓடும் காட்சி.......... மத்தியில் மரக்கட்டையாய் நீண்ட ஒரு உருவம் மல்லாந்து கிடக்க, சுற்றிலும் கருமையான, பயங்கரத் தோற்றத்துடன் கொத்தித் திங்கக் காத்திருக்கும் இராட்சதக் ...
Full story
- Sunday, May 8, 2011, 22:58
- தொடர்கதை
- 0 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
மாறன் எப்போதும் மிக ஆவலாகத் தந்தையின் அழைப்பிற்காகக் காத்துக்கொண்டிருப்பவன், அன்று மட்டும் ஏனோ அந்தத் தொலைபேசியின் அழைப்பு மணி, ஏதோ தனக்கு வேண்டிய ஒன்று மறுக்கப்பட்டதன் விளைவாக ஒரு குழந்தையின் அழுகையாக ஒலிப்பது போலக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை இது தம்முடைய மனப் பிரமையாக இருக்குமோ?
“ஹலோ மாறன், எப்படிப்பா இருக்கிறாய்?”
“அப்பா.......சொல்லுங்கோப்பா. நீங்களும் அம்மாவும் நலம்தானே?”
“நன்னா இருக்கோம்ப்பா... நீ சௌக்கியமா இருக்கியோன்னோ?”
“இருக்கேம்ப்பா........ம்ம்..”...
Full story
- Thursday, May 5, 2011, 10:27
- சிறுகதைகள்
- 2 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
"புலன்களின் எல்லா வாயில்களையும் அடைத்து வைத்து, வெளி விசயங்கள் புகாமல் தடுத்து நிறுத்தி மனத்தையும் இதயத்தில் நிலையாக நிறுத்திப் பின் அவ்வாறு வசப்படுத்தப்பட்ட மனத்தால், பிராணனை உச்சந்தலையில் நிலைபெறச் செய்து, பரமாத்மா ஸம்பந்தமான யோக தாரணையில் நிலைத்து நின்று எவன் ‘ஓம்’ என்னும் ஒரே எழுத்தான பிரம்மத்தை உச்சரித்துக்கொண்டு அந்த ‘ஓம்’ என்ற ஏகாபுரத்தின் பொருளான நிர்குண பிரம்மமான என்னைச் சிந்தனை செய்துகொண்டு இவ்வுடலை நீத்துச் செல்கிறானோ, அந்த மனிதன் உயர்ந்த கதியை அடைகிறான்!” - பகவத் கீதை....
Full story
- Sunday, May 1, 2011, 8:35
- தொடர்கதை
- 2 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
மனித ஆற்றலின் சக்தியைத் திருடும் களவாணி அந்த மனிதனுகுள்ளேயே உட்கார்ந்துகொண்டு ஆட்சி செய்வதை அந்த மனிதனே உணரத் தவறுவதும் இயற்கையாக நடக்கக் கூடியதுதான். ஒரு சில விசயங்களை நம் மனது திட்டவட்டமாக ஒரு முடிவு எடுத்து வைத்துக்கொள்கிறது. அதை உள் மனது ஆழமாக நம்பிக்கொண்டு, இப்படித்தான் நடந்திருக்கும் என்று உறுதியான முடிவும் எடுத்துக்கொள்கிறது. ஆனால் பிற்காலங்களில் அது உண்மை அல்ல என்று தெரிய வரும்போது, அதாவது அறிவாற்றலின் மீதிருக்கும் அந்தத் திரை விலகும் நேரம், காலங்கடந்த ...
Full story
- Friday, April 22, 2011, 13:24
- சிறுகதைகள்
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
பனிக்காலம் முடிந்து கோடை தொடங்கிவிட்டது. மழை விட்டும் தூவானம் விடவில்லை. கோடை மழை, வெப்பத்தைச் சற்று குறைத்ததனால் அசந்து தூங்கிவிட்டாள் செல்வி. மேற்கூரையின் வேய்ந்த ஓடுகள், இரவு அடித்த பேய் மழையும் காற்றும் சேர்ந்து, லேசான இடைவெளி விட்டிருந்தது. அதனூடே மெல்ல எட்டிப் பார்த்த கதிரோனின் வீச்சில் ஒரு வரி முன்னெற்றியிலும் இடது கண்ணிலும் ஒடுங்கிய கன்னத்திலும் பட்டு, ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை முகச் சுழிப்போடு விழிக்கச் செய்தது.
அடடா, வெய்யில் வந்துவிட்டதா.... நேரம் ...
Full story
- Sunday, April 17, 2011, 11:51
- தொடர்கதை
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
பன்முக மனிதர்கள் இருப்பதைப் போல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் பல முகங்கள் இருக்கின்றன. ஆம், அக வாழ்க்கையின் முகம் ஒன்று, புற வாழ்க்கையின் முகம் வேறு. அந்த அகம் மற்றும் புற வாழ்விலும் உட்பிரிவுகளும் உண்டு. அக வாழ்வின் முகத்திற்கும் புற வாழ்வின் முகத்திற்கும் பல மாற்றங்கள் உண்டு. நிறைய முரண்பாடுகளும் இருக்கும். அதைத் தூக்கி எடை பார்க்க ஆரம்பித்தால் குடும்பம், உறவு, பந்தம் என்ற அக வாழ்வுதான் முற்றிலும் பாதிக்கப்படும். இதையெல்லாம் அதிக ஆராய்ச்சி செய்ய ...
Full story
- Sunday, April 10, 2011, 10:37
- தொடர்கதை
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
தோள் கொடுக்கும் தோழமை பல நேரங்களில், மலை போன்ற துன்பங்களைக்கூட, கண்ணிமைக்கும் நேரத்தில் பனி போல உருகி ஓடச் செய்துவிடும்.
கணக்குப் பார்த்து வரும் காதலைப் போல, சூழல் பார்த்து வரும் நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நட்பில் பல வகை. தனக்கு மட்டுமே ஏவல் புரியும் சேவகனாக, தன் பெருமையைப் பறை சாற்றும் மத்தளமாகவும் இருந்தால்தான் அந்த நட்பு நிலைக்க முடியும் என்ற அவல நிலையுடைய நட்பும் இருக்கத்தான் செய்கிறது. நல்ல நட்பு என்பது, ...
Full story
- Sunday, April 3, 2011, 21:04
- தொடர்கதை
- 1 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
போனை எடுக்கும் போதே மாறனுக்கு ஏதோ பதற்றமாகத்தான் இருந்தது. அவள் நல்ல பதிலாகச் சொல்ல வேண்டுமே கடவுளே என்று உள்ளூர வேண்டிக்கொண்டேதான் போனை ஆன் செய்தான்.
‘‘ஹலோ, நீங்கள் சற்று முன் பேசியவர்.......”
“ஹலோ, யெஸ், நான் மாறன், ஃபிரம் சென்னை.”
“ஓகே, ஓகே, சாரிங்க.... அப்பா இந்த பிரபோசல் சரியா வரலே என்று சொன்னார். ஏதோ ஜாதகத்தில் பிரச்சனை, பொருத்தம் சரியாக இல்லை என்றார்கள். மன்னிக்கவும்” என்றாள்.
“ஹலோ, ...
Full story
- Friday, April 1, 2011, 9:45
- சிறுகதைகள்
- 19 views
பவளசங்கரி திருநாவுக்கரசு
வீடு கலகலத்துக்கொண்டிருக்கிறது. கோடை விடுமுறை சமயம் என்பதால், குடும்பத்தின் முக்கிய நபர்கள், அத்தனை பேரும் வந்தாகி விட்டது. வெகு தூரத்தில் இருக்கிற மும்பை அத்தை மற்றும் மலேசியா மாமா என்று எல்லோரும் வந்தாகி விட்டது. திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள்தானே இருக்கின்றன. மது எல்லோருக்கும் செல்லப் பெண். அதனால்தான் அரசின் உயர் பணியில் இருக்கும் தில்லி மாமா கூட தவறாமல் வந்திருக்கிறார். எல்லோரிடமும் உண்மையான பாசத்துடன் பழகும் அவள் குணம் அனைவரையும் சட்டெனக் கவர்ந்துவிடும். தொலைவில் ...
Full story