Posts Tagged ‘மதியழகன்’

பெருமகன்

மதியழகன்  சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சந்தோஷப்படத் தெரியவில்லை காவியம் பாடிய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது கவிதை வரிகளைப் போல சன்மானமும் சுருங்கி விட்டது வானம் பார்த்த பொழைப்பு விவசாயிக்கு சர்க்கார் உத்யோகஸ்தர்களுக்கு கை நிறைய சம்பளம் கவிஞன் காகிதம் வாங்கக் கூட கடன் வாங்க வேண்டியிருக்கிறது கவிதை வாசகர்களை விட கவிஞர்கள் பெருகிப் போய்விட்டார்கள் சந்தோஷம் தான். படைப்புகளில் ஜீவன் செத்துப் போய்விட்டதே ஏன்? ஆன்மாவை தமிழுக்கு நேர்ந்துவிட்ட கவிஞனுக்குத்தான் மொழியின் சானித்யம் தெரியும் வயிறு காலியாக இருந்தாலும் வரட்டு கெளரவத்துக்கு குறைச்சலிருக்காது தமிழர்கள் சாகும் போது சும்மா இருந்தாலும் தமிழ் சாகும் போதாவது விழித்தெழு..   படத்திற்கு நன்றி: http://lizzyboo.hubpages.com/hub/Write-well-useful-tips-to-write-well-and-be-happy-about-it Full story

மானுடம் வெல்லும்

மானுடம் வெல்லும்
மதியழகன் பிணவறையில் உறங்குகின்றன தெய்வங்கள் பூசைகளை ஏற்றுக் கொண்டு நாட்களை ஓட்டி இருக்கலாம் பிரார்த்தனைகளை செவிமடுக்காமல் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம் பக்தர்களின் பாலாபிஷேகத்தில் உள்ளம் குளிர்ந்திருக்கலாம் அடிமுடியைத் தேடியபடியே சென்றிருந்தாலும் பிரச்சனையில்லை அதிகாரமற்ற அலங்காரப் பதவியில் வீதியுலா சென்றிருக்கலாம் பாதாள அறை பொக்கிஷங்கள் பறிபோய்விட்டதை எண்ணி மனம் கலங்கியிருக்கலாம் வரம் வாங்கி திரும்புபவர்களின் வாகனங்கள் எப்படி விபத்தில் சிக்குகின்றன என்ற கேள்வி உதிக்காமல் இருந்திருக்கலாம் அவதாரங்கள் பக்கமே தர்மம் இருந்ததாக புத்தகங்களில் படித்திருக்கலாம் விதி என்ற பெயரில் மக்களின் வாழ்க்கையில் விளையாடாமல் இருந்திருக்கலாம் தான்தோன்றித் தனமாக செயல்படாமல் இருந்திருந்தால் சரண கோஷம் எழுப்ப ஆட்கள் கிடைத்திருப்பார்கள் மரணத்தை வைத்து பூச்சாண்டி காட்டாமல் இருந்திருந்தால் எல்லா கடவுளர்களும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருந்திருக்காது மரணத்தை ஒருவன் வென்றால் கூட கடவுளின் நிலை கேள்விக்குறிதான்.   படத்திற்கு நன்றி: http://authoor.blogspot.com/2008/07/blog-post_30.html Full story

கோடுகளாலான வரைபடம்

கோடுகளாலான வரைபடம்
மதியழகன் நீர் மேகங்கள் ஊர்கோலங்கள்.. வேளா வேளைக்குச் சோறு கிடைத்தால் சாதிக்கத் தோன்றுமா.. நிலையில்லாத உலகத்தில் நிரந்தர வேலை கிடைத்துவிட்டது என்று சொன்னால் சிரிக்கத் தோன்றாதா!! குழந்தைகளுக்குக் கூட முகமூடி அணியாத முகத்தைக் காட்ட மாட்டீர்களா? கங்கையில் முங்கி எழுந்தால் பாவக்கறை படிந்த மனது தொலைகிறதா.. பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் மெய்யாகிவிடுமா, உண்மையின் பாதையில் பயணிப்பவர் எத்தனை பேர் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏற்ற இறக்கங்கள் இல்லையென்றால் அது வாழ்க்கையாகுமா? இரக்க சுபாவம் கொண்டுவிட்டால் சபிக்கத் தோன்றுமா.?   படத்திற்கு நன்றி Full story

பள்ளியெழுச்சி

பள்ளியெழுச்சி
மதியழகன் சூரியன் அஸ்தமனமானதும் மெல்ல மெல்ல இருள் கவிழ்கிறது பூமியில்.. முழு நிலவில் கடற்கரையில் தேவதை எனதருகில்.. அது கனவு என்று விழித்ததும் தான் தெரிந்தது.   இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தேன், இறந்த மனிதர்களெல்லாம் ஆகாயத்தில் நட்சத்திரங்களாகிப் போகிறார்கள் என்று பாட்டி சொன்னது நினைவிற்கு வந்தது.   பழுதை பாம்பாகக் கருதுவதும் கிளை அசைவது பேயாகத் தெரிவதும்; சாத்தான் கடவுளாகப் போற்றப்படுவதும் இரவில் தான் நடக்கிறது.. விடியலில் சாத்தான் வேடம் களைகிறது, பாற்கடலில் உறங்கிக் கொண்டிருக்கும் கடவுள் இன்னும் கண்விழிக்கவில்லை எனச் சேதி வருகிறது.   படத்திற்கு நன்றி Full story

ஆகாசவாணி

ஆகாசவாணி
மதியழகன் ஊருக்குள் அவனை 'ஆல் இண்டியா ரேடியோ' என்பார்கள். ஊர்ச் செய்திகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது அவன் வேலை. நாளைய நாளிதழில் என்ன தலைப்புச் செய்தி என்று துல்லியமாகச் சொல்லி அசத்துவான்.   ஆண்டிப்பட்டியிலிருந்து அமெரிக்கா வரை அரசியல் நிலவரங்களை புட்டுப் புட்டு வைப்பான் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைத் துல்லியமாகக் கணிப்பான். சிகரெட் வாங்கிக் கொடுத்தால் கண்ணதாசன் பாட்டுக் கேட்கலாம் தண்ணியை வாங்கிக் கொடுத்தால் தத்துவமாய்க் கொட்டுவான்   'இறுதி வரை இப்படியே இருந்து என்னத்தடா சாதிக்கப் போறே'ன்னா, 'சாதிச்சவனெல்லாம் என்னவானான்' என்று எதிர்க் கேள்வி கேட்பான். 'மண்ணாப்போச்சி போ' என நாம் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான். படத்திற்கு நன்றி Full story

சமர்

சமர்
மதியழகன் நதி சிறைப்படுத்தியது சூரியனை, மீட்க வந்த வானத்திடம் சண்டையிட்டது.   பூக்கள் வலிந்து சென்று வேண்டியும் வண்டுகள் தேன் குடிக்க மறுத்தன. கரை எவ்வளவு கெஞ்சியும் அலை முத்தமிட வரவில்லை காலில் விழுந்தும் காற்றுக்குத் தலை வணங்க மரங்கள் மறுத்தன.   இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடாது என்றது பூமி, உதிக்க மறுத்த சூரியனோ அதைச் சிறிதும் சட்டை செய்யவில்லை.   யாகம் வளர்த்து மழையரசியை அழைத்தார்கள், மழையரசி கடலரசனோடு ஐக்கியமாகிவிட்டதாக சேதி வந்தது... படத்திற்கு நன்றி Full story

குடிமகன்

குடிமகன்
மதியழகன் கைகள் துழாவிக் கொண்டே இருந்தன.. தவறவிட்ட சாவியை, மறதியாய் எங்கோ வைத்த கண் கண்ணாடியை, ஒளிந்து கொண்டு சிணுங்கிக் கொண்டிருக்கும் கைபேசியை.   எதற்காகவோ தேடப் போய் ஏதோ அகப்படுவது உண்டு.. மாயமான கோப்புகளை கணினியில் தேடி எடுப்பது போலல்ல இது. பேருந்தில் டிக்கெட் எடுக்க சில்லறையைத் துழாவும் போது வேறு என்னென்னவோ அகப்படும்   வங்கிக் கணக்கில் பணமிருந்தாலும் தூக்கம் வருவதற்கு தூக்க மாத்திரையை தேடி ஓடத்தான் வேண்டியிருக்கிறது   மங்கையால் ஏற்பட்ட கவலையை மறக்க மதுவை அருந்தி விட்டு அவன் வீதியில் கிடக்க மது அவனுக்கு போதையை அளிக்கிறது ஆனால் ஆயுளைக் குறைக்கிறது.   படத்திற்கு நன்றி   Full story

ஆதி ஸ்தானம்

ஆதி ஸ்தானம்
மதியழகன் சூறைக்காற்று போராடும் மரங்களை வேரோடு சாய்த்திடும் வளைந்து கொடுக்கும் புற்களை வருடிச் சென்றிடும் மண்ணிலிருந்து ஆகாரத்தைப் பெறும் அனைத்தையும் மண் விழுங்கிடும்   மண் தின்ற மனிதனே பூவாய் காயாய் கனியாய் இன்னொரு மனிதனாய் வாழ்க்கை வட்டம்   நிற்காமல் சுழன்றிடும் உயிர்களெல்லாம் மண் பொம்மைகளே இறுதியில் மண்ணாவோம் எனத் தெரிந்திருப்பது மனிதன் மட்டுமே.   படத்திற்கு நன்றி Full story

பரிசு

பரிசு
மதியழகன் என்றைக்கும் எனக்கு விடுமுறை தான். மேலதிகாரியின் நச்சரிப்புகளையோ, சக பணியாளர்களின் கிண்டல் பேச்சுக்களையோ இனி கேட்க வேண்டியதில்லை;   அலாரம் வைத்து எழுந்திருப்பதிலிருந்தும், அவசரமாக குளிப்பதிலிருந்தும், பேருந்து கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதிலிருந்தும், இனி விடுதலை.   பயணத்தின் போது அவசரப்பட வேண்டியதில்லை.. பணிக்கு திரும்ப ... Full story

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன்
மதியழகன் தவிர்த்து விடுங்கள்; நிலைக் கண்ணாடியில் உற்றுப் பார்க்காதீர்கள் உங்கள் உருவங்களை.   நீங்கள் செய்த தில்லுமுல்லு நினைவுக்கு வரலாம், உள்ளுக்குள் உறங்கிக் கிடந்த மிருகம் வெளியே எட்டிப் பார்க்கலாம்.   கையில் நீண்ட நகங்களுடனும் கூரிய பற்களுடனும் உங்கள் பிம்பம் தெரியலாம் தோலின் சுருக்கங்களும்... Full story

எனக்கென்னவோ…

எனக்கென்னவோ...
மதியழகன்   விழியிரண்டால் மாயம் செய்தாய் இதய அறையில் நீயாய் நுழைந்தாய் களங்கமில்லாச் சந்திரனே பூமிக்கு எதற்கு வருகை தந்தாய் நகம் வளர்ந்தால் வெட்டிவிடலாம் உனது ஞாபகங்களை என்ன செய்வது உனது கண்ணொளியிலிருந்து கடன் வாங்கித்தானோ கதிரவன் பிரகாசிக்கிறான் வானம் போல தூரச் செல்கிறாய் மனக்குளத்தில் ஏன் கற்களை எறிகிறாய் தாயைப் போல கேசம் வருடுகிறாய் என்ன வரத்தை தெய்வத்திடம் கேட்கிறாய் அலைகடலில் கால் நனைக்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய் காற்றில் தவழந்து வரும் இசை மழையில் மெய் தீண்டத் தீண்டத் தானே நாணம் வெட்கி வெட்கி விலகும் என்ற வரிகளை நான் முணுமுணுக்கிறேன்.     படத்திற்கு நன்றி Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.