சீராசை சேதுபாலா

இந்த மேளாவின் குறிக்கோள்கள் என்ன?

1. பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுவாக இளைஞர்களுக்கும் ஆரோக்கிய வாழ்வு பற்றி வழிகாட்டுவதோடு, இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்
அவர்களுடைய பங்களிப்பை வேண்டுதல்.

2. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

3. வாழ்வுமுறை தொடர்பான நோய்களைத் தடுப்பது குறித்து, பல்வேறு அறிவியல்அமைப்புகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தி, அவர்களை இன்னும் அதிகமாக
ஈடுபடுத்துதல்.

4. இன்றைய, எதிர்கால, இளைஞர்களின் நலவாழ்வினை மேம்படுத்தும் விதமாக, அவசரக் கொள்கை மாற்றங்களையும், சுகாதாரத்துறையில் தேவைப்படும் குறுக்கீடுகளையும் எல்லாத்தளங்களிலும் தொடங்குதல்.

இது வணிக நோக்கு அறவே அற்று, தன்னார் வத்துடன் செய்ய முன்வந்திருக்கும் நிகழ்வாகும். சொல்லப் போனால், இந்த மேளாவின் மையக்கருத்துக்கு எதிர் திசையில் செயல்படும் பெரு வணிக நிறுவனங்களுடனும், லாப நோக்கில் மட்டுமே செயல்படும் தனியார் மருத்துவ நிறுவனங்களுடனும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்து செயல்பட்டு வருகிறார்கள் இந்நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்.

இது, வணிக நோக்கம் அறவே இல்லாத தன்னார்வ நிகழ்வு. அதோடு, சமுகத்தின் எல்லாத் தளங்களிலும் உள்ள மக்களின் நல வாழ்விலும், நோய்த்தடுப்பு
மருத்துவத்திலும் அக்கறையும் ஆர்வமும் கொண்ட அமைப்புகள், ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து, சமூகத்தின் அணுகுமுறை மீதும், அரசின் கொள்கைக் கோட்பாடுகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் மீதும், போதிய அழுத்தம் ஏற்படுத்துவதற்கு, இந்த மேளா ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்று நம்ப இடமுண்டு. பின்வரும் காலங்களில், மக்கள் ஆரோக்கியம் தொடர்பாக ஒரு இயக்கமாக மாறுவதற்கான வாய்ப்பும் இந்த மேளா மூலம் ஏற்படும்
சாத்தியக்கூறுகள் உண்டு.

இந்த மேளாவானது, வருகிற ஃபிப்ரவரி மாதம், 22 முதல் 26 வரை, ஐந்து நாட்களுக்கு, சென்னை வள்ளுவர் கோட்ட வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த
நிகழ்வில், மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கு பெற்று, கண்டுகளித்து பயன்பெற வேண்டும் என்பதே, இந்த நல்ல நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்களின் விருப்பம்.

 

இந்த மேளாவை வெற்றிகரமாக நடத்து வதற்காக இணைந்துள்ளவர்கள்:

இணைந்துள்ளவர்கள் (Partners):

அடையாறு புற்றுநோய் மையம் (CI)

இந்திய நுகர்வோர் சங்கம் (CAI)

சூழல் அறிவியல் ஆய்வு நிறுவனம் (ERF)

இந்திய பல்மருத்துவர்கள் சங்கம் (IDA), சென்னை

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA)

சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை (MMC & RGGGH)

மேரி அன்னி அறக்கட்டளை (MACT)

பாடம் – குன்றா வளர்ச்சிக்கான தமிழ் மாத இதழ்

சாய் கிரியேசன்ஸ்

ஸ்பார்க் மையம் (SPARRC)

தமிழ்நாடு அரசு பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி (TNGDC&H)

தமிழ்நாடு தன்னார்வ சுகாதார சங்கம் (TNVHA)

உதவும் உள்ளங்கள் (UU)

நிகழ்வுச் செயலகம்:

அடையாறு புற்றுநோய் மையம்

எண்.38, சர்தார் படேல் சாலை, அடையாறு,

சென்னை – 36. அலைபேசி: 7299960615

E&mail&secretary@youthhealthmela.in

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “யூத் மேளா!

  1. அனைவருக்கும் உபயோகமான செய்தி செய்தியினை பகிர்ந்தமைக்கு நன்றி.மேளா
    சிறக்க வாழ்த்துக்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *