பாடல்களுக்கான உரிமம் அவசியம்:சிம்கா தலைவர் சுதா ரகுநாதன் அறிவிப்பு – செய்திகள்

0

சென்னை : தென் இந்திய இசை வெளியீட்டு நிறுவனங்கள் சங்கம் ’சிம்கா’(SIMCA – South India Music Companies Association) சென்னை தி. நகரில் செயல்பட்டு வருகின்றது.  இதன் தலைவராக பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பொறுப்பு வகிக்கிறார்.

மொபைல்போன் சிப்களில் சிம்கா உரிமம் இல்லாமல் பாடல்களை பதிவிறக்கம் செய்து தருவது சட்டப்படி குற்றம் என்றும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிம்கா தலைவர் பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அறிவித்துள்ளார்.  இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டி பின் வருமாறு:-

“SIDMM என சுருக்கமாக அழைக்கப்படும் சவுத் இன்டியா டிஜிட்டல் மியூசிக் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிட் நிறுவனம், (South India Digital Music Management Private Limited) திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் மற்றும் சாஸ்த்ரீய சங்கீதப் பாடல்களை தயாரித்து வழங்கக் கூடியவர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது.

இதில், 5 ஸ்டார், மாஸ், ஸ்டார் மியூசிக், லக்கி ஆடியோ,பெரும்பாலான இளையராஜா பாடல்களின் உரிமம் பெற்ற அகி மியூசிக் உள்ளிட்டவை அடங்கும். தொழில் நுட்பப் புரட்சியின் புதுப்புது கண்டுப்பிடிப்புகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு வரும் (SIMCA) சிம்காவால் அங்கீகரிக்கப்பட்ட SIDMMPL, 30வருடங்களுக்கும் மேலான சூப்பர் ஹிட் பாடல்களின் உரிமம் பெற்றுள்ளது.  பல்வேறு கலைஞர்களின் உழைப்பின் வியர்வையால் உருவாக்கப்பட்ட, பலரால் பணம் முதலீடு செய்யப்பட்ட இசையும், பாடல்களும் யாருக்கும் இலவசம் கிடையாது.

இதற்கிடையே சில சில்லரை வியாபாரிகள், தொழில் போட்டி காரணமாக, மொபைல் போனுடன் சிப் வாங்குவோருக்கு இலவசமாகவே பாடல்களை பதிவிறக்கம் செய்து தருவதாக சொல்லி, அது குற்றமற்ற செயல் என்பதுபோல காட்டி வருகின்றனர்.  1957 இந்திய காப்புரிமைச் சட்டப்படி பாடல் இசையை பதிவு செய்து, உரிமம் பெறாமல் வியாபாரம் செய்வது குற்றமாகும்.

அப்படியானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.  எனவே இதுவரை உரிமம் இல்லாமல் பாடல்களை பதிவு செய்பவர்கள் இனி அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்.

மொபைல் சிப்பில் பாடல்களை பதிவு செய்து தருபவர்கள், இனி சிம்காவால் அங்கீகரிக்கப்பட்ட SIDMMPL-ன் CELL MUZIK உரிமம் பெறுவது அவசர அவசியமானது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.  இந்த உரிமத்தை அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கட்டணத்தை செலுத்தி நீட்டித்துக்கொள்ளலாம்.  இதனால் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம்.இணையதளங்கள் மூலம் பாடல்கள் கேட்கப்படுவதையும், பதிவிறக்கம் செய்யப்படுவதையும் முறைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *