கவிதைப் பட்டறையில் பங்கேற்க வாரீர்

1

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து கவிதைப் பட்டறை ஒன்றை நடத்த உள்ளன. அது தொடர்பான  செய்திக் குறிப்பு வருமாறு:

நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? ஏதாவது வலைத்தளத்தின் இலக்கியப் பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து கவிதை பட்டறை ஒன்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த உள்ளன. (முகவரி: 31, பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள தமிழ்க் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com என்ற இணையதளத்தில் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 2010 ஆகஸ்டு 21 முதல் 23 வரை இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்தத் தகவலைத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி உமாஷக்தியை 98409 78327 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கவிதைப் பட்டறையில் பங்கேற்க வாரீர்

  1. அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

    கவிதைப் பட்டறை இனிதே நடக்கட்டும்

    நான் இப்போது துபாயில் இருப்பதால் அடுத்த நிகழ்வில் கலந்துகொள்ள முயல்கிறேன்

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *