செழியன்

முப்பாலுக்கு ….
மூன்று விரல் காட்டி
உப்பு காற்றில்
உயரமாக நிற்குமாறு வள்ளுவனுக்கு
குமரியிலே
கடற்கரைக்கு அப்பால்
கடலில் வானுயர சிலை
அங்கு ……
வானம்தான் கோபுரம் .
மழை நீர்தான் அபிசேக நீர் .
ஆர்ப்பரிக்கும் அலைகளின் ஓசைதான்
அர்ச்சனை மந்திரம் .. அவனுக்கு .
இயற்கையே அவனை
இப்படி வணங்குகிறது .
படையலும் – பழியும் கேட்கும்
சாமி படங்களை
வீட்டில் வைத்து இருக்கும்போது
வாழ்வியல் வழங்கிய வள்ளுவனுக்கு
வாழும் இல்லத்தில் நாம்
வைப்போமே அவன் உருவப்படத்தை!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “வைப்போமே!

  1. வள்ளுவர் படமும் திருக்குறள் புத்தகம் ஒன்றும் தமிழர்கள்
    வீட்டில் அவசியம் இருக்க வேண்டியவை. அடியேன் அவைகளை
    வைத்திருப்பதோடு என் வீட்டிற்கு ” திருவள்ளுவர் இல்லம் ” என்றே
    பெயர் சூட்டியுள்ளேன். “வள்ளுவருக்கு தாடி உண்டா? யார் அவரைப்
    பார்த்துள்ளார்கள்?” என்ற கேள்வியை என்னிடம் ஒருவர் கேட்டார்.
    அவரிடம், ” இப்போது உள்ள சுவாமிகளின் உருவங்கள் அதாவது
    முருகன், கிருஷ்ணன், சிவன், விநாயகர் போன்ற உருவங்களை
    யார் பார்த்துள்ளார்கள்? அந்த உருவங்களை எப்படி நம்புகிறீர்கள்?
    அதைப் போல இதையும் நம்புங்கள்!” என்று சொன்னேன்.
    இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *