Posts Tagged ‘ராமலக்ஷ்மி’

Page 1 of 212

மழலையின் பாட்டு

மழலையின் பாட்டு
  ராமலஷ்மி விண்மீன்களையும் வெள்ளிநிலவையும் காட்டிமடியில் கிடத்தித் தொட்டில் போல் ஆட்டிகுழந்தையை உறங்க வைக்கிறவளின் வானம்முகிலாடையால் மூடிக் கிடந்தது எங்கோ நடுங்கிய பூமியின் அதிர்வால்பொங்கிடலாம் கடல் என்றார்கள் வயிற்றுக்காக வலைவீசப் போயிருந்தசொந்தங்களின் நினைப்பால்கலங்கிய மனதைக் காட்டிக் கொள்ளாமல் வீசும் காற்று பிடில் வாசிக்கபாசத்துடன் பாடுகிறாள் கண்ணே கண்ணுறங்கென. கேட்ட கடலோரக் கூழாங்கற்களும் சிப்பிகளும் நாளெல்லாம் உருண்ட களைப்பில் சொகுசாய் மணலுள் புதைந்து கண் அசர சமுத்திரத் தாயின் அதட்டலுக்குப் பயந்துசமர்த்தாக அலைகள் ... Full story

சாதனை அரசிகள்!

சாதனை அரசிகள்!
ராமலஷ்மி தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்குச் சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், ... Full story

உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?

உழைக்கப் பிறந்தவர்களா குழந்தைகள்?
ராமலக்ஷ்மி இந்த உலகத்தில் உண்மையான அமைதி நிலவ வேண்டுமானால் அதைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும்’ என்றார் தேசப் பிதா. அவர் சொல்லிச் சென்ற எதைக் கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம் இதை மட்டும் விட்டு விட்டதாக வருத்தப்பட? எந்த சிசுவும் தன் பிள்ளைப் பிராயத்தில் உழைப்பதற்காக இப்பூமியில் ஜனிக்கவில்லை. விடைதெரியாத காலக் கணக்குகளால் துளிர்விடும் மொட்டுகளில் பல, மலர வகையின்றிக் குடும்பமாகிய தாய்ச் செடிகளின், சமூகமாகிய மரங்களின் பாதுகாப்பை இழந்து உதிர்ந்து ... Full story

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
ராமலக்ஷ்மி கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை. எனது ... Full story

விழியனின் இரு நாவல்கள் – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி இன்றைய குழந்தைகளுக்குக் கணினி விளையாட்டுகள், கார்ட்டூன் படங்கள் இவையே பிடித்தமான பொழுது போக்குகளாகி வருகின்றன. அதே கணினியும் தொலைக்காட்சிப் பெட்டிகளுமே பெரியவர்களின் நேரத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு வருகையில் வாசிப்பை எப்படிக் குழந்தைகளிடம் வளர்ப்பது? தாமும் மாறி, குழந்தைகளுக்கும் வாசிப்பை ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாற்ற வேண்டியது பெற்றோரின் அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிறது. பாடப் புத்தகங்கள் அறிவை வளர்க்குமெனில் நல்ல குழந்தை இலக்கியங்கள் நாளைய உலகை எதிர்கொள்ளத் தேவையான நேர்மையை, மன வலிமையை, நற்பண்புகளை, நல்ல பழக்க வழக்கங்களை ... Full story

எல்லாம் புரிந்தவள்

ராமலக்ஷ்மி மகளின் மழலைக்கு மனைவியே அகராதி. அர்த்தங்கள் பல முயன்று தோற்று ‘அப்பா அம்மாவாகவே முடியாதோ..’ திகைத்து வருந்தி நிற்கையில் புரிந்தவளைப் போல் அருகே வந்தணைத்து ஆறுதலாய் முத்தமிட்டு எனக்கு அம்மாவாகி விடுகிறாள் அன்பு மகள். ====================================== படத்திற்கு நன்றி: http://www.istockphoto.com Full story

மின்னல் தென்றல் புதையல்..- காதல் காதல் காதல்..

ராமலக்ஷ்மி மின்னல் இரவு வானும் நட்சத்திரங்களும் முழு நிலவும் பனிக் காற்றும் மழை மேகமும் மின்னல் கீற்றும் ரசனைக்குள் வந்தபோதுதான் புரிந்தது.. வாழ்வை அற்புதமாக்கும் மந்திர சக்தி, காதலென்பது. தென்றல் தீண்டிய யாவரையும் ததும்பச் செய்தது காதலால் தென்றல்.. காற்றுவெளியை நிறைத்த காதல் குறுஞ்செய்திகளில் குளித்த களிப்பில். புதையல் வெண்டைப் பிஞ்சு விரல்கள் ரோஜாப்பூ இதழ்கள் மான்போல் மருளும் விழிகள் தேன்போல் ஒலித்தது சிணுங்கல் பூக்குவியலாய் கையில் புதையல் மகவை ஏந்திய அக்கணத்தில்.. பெருகியது ஈன்ற உன்மேல் பன்மடங்காய்க் காதல்! ======================== படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா Full story

தோழமை

ராமலக்ஷ்மி ’காலத்துக்கேற்ப மாறவே மாட்டாயா?’ கடந்து செல்லும் மனிதரில் எவரேனும் ஒருவர் கணை தொடுத்த வண்ணமாய். ‘முயன்றுதான் பார்ப்போமே’ முளைவிட்ட பிரயத்தனங்கள் தளிர்விடும் முன்னே உயிர்விட... திகைத்து நின்ற வேளையில் ‘ஏன் மாற வேண்டும்? நீ நீயாகவே இரு பிடிக்கிறது அதுவே எனக்கு’ காலை வெயிலின் இதமென கனிவாக நட்பொன்று சொல்ல சட்டென்று மொட்டவிழ்ந்தாற்போல் முகிழ்ந்தது மாற்றம் படபடத்துத் திறந்த மனதினுள்ளிருந்து அணிவகுத்து மேலெழுந்த பலநூறு பட்டாம்பூச்சிகளின் எழில் வண்ண சிறகோவியங்களில் பிரமித்து கிளம்பிய கைதட்டல்களில் வந்தது பெருமிதம் தோள்நின்ற தோழமையை நினைத்தே. Full story

செல்வக் களஞ்சியங்கள்

-ராமலக்ஷ்மி ஆண் என்றால் வரவு. பெண் என்றால் செலவு. பெற்ற பிள்ளைகளில் ஆணே வயதுக் காலத்தில் துணையிருப்பான். பெண் பிள்ளை என்றைக்கும் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியவள். காலாகாலமாய்த் தொடரும் பாடாவதிக் கருத்துகள்தான். பெண்கள் எத்தனை சாதித்துக் காட்டி என்ன போயிற்று? இன்றைக்கும் கருவறைக்கே வேண்டாத விருந்தாளியாகத்தான் இருக்கிறாள் என்பதுதான் வேதனை தோய்ந்த உண்மை. எல்லோருக்கும் தெரிந்த, எத்தனயோ பேரால் வேறு வேறு வார்த்தைகளால் அடிக்கடி சொல்லப்பட்டவைதானே எனத் தோன்றலாம். கள்ளிப்பால் கதைகளும், கருவிலேயே பெண்சிசுக்களின் உயிர்த் ... Full story

வயலோடு உறவாடி..

ராமலக்ஷ்மி சித்திரைத் திருநாள் நெருங்குகிறது. ஆண்டாண்டுக் காலமாய்த் தமிழ் வருடப் பிறப்பாக அனுசரிக்கப்பட்ட தினத்தை மாற்றியது சரிதானா எனும் வாக்குவாதங்கள் இன்னமும் கூடத் தொடர்கின்றன. ஆனால் அவனுக்குப் பிடித்திருந்தது. 'வயலோடு விளையாடி வயலோடு உறவாடி வயலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே' ஐபாடிலிருந்து வழிந்த பாடலின் வரிகளை மாற்றிப் பாடியவனாய், ஊருக்குப் போனபோது எடுத்த படங்களைப் பிக்காஸாவில் தரவேற்றிக்கொண்டிருந்த சுந்தரேசனுக்கு, உழவர் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிப்பானதும் அனுசரிக்கப்படுவதும் மிக மிகப் பிடித்திருந்தது. “கூப்பிடக் கூப்பிட பதில் இல்லாதப்பவே நினைச்சேன், இதக் காதுல மாட்டியிருப்பீங்கன்னு. சாப்பிட வாங்க. சன்டேதான். அதற்காக ... Full story

ஊக்கமது கைவிடேல்

-ராமலக்ஷ்மி நரேனுக்கு அந்த மின்மடலை வாசித்ததும் வியர்த்து விறுவிறுத்துவிட்டது. இதை எப்படித் தன் மேலதிகாரியிடம் சொல்லப் போகிறோம் என்கிற பதற்றத்தில உடல் கூட லேசாக நடுங்கியது. அவன் அந்த மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடமே ஆகிறது. ஒரு பெயர் பெற்ற நிறுவனத்தில் பல வருடங்கள் வேலை செய்த அனுபவத்தில் அதைத் தொடங்கிய ரவிசங்கர் இன்று பலரும் போற்றும் அளவுக்கு அதைப் பெரிய இடத்துக்குக் கொண்டு வந்துள்ளதைக் கொண்டாடாத பத்திரிகைகள் இல்லையெனலாம். அப்படிப்பட்ட நிறுவனத்தில் அதுவும் எம்.டி.யிடம் நேரடியாக ரிப்போர்ட் ... Full story

மறுகூட்டல்

-ராமலக்ஷ்மி மறுபடி மறுபடி கூட்டிப் பார்த்தான் குணா. எத்தனை முறை கூட்டினாலும் தொன்னூற்றெட்டே வந்தது. ஆசிரியரோ முதல் பக்கத்தில் நூற்றுக்கு தொன்னூற்றைந்து எனப் பெரிதாக வட்டமிட்டுக் காட்டியிருந்தார். 'தப்பு விட்டதோ ஒரே ஒரு ரெண்டு மார்க் கணக்கில். ஒருவேளை எதேனும் ஒரு கேள்வியை விட்டிருப்பேனோ?' வினாத்தாளை வைத்துக்கொண்டு பார்த்தால், அப்படியும் தெரியவில்லை. சரியெனப் பக்கத்திலிருந்த பாலனிடம் கொடுத்துக் கூட்டிப் பார்க்கச் சொன்னான். பாலன் திணறித் திணறி இரண்டு முறை சரி பார்த்ததிலும் அதே தொன்னூற்றெட்டு. “போடா, போய் உடனே சார்கிட்டே சொல்லு. கூட்டலிலேதான் ... Full story

தொழில் நேர்த்தி

-ராமலக்ஷ்மி சந்துருவுக்குச் சந்தோஷமாக இருந்தது தன் தொழில் நேர்த்தியை நினைத்து. ஐந்து வருடங்களில் தனி ஆளாக இருபது முகமூடிக் கொள்ளைகள் நடத்திவிட்டான். ஏடிஎம், ஒதுக்குப்புறமான தனி வீடுகள், சில பல கடைகளின் கல்லாக்கள் என அவன் கைவரிசை காவல் துறைக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வந்தது. போலீசாரின் திறமையைப் புகழ்ந்து ஏதேனும் செய்தி பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ வந்தால் தாங்க முடியாத சிரிப்புத்தான் வரும் அவனுக்கு. அன்றைய பிராஜக்ட்டையும் போட்ட திட்டம் இம்மியும் பிசகாமல் முடித்து விட்டிருந்தான். அவன் குறி வைத்தது ... Full story

பால் நிலா

- ராமலக்ஷ்மி மொட்டு அது தானாகக் கட்டவிழும் முன்னே பட்டுடுத்தி அலங்கரித்துப் பாதந்தனைப் பற்றியெடுத்து அம்மிமேல் வைத்தழுத்தி அருந்ததியைப் பார்க்கவைத்து கட்டிவைக்கிறார் அவசரமாய் கடமையை முடித்திட..! ஈரைந்து திங்களிலே ஆடுகிறது தொட்டில். தொலைத்திட்ட அவள் பருவம்போலத் துலங்குகின்ற பால் நிலவை- அழைக்கின்றாள் தேன்குரலில் அழகாகத் தன் தாலாட்டில் குழந்தைக்கு அமுதூட்டத் துள்ளியோடி வருமாறு..! Full story

பொட்டலம்

- ராமலக்ஷ்மி அழுது சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாகத் திரும்பிப் பார்த்து விட்டு, அடுப்பில் வைத்திருந்த குழம்பைக் கிண்டுவதில் மும்முரமானாள் சீதா. "என்னா இன்னிக்கு எவங்கிட்டே மாட்டுனே? ஆம்புளப் புள்ளன்னா கொஞ்சமாவது அடாவடியா நிக்கத் தெரியணுமடா! வெளையாடப் போற இடத்தில இப்படியா தெனசரி அடி வாங்கிட்டு வருவே?" வழக்கமாய் வந்ததும் வராததுமாய் பையை ஒரு மூலையில் வீசி விட்டு, தன் காலை கட்டியபடி அன்றைய நிகழ்வுகளைச் சந்தோஷமானதோ, சங்கடமானதோ ஓடி வந்து சொல்லும் பிள்ளை, குரல் கொடுத்து பத்து ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.