- Thursday, April 28, 2011, 9:39
- கவிதைகள்
- 0 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
நிலவைக்காட்டி
மக்களுக்கு
சோறூட்டுவதிலா..?
எதார்த்தத்தின் மீது
மணற்கோட்டை
கட்டித் தருவதிலா..?
ஒருநேர
பசிபோக்கி அவன்
உரிமையைக்
களவாடுவதிலா..?
தேன் தடவிய
வார்த்தைகளால்
மதிமயக்கம்
கொள்ள வைப்பதிலா..?
கடுஞ்சொற்களால்
ஒருவர்
முகத்தில் ஒருவர்
அசிங்கத்தைப்
பூசிக்கொள்வதிலா..?
மக்கள் சேவை
எனும் பெயரால்
ஆட்சியைப் பிடித்து
ராஜ வாழ்க்கையை
அனுபவிப்பதிலா..?
எதில் இருக்கிறது
அரசியல்..?
காணி நிலம்கூட
இல்லாமல்
கக்கனும் காமராசும்
மண்ணை ஆண்டுவிட்டுப்
போய்விட்டார்கள்
நல்ல அரசியலையும்
எடுத்துக்கொண்டு..!
இவர்கள் போல்
பசியறிந்த ஒருவர்
மக்கள் பசிபோக்க
வரும்நாள் எந்நாளோ..?
Full story
- Wednesday, April 27, 2011, 11:15
- கவிதைகள்
- 0 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
அன்பை மட்டுமே உயிர்களிடத்தில்
காட்டுகின்ற அன்பான இதயம்..
ஆசைகளை அறவே அழித்தொழித்த
வாழ்வுக்குச் சொந்தமான உள்ளம்..
இன்பம், துன்பம் இவையிரண்டும்
ஒன்றென எண்ணி மகிழும் மனம்..
ஈதலில் குளிர்ந்து எதார்த்தத்தில்
குளித்து விளையாடும் நெஞ்சம்..
உறவுகளையும், பிற உயிர்களையும்
தம்முயிராய் நேசிக்கும் நேர்மை..
ஊருக்கெல்லாம் அமைதி வழிகாட்டி
முன்னே நடந்து செல்லும் பொறுமை..
எதுவந்த போதும் இன்முகத்தோடு
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்..
ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளானாலும்
கருணையே மூச்செனும் தத்துவம்..
ஐந்திடமோ, ஐம்பதுகளிடமோ
பேசுகின்ற வார்த்தையில் மெண்மை..
ஒன்றென வாழும் நிலையைச் சொல்லி
நிலையில்லாததைச் சொல்லிடும் தன்மை..
ஓங்குபுகழ் வந்தனைத்த போதிலும்
பொங்கி வழிந்திடாத பேராற்றல்..
ஒளவைத் தமிழ் அமுதத்தை பருகியபோதும்
யார்மீதும் கர்வப்படாத சொல்லாற்றல்..!
இதுவே ஆன்மீக வழி என்பேன்
அதுவழி நடப்போரே நல்வாழ்த்துகள்..!
Full story
- Wednesday, February 23, 2011, 10:51
- கவிதைகள்
- 0 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
ரகசியம்
ஒரு
சூரியப் பொழுதில்
உன்னை
அழைத்தேன்
என் காதலைச்
சொல்வதற்காக.
வானில்
நிலா இல்லாத
இரவில்
சந்திக்கச் சொன்னாய்.
சந்தித்தேன்.
நீ
சொன்ன பிறகுதான்
தெரிந்தது
காதல்கூட அல்ல
காதலின் மொழி
ரகசியமாய் இருப்பதே
சுகமானதென்று..!
அவள்
என்
அவள் வரும்
விடியலுக்காகக்
காத்திருந்தேன்..
அந்தியில் வந்தாள்
எல்லாம் இழந்து.
என்னைப் போலவே..!
நண்பனே..
நண்பனே..
என் இரத்த உறவுகளை
வாசித்துப் பார்..
பின்
யோசித்துச் சொல்..
அதன் பிறகு
ஏற்றுக்கொள்கிறேன்
உன் காதலை..!
Full story
- Sunday, February 13, 2011, 11:08
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
வானவீதியில்
சிறகடிக்க வேண்டுமா..
வண்ணம் குழைத்த
வானவில்லில்
நடந்திட வேண்டுமா..
ஆயிரம்
பட்டாம் பூச்சிகள்
உள்ளத்தில்
படபடக்க வேண்டுமா..
மின்சாரத்தை
தொடாமலேயே
உனக்குள்
உணர வேண்டுமா..
இனம் புரியாத
சுகவேதனையில்
உறக்கமிழந்து
தவித்திட வேண்டுமா..
பார்ப்பதெல்லாம்
அழகு வடிவாக..
இந்த உலகமே
பூப்பந்தாக..
எண்ணி மகிழும்
இளமை வேண்டுமா..
எப்படித்தான்
இருந்தாலும்
நாயகனாக.. நாயகியாக..
வீதிகளில்
உலா வர வேண்டுமா..
காதலித்துப் பார்..!
========================
படத்திற்கு நன்றி:
விக்கிப்பீடியா Full story
- Wednesday, February 9, 2011, 21:58
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
"வெள்ளி மொளச்சி
ரெண்டு நாழி ஆயிடுச்சி
ரெண்டாங்கோழியும்
கூவ தொடங்கிடுச்சி
நான் பெத்த மகளே
இன்னும் நீ உறங்குதியோ..
நீ
பொறந்த இடம்
புழுதிமண் காட்டோரம்..
சோம்பல் வைக்கலாமோ
ஏழ மக உன் தேகம்..?
எழுந்து வாடிபுள்ள
குப்பைகள அள்ளிடணும்
கோமியத்த கழுவிடணும்..
வாசல
பெருக்கிடணும்
சோறுதண்ணி பொங்கிடணும்..
பொழுது
முளைக்குமுன்னே
களவெட்ட
போகவேணும்..
வேல முடிச்சி
வந்தாதான்
நாளையபாடு நடக்குமடி..
கண்முழிச்சி வாடிபுள்ள
காலமது நமக்கில்ல.."
அன்னை
எழுப்புகிறாள்
அன்றலர்ந்த மலரான
தம் மகளை..
"அம்மா..நான்
பள்ளிகூடம் போகவேணும்
புத்தகம்
படிக்கவேணும்..
பக்கத்து வீட்டு
அக்கா போல வாத்தியாரம்மா
ஆகவேணும்..
எஞ்சோட்டு
புள்ளைகளாம்
எட்டாம் வகுப்பு
முடிச்சிட்டாங்க..
எதிவீட்டு மல்லிகா
ஏழாம் வகுப்பு முடிச்சிட்டா
நான் மட்டும்
படிக்கலையே
ஏக்கமா இருக்குதம்மா.."...
Full story
- Monday, February 7, 2011, 22:19
- பத்திகள்
- 1 views
அண்ணாகண்ணன்
(யுகநிதியின் 'மனிதனைத் தேடி..' என்ற குறு நாடக நூல் குறித்த விமர்சனம்)
சமூகச் சீர்கேடுகள், அவலங்கள் ஆகியவற்றைக் கண்டு எழுந்த ஆற்றாமையின் வெளிப்பாடே, இந்த நாடகம். கிரேக்க நாட்டில் பட்டப் பகலில் கையில் விளக்கினை ஏந்தியபடி, சாக்ரடீஸ் ஏற்கெனவே தேடித் தோற்றார். இப்போது தமிழ்நாட்டில் அதே போல் பாண்டித் தாத்தா என்பவர், சத்தியத்தைத் தேடுகிறார். அவரது பார்வையில், தொழிலாளர்களை முதலாளிகளை ஏமாற்றுகிறார்கள். 100 ரூபாய் திருடியவனைச் சிறையில் அடைக்கும் காவலர்கள், பல இலட்சம் திருடியவனை வேண்டுமென்றே ...
Full story
- Friday, January 28, 2011, 0:15
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
கூடித் திரிந்த
பறவைகள்..
பாடி மகிழ்ந்த
தோழமைகள்..
ஒரு நாளில்..
திசைமாறிப் போயின
எங்கெங்கோ..
இயற்கை
தன் பயணங்களில்
எழுதிக் கிழித்துப் போடும்
மாற்றங்கள் எனும்
கவிதையை யாராலும்
கோர்த்துவிட முடியுமா..?
காலங்கள்
கரைவதும்
ஆடி ஓடி விளையாடிய
நினைவுகள் கசிவதும்..
துன்புறும்போதெல்லாம்
தொட்டிலிட்டுத்
தாலாட்டுவதும்..
இளமை நேரத்துப்
பொழுதல்லவா..?
வயது ஐம்பது
ஒரு வாய்ப்பு தேடுகிறது..
நவீனம் அதற்குக்
கை கொடுக்கிறது..
பள்ளியின் தோழர்கள்
தத்தம்
பிள்ளைகளோடு ஏதோ
ஓரிடத்தில் சங்கமம்..
உள்ளமெல்லாம் சந்தோசம்..
அந்த இடத்தில்
மனிதம் கோலோச்சுகிறது
மனிதனைக் கடந்து..!
Full story
- Saturday, January 22, 2011, 23:11
- கவிதைகள்
- 0 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
ஒரு
குடிசை வாழ்க்கையில்
அழுகையோடு விழுந்தேன்..
பசியோடு
போராடித்தான்
வாழ்ந்தேன்.. வளர்ந்தேன்..
ஒரு
நிலாக்கால
நள்ளிரவில்
உதயமான எண்ணத்தை
எல்லாப் பொழுதுகளிலும்
அசை போட்டேன்..
அது
காட்டிய பாதையில்
பயணித்தேன்..
தொடர்ந்த துன்பங்களைத்
தூசி தட்டினேன்..
என் பசி நீங்கியது..
பயணம் முடியவில்லை..
முடிவதற்குள்
உணர்வேனா
என்
பிறவியின் ரகசியத்தை..!
Full story
- Monday, January 10, 2011, 23:19
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
உடைத்து உடைத்துப்
போட்டேன்
தயக்கத்தின் நடுவே
அந்த
வார்த்தைகளை..
கனத்தது இதயம்..
எத்தனை ஆண்டுகள்
தன் சிறகுகளுக்குள்
என்னைப் பொத்திப் பொத்தி
வளர்த்திருப்பாள்..
என் வளர்ச்சிக்காக
எத்தனை இரவுகள்
உறக்கம்
இழந்திருப்பாள்..
ஒரு
மஞ்சள் கயிற்றால்
என்னைக்
கட்டிக்கொண்டவளுக்காக
தனிக்குடித்தனம் என்றேன்..
முகம்
சுருங்கிய தாய்
இமை கவிழ்த்தாள்..
அதிலிருந்து
பொலபொலவெனக் கொட்டியது
நானருந்திய தாய்ப்பால்..!
Full story
- Monday, January 3, 2011, 11:58
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
என் முற்றத்து மடியில்
எப்போதும்
வசந்தத்தின் தூறல்கள்..
வசிப்பதற்கு வீடு..
வயிறு நிறைந்திட தானியங்கள்..
சமைப்பதற்கு அடுப்பு
இமை விரித்துப் பார்ப்பதற்குத்
தொலைக்காட்சிப் பெட்டி..
பிள்ளைக்குப் படிப்பு..
பள்ளியில் மதிய உணவு..
வீட்டுக்கு மின்விளக்கு
விவசாயத்திற்கு மின்சாரம்..
பெண்ணுக்குச் சீர்வரிசை
பிரசவச் செலவு..
அரைக்க, துவைக்க
வங்கிக் கடன் வஞ்சியர்க்கு..
வாங்கிய கடன்
வட்டியுடன் தள்ளுபடி
விவசாயிக்கு..
நான் எதற்கு
உழைக்க வேண்டும்..
நாட்டைப் பற்றிச்
சிந்திக்க வேண்டும்..?
தேர்தலின் போது மட்டும்
திறந்தால் போதுமே
தாழ்பட்ட வாயிலை..!
Full story
- Tuesday, December 28, 2010, 11:03
- கவிதைகள்
- 1 views
யுகநிதி, மேட்டுப்பாளையம்
உறங்கியும் உறங்காமலும்
என் தாயின் சிறகுகளுக்குள்
நான் புதைந்து கிடந்த
அந்த இரவுகள்..
எந்தையொடு
தேயிலைக் காட்டு மலைகளில்
ஏறி இறங்கி
கடைகளுக்கும்
திரை அரங்குகளுக்கும்
நடந்த அந்தக் குளிர்ப் பொழுதுகள்..
பள்ளிக்குச் சென்று வருகையில்
மூங்கில் காடுகளினிடையே
புத்தகத்தை வைத்துவிட்டு
விளையாடி மகிழ்ந்த
அந்த இளைய காலங்கள்..
பனி சிந்தும்
நிலாப்பொழுதுகளில்
வரிசையான வீடுகளின்
முற்றத்தில்
அம்மாக்களும்.. பாட்டிகளும்..
கதைசொல்லி
அமர்ந்திருக்கையில்
கண்ணாமூச்சு ஆடிய
அந்த நிமிடங்கள்..
விடுமுறை நாட்களில்
தூரத்திலோடும் ஆற்றுநீரை
சுமந்து வருவதும்..
வீட்டுக்கு விறகு
சேர்ப்பதும்..
அந்தி வெய்யிலில்
கோலி, கில்லியில் எங்களை
இணைத்து கொள்வதும்..
அப்பப்பா..
இப்படி பின்னோக்கிய
எல்லாப் பொழுதுகளும்
நினைவுகளாய் முன்வந்து
நெஞ்சை நிரப்புகின்றன..
அறுபதுக்கும் எண்பதுக்கும்
இடையேயான
இனிய பாடல்கள்..!
Full story