மறவன்புலவு க. சச்சிதானந்தன்

விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூருக்கு நான்கு வழிப்பாதை உடனடித்தேவை. காலத்தைக் குறைத்து, தூரத்தை விரைந்து கடக்க அரசு முன்னெடுத்துச் செல்லும் அரிய திட்டம்.

அந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகையில் வழியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அழிந்து போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுவது என் கடன்.

தமிழரின் அறிவியல் பராம்பரீயம், கட்டடக் கலைப் பராம்பரீயம், தமிழ் மொழிக் காப்புப் பராம்பரீயம், வாழ்வுக்குரிய ஒழுக்க நெறிப் பராம்பரீயம், இசை, நடனம், நாடகம், சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைப் பராம்பரீயம் யாவும் தரைமட்டமாகும் முயற்சியே அந்த நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிக்காக அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை பனங்காட்டுநாதர் கோயிலை உடைக்கும் முயற்சி.

வானிலை அறிவியலை வளர்க்கும் முயற்சியாக, சூரியனின் கதிர் எந்த நாளில் திருப்புறவார்பனங்காட்டூர் (பனையபுரம்) நேர்கிழக்காக நிற்கிறது என்ற கணிப்பைத் துல்லியமாகக் காட்டும் அறிவியல் ஆய்வின் பேறாக, சித்திரை முதல் நாள் முதலாக ஏழாம் நாள் ஈறாக ஒவ்வொருநாளும் சூரியன் தோன்றும்பொழுது, சுவாமிமேலும் அம்பாள் மேலும் கதிர்கள் விழுமாறு கட்டிய நம் முன்னோரின் முயற்சியை முறியடிக்க விழைவோர் அக்கோயிலை நான்கு வழிச் சாலைக்காக இடிப்பர்.

பார்க்க: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=210

தமிழ் மொழியின் யாப்பிலக்கண மரபு, சொல்லாட்சித் திறன், சொல்வளப் பெருக்கம், தமிழுக்கும் இசைக்கும் உள்ள நீண்ட இறுகிய பிணைப்புக் கொண்ட செம்மாந்த தமிழைப் படிப்பவன் வாழ்வான், தமிழால் இறைவனுடன் பேசலாம் என்ற செய்திகளை அந்தக் கோயிலுக்கு வந்த திருஞானசம்பந்தர் எடுத்துக் கூறியுள்ளார்.

தேன் நிறைந்த பசுமையான பொழில்களால் சூழப்பட்ட புறவார் பனங்காட்டூர் ஐயனை, காழியுள் தோன்றிய நான்மறை வல்ல ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் (திருமுறை 02053) செய்யுளைப் பாடவல்லவர் சிவநெறியாளரே, ஒழுக்க சீலரே என்கிறார் அவர். விண்ணார்ந்த (திருமுறை 02053) எனத் தொடங்கும் சீகாமாரப் பண்ணில் அந்தப் பதிகம் 1,400 ஆண்டுகளாக அக்கோயிலில் தொடர்ந்து இசைக்கப்படுகிறது.

பார்க்க:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=2&Song_idField=2053&padhi=122+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

திருக்கோயில் காணொலி காண்க, பாடல்களைத் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையில் கேட்க, பாடல்களுக்குப் பொழிப்புரை, குறிப்புரை காண்க, ஆங்கில மொழிபெயர்ப்புப் படிக்க.

அரபு, ஆங்கிலம், ஆப்பிரிக்கன்சு, உருசியன், குறி-உரோமன், கன்னடம், கிரியோல், சிங்களம், சீனம், சுவாகிலி, ஞாலஒலிநெடுங்கணக்கு, தாய்லாந்து, தெலுங்கு, தேவநாகரி, பர்மியம், பாசா-இந்தோனீசியா, பிட்சின், மலாய், மலையாளம், யப்பான், யேர்மன் ஆகிய 20 மொழிகளின் வரிவடிவங்களில் ஒலிபெயர்ப்புக் காண்க.

ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பும் இருந்தால் காண்க.

மேற்காணும் படத்தில், நால்வழி நெடுஞ்சாலைக்காக, எந்தப் பகுதி இடிக்கவேண்டும் என்பதைக ஆட்சிப் பொறியியலாளர் குறியிட்டுச் சென்றதைக் காட்டுகிறார் நெஞ்சை உலுக்கும் செய்தி சொன்ன அடியார்க்கு அடியவர்.

முதலாம் குலோத்துங்க சோழனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு, பரகேசரி ஆதி ராஜேந்திர தேவனின் மூன்னாம் ஆண்டுக் கல்வெட்டு என, அங்குள்ள வரலாற்றுச் செய்திகளை, நான்கு வழிச்சாலைக்காக உடைக்கலாமா?

பனை மரத்தைத் திருக்கோயில் திருமரமாக உடைமையால் பனங்காட்டூர். 3,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழப் பேரரசன் சிபி. புறாவின் பொருட்டுத் தன் தசையை அரிந்திட்ட அச் சோழன் சிபிப் பேரரசனக்கு அருள்செய்த திருக்கோயில் எனவே புறவார் பனங்காட்டூர்.

விழுப்புரம் தொடர்வண்டி நிலையத்திற்கு வடக்கே முண்டியம்பாக்கம் தொடர்வண்டி நிலையம். வடகிழக்கே 1.5 கிமீ. தூரத்தில் இத் திருக்கோயில். விழுப்புரம் (திருக்கனூர் வழி) பாண்டிச்சேரி செல்லும் பேருந்துகளில் கோயிலை அடையலாம். இது நடு நாட்டுத் திருக்கோயில்களுள் ஒன்று.

முகவரி: பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம், விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம், 605603, தொபே. 9444897861

உலகெங்கும் 40 நாடுகளில் பரந்து வாழும் சைவப் பெருமக்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் திருப்புறவார் பனங்காட்டூர் செல்வர். வழிபடுவர். வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிடுவர். மரபை நினைவில் நிறுத்துவர். வேர்களைத் தேடுவர்.

தமிழர்களின் வேர்களையே அழிக்கும் முயற்சியே, அக்கோயிலை இடிக்கும் முயற்சி. அக்கோயிலைச் சுற்றி ஒரு கிமீ. சுற்றுவட்டாரத்தில் எந்த இடிபாட்டுப் பணியும் மேற்கொள்ளலாகாது.

 அரசுக்குக் கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் செல்க

National Highway- 45C
nearest place—thirukkanur road junction with NH45C
land mark—– panangkaattu Iswar temple
City/Town/Village — villuppuram/Mundiyampaakkam/Panayapuram .605603
My complaint– Panyapurma temple is located very near to Panayapuram Kootu road.Kms from Villupuram on the Villupuram – Tirukkanur – Pondicherry road. It is about 10 Kms. from Vikravandi on the Tindivanam – Vikravandi – Panruti road .An Ancient Temple of Shiva sung by the Saint Thiru Gnaanasampanthar.this temple which is an excellent memorial of ancient Tamil architecture and mathematical genius- It is constructed in such a way that on the First day of the Indian New Year ( Chithirai 1st) the sun worships the lord and Amman with it’s rays.
This temple is slated for destruction for the expansion of NH45C .
Please avoid destructing a sacred monument of cultural and religious importance.

படத்திற்கு நன்றி :

http://temple.dinamalar.com/New.php?id=968

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை?

  1. அன்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
    பண்டைய திருக்கோயில்களைச் சீரழிக்கும் இதுபோன்ற பணிகளுக்குத் தமிழக அரசு துணைபோகது என்பது உறுதி.  தன் சொந்த நிலங்களைக் கோயில்களுக்குத் தானமாக வழங்கிய தமிழகத்தில், கோயில்இடத்தைப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் அவலநிலையைத் தடுப்போம்.
    அன்பன்
    கி.காளைராசன்

  2. As Saivaites, so far we have not joined hands to protect our fellow saivites, nor saiva symbols. One would be surprised to know that 1000 years ago many villages in Lanka were the properties of the Brihadeeswara temple of Tanjavur. The Saivites, having thrown in their lot with scoundrels and scallywags (since independence from the British) in spite of their mud spattering on Sivaism (that has fed some of their families) and coronating them often, had to pay dearly for the inexcusable wrong from the very scoundrels they coronated.
    Further elaborations would be superfluous.
    Now every scavenger wishes to make inroads into the Saiva territory. 
    God Siva alone could solve these problems by sending someone like Sambadar or Appar.

  3. சச்சி ஐயாவின் கூற்றினை வழிமொழிகிறேன். இந்த ஆபத்திலிருந்து அருள்மிகு அமிர்தவல்லி உடனுறை பனங்காட்டுநாதர் கோவிலைக் காக்க, தமிழக அரசின் அறநிலையத் துறை, தொல்லியல் துறை ஆகியவை தலையிட வேண்டுகிறேன்.

  4. மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயாவின் கூற்றை நானும் வழி மொழிகிறேன். 

    அன்புடன்

    பவள சங்கரி.

  5. வேதனைக்குரிய செய்தி.
    இதனை வெளியிட்டு அறியத்தந்த சச்சிதானந்தம் ஐயாவிற்கு
    எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை.

    நமது தொன்மங்களை அழியவிடக்கூடாது. அதற்காக
    நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
    பாடல்பெற்ற புறவார் பனங்காட்டூர் தலத்தை எவ்விலை கொடுத்தேனும்
    காத்திடல் வேண்டும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  6. தமிழீழத்தில்தான் எங்களின் சைவக்கோவில்களை இடித்து புத்தகோவில் கட்டுகின்றானே என்று நாங்கள் கதறும்போது,அடப்பாவிகளா! நம்மவனே கோடரிக்காம்பாகி எங்களின் ஆலயங்களை இடிப்பதா?
    தனி ஒருவனின் உழைப்பிற்காகக் கட்டப்பட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக் கொவிலுக்காக அதிவேக நெடுஞ்சாலையை அமைத்தவர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பாடல்பெற்ற எம்பெருமானின் ஆலயத்தை இடிப்பதா?
    இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.

  7. நெஞ்சை உலுக்கும் இந்த சேதி – செய்யப்போவதாக உத்தேசித்த வெற்றுச் சேதியாகவே நின்றிடட்டும் – 

    அற்புதமான இத்திருக்கோயிலை இடிபாட்டிலிருந்து காப்பாற்ற அனைவரும் ஒருமித்து எழ வேண்டும் – கணமும் தாமதியாது இயங்கவேண்டிய தருணமிது.

    அரசுத் தலைமை – அறநிலையத்துறை – தொல்லியல் துறை ஆகியனவற்றுக்கு – இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு நிறுத்த வேண்டு கோள் விடுவதோடு –  இது போன்ற உத்தேசங்கள் எதிர் வரும் காலத்தில் எங்கும் எழாதவாறு காக்கும் அரசுத் தடை ஆணையும் விதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 
     

  8. பாடல் பெற்ற தலம் பாதுகாக்கப்படவேண்டியது. கோயிலை இடிக்காமல் பாதையை வளைக்கலாமே! மேற்கு நாடுகளில் இது கனவிலும் நடக்க விடமாட்டார்கள்

  9. தெய்வத்திற்காக அடியவர்கள் வளைந்து கொடுக்க வேண்டுமே தவிர தெய்வத்தைத் தன் போக்கிற்கு வளைத்தல் ஆகாது. இந்தச் செயலும் அப்படித்தான். கோயிலிலிருந்து சிறிது தள்ளியே பாதையை வளைக்கலாமே.

  10. நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை அனுப்பும் படிவத்தில் நெடுஞ்சாலையின் எண் குறிப்பிடப்படவேண்டும் – இதனைக் கட்டாயத்தேவையாக இந்த விண்ணப்பம் கேட்கிறது .
    எனவே இந்த எண்ணை உடனடியாகத் தெரிவிக்கவும் – சச்சி ஐயாவின் படைப்புக்குள்ளேயே இந்த எண்ணை இட்டு மீண்டும் பிரசுரிக்கவும். 

  11. Pl. enter the following:in Section B:: National HWY # 45 C. Nearest Place; Mundiyampakkam. Prominent Landmark: Famous pananggaattur Siva Temple. City: Villuppuram Dt. State : Tamilnadu. In section C : Complaint Category: Others. Then skip to the complaints/suggestions box and type: For the sake of broadening the highway into a 4-lane road, this prominent Hindu Siva Temple is in danger of being demolished, which should be STOPPED. Then submit. Dont forget to fill in your details in section A. Hope this helps.

  12. இங்கே மறுமொழி தந்திருக்கும் அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள். இந்தியர்களாகிய நாம் செயலில் இறங்குவதை மட்டும் வேறு யாராவது செய்வார்கள் என்ற நோக்குடனேயே இருக்கிறோம். இதை இவ்வாறு செய்ய வேண்டும், அதை அவர்கள் அப்படி செய்ய வேண்டும், சிவன் மட்டும் தான் இதைக் காக்க முடியும் போன்ற மறுமொழிகள் வெறும் இணையக் கூப்பாடுகளாக முடியுமே தவிர இதனால் பயன் ஒன்றும் விளையாது. ஒரு வேளை இதைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணம் மிகப் பலமாய் இருப்பின் அது ஒரு விளைவாக அமையலாம். அதனினும் மேலானது கட்டுரையாசிரியர் தந்துள்ள நேஷனல் ஹை வேஸ் இணைய தளத்தில் “ஐயா, இவ்வாறு செய்ய வேண்டாம்” என்று முறையிடுவது. நான் அதை செய்து விட்டேன், தங்களையும் அவ்வாறு செய்ய வேண்டுகிறேன். நமக்கு நாம் உதவா விட்டால் யாரும் வந்து உதவ மாட்டார்கள்.

    இப்போது ஆட்சியில் இருக்கும் செல்வி ஜெயலலிதா இத்தகைய செயல்களுக்குத் துணை போக மாட்டார் என்ற நம்பிக்கை இருக்கும் போதும், நேஷனல் ஹை வேஸ் பணிகளை எவ்வாறு மாநில அரசு இயக்கும் என்பது ஒரு கேள்வி.

    Google Maps shows this temple near NH 132. This can be marked as the NH and provide nearby place details. It can be searched in google maps with strings Panagateeshwaran Temple, Thirukkanur Road, Villupuram, Tamil Nadu, India

  13. Complaint Registration
    ———————————————————
    Complaint ID : OTH#1438
    Complaint Related to : Others
    Your Complaint has been registered successfully.

  14. மனதிற்கு கஷ்டம் ஆக இருக்கிறது ! அனைவரும் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் !

  15. முக்கிய செய்தி

    சு.சுவாமி மற்றும் அவரது சட்ட ஆலோசனைக் குழு மூலம் இந்த கோயிலின் பகுதியை இடிப்பதற்கு தடை வாங்கியாகிவிட்டது!

    நமச்சிவாய! முன்றைய தினமும் நேற்றும் தூக்க்கம் கெட்டது. ஒரு சில கடிதங்கள்,. ஓராயிரம் மக்கள் பிரார்த்தனை, சில நல்ல தொடர்புகளால் இது சாத்தியமானது. இத்தனை பேர் கவலை கொள்ளும் போது, கோயில்கள் பல இனி நிமிரும் என்ற நம்பிக்கை மலைபோல் வளர்ந்துவிட்டது!

    சந்திரா
    http://www.conserveheritage.org
    http://templesrevival.blogspot.com
    http://reachhistory.blogspot.com

  16. அழகான படம் 5.4.12 இந்து நாளிதழில்
    http://www.thehindu.com/arts/history-and-culture/article3283627.ece?homepage=true

    Road that may erase history
    T. S. SUBRAMANIAN

    The HinduThe temple at Panaiyapuram that has been marked for demolition to facilitate NH expansion. Photo: T. Singaravelou
    The NHAI’s plan to widen the Vikkiravandi –Thanjavur National Highway 45C will destroy a 1,300-year-old Siva temple.

    A 1,300-year old Siva temple, celebrated in the verses of Saivite saint Tirugnana Sambandar and boasting of inscriptions belonging to the Chola kings, is facing demolition by the National Highways Authority of India (NHAI). The Tirupuravar Panankateesvarar temple is situated in Panaiyapuram village, two km from Vikkiravandi in Villupuram district of Tamil Nadu. The Pennaiyar flows near Panaiyapuram. The temple is also called Paravaipuram.

    The NHAI, which is widening the Vikkiravandi –Thanjavur National Highway 45C, over a distance of about 160 km, has painted big arrow marks in white on the compound wall of the temple and inside its premises, where the widened road will cut through.

    The NHAI has placed stones outside the temple to signify the portions that will be lost to the highway’s widening. If this plan goes through, the temple’s sanctum sanctorum for Panankateesvarar, the adjacent shrine for the goddess Satyambikai and much of the temple premises including other shrines, will be demolished. This has shocked and angered about 4,000 Panaiyapuram villagers and residents of Pappanapattu, Mundiyambakkam, Kappiyampuliyur and Thuravi villages. They met the Villupuram District Collector, V. Sampath, and submitted a petitionto him.

    STRONG STAND
    R.P. Pugazhendhi, former president of the Panaiyapuram panchayat, said: “We are spending sleepless nights. Almost the entire temple including the sanctum, the shrines for goddess Satyambikai, Ganesa and Muruga will be demolished. Only the flag-post and the shrine for Saneesvarar will remain. There is enough land on the west of the temple for the broadened highway to go through or a new alignment can be given from the National Highway 45. We will not allow even a single stone from the temple to be removed.”

    R. Nagaswamy, former Director, Tamil Nadu Archaeology Department, said that the 1,300-year old temple was visited by the Tamil Savite saint Tirugnana Sambandar, who lived in the seventh century CE, and had sung verses celebrating the deity, a Sivalinga. The Sivalinga is called Panankateesvarar because the area abounds with palmyra trees.

    The temple has a number of inscriptions belonging to Rajendra Chola I (regnal years 1012 CE to 1043 CE), his son, Rajendra Chola II, Adhi Rajendra, Kulotunga I, Jatavarman Sundara Pandya I and Vikrama Pandya among others.

    Rajendra Chola’s inscription called the deity Nethrodharaka Swami (meaning, the main deity will cure eye ailments). The inscription recorded the gift of land and money for worship and making offerings in the temple. It spoke about Rajendra Chola’s conquest of Kadaram. (The present-day Kedda in Malaysia was called Kadaram and it belonged to Sri Vijaya kingdom). It revealed that the Chola emperor rebuilt the main temple between 1025 CE and 1040 CE, pointed out Dr. Nagaswamy.

    “Another important aspect of the village is that it is also named Paravaipuram,” he said. Paravai was the consort of Tamil Saivite saint Sundarar, who lived in the eighth century CE. Paravai belonged to a family of dancing girls and she is worshipped even today, along with Sundarar, in Siva temples. Rajendra Chola I also had a personal assistant called Paravai, who was an ‘anukki.’ This Paravai was named after Sundarar’s consort. (Female personal assistants, who were trusted by the kings, were called anukki and anukkan were their male counterparts). Paravai built the Thyagaraja temple at Tiruvarur in Tamil Nadu and covered the vimana with gold, said Dr. Nagaswamy .

    HONOURING PARAVAI
    To honour her, Rajendra Chola I made her sit next to him in his royal chariot and drove her in a procession on the four main streets around the Thyagaraja temple. The Chola emperor made two bronze images resembling her and placed them before the deity in the Tiruvarur temple’s sanctum and worshipped them. “This is recorded in a long inscription in the Tiruvarur temple,” said Dr. Nagaswamy, a scholar in epigraphy. Rajendra Chola I re-built the Panaiyapuram temple in Paravai’s honour, when she was alive and the town around the temple was named after her.

    The temple has two inscriptions of Rajendra Chola II (regnal years 1052 to 1064 CE), both datable to 1058 CE. One of the inscriptions mentions his gift of paddy to “Paravai Easwaramudaiyar Mahadeva in the town of Paravaipuram in Panaiyur Nadu”, falling under the larger division called “Rajendra Chola Valanadu.”

    The temple has an inscription of Adhi Rajendra, who ruled from 1068 to 1071 CE. This inscription, dated 1070 CE, records the gift of tax-free land to the temple by a merchants’ guild of Paravaipuram to feed the pilgrims. There is a record of Kulotunga Chola I (regnal years 1070-1122 CE) on the gift of gold coins by a chieftain named Ponnambala Kizhan of Arumbakkam, near present-day Chennai, for lighting a perpetual lamp.

    “An interesting point about the Panaiyapuram temple”, said Dr. Nagaswamy, “is that on the first day of the Tamil month of Chithirai every year, the sun rays fall on the Sivalinga enshrined in the sanctum and the idol of Satyambikai. The temple’s orientation is so perfect that this happens and special pujas are offered.”

    S. Ganesa Gurukkal, the temple priest, was emphatic that the villagers would take all steps needed to save the temple. “We went to Chennai and gave a petition to the NHAI officials,” he said.

    When contacted, an NHAI official said, “We are trying to save the temple. We are trying to look at other options. The NHAI headquarters has been informed about the villagers’ objections.”

  17. கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி.   இம்மாதிரி பாரம்பரிய சொத்துக்களை,  இப்பொழுதுள்ள கால கட்டங்களில் கட்ட இயலாது என்று தெரிந்தும், அதனைப் பராமரிக்கவோ, பாதுகாத்துக்கொள்ளவோ முடியாத நிலை மனம் புண்படவைக்கிறது என்பது உண்மை.   இச்செய்திகளை  வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆசிரியருக்கும் அதனை வெளிப்படுத்த உதவும் வல்லமை போன்ற வலிமையான கணினி இதழும் பாராட்டப்படவேண்டியவர்.    மீடியாவின் கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.   அறநிலையத் துறை முதலான அரசுத் துறையினரின் கணினித் தளங்கள் சரிவர செயல்படுவதில்லை.   அப்படி ஒருவேளை அதிர்ஷ்ட வசமாக இயங்கினால், நாம் கேட்கும் கேள்விகளுக்கோ, தகவலகளுக்கோ அங்கிருந்து எவ்வித பதிலும் வருவதில்லை.  உதாரணமாக, மிகப் புராதனாமான புகழ்பெற்ற எங்கள் ஊர் நாகை அருள்மிகு நீலாயதாக்ஷி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் தற்சமயம் இருக்கும் நிலையைத் தெரிவிக்க விரும்பினேன்.  பலனில்லை.   இந்தக் கோயிலில் தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி அவர்கள் ஏராளமான மானியம் அளித்திருப்பதாக ஒரு பலகை அறிவிப்பு இருந்தது.     இப்பொழுதுள்ள நிலையில், பல சன்னிதிகளில் விளக்கு ஏற்ற எண்ணெய் கூட கிடையாது.     உள்ளூர் மக்களும் கவலை கொள்வது கிடையாது.   ஒரு காலத்தில் பக்தர் கூட்டம் அலைமோதிய இக்கோயிலுக்கு எண்ணக்கூடிய அளவிலேயே பக்தர்கள் வருகை தருகின்றனர்.   புகழ்பெற்ற திருவாரூர் கமலாம்பிகா கோயில் கூட இந்நிலையில் தான் இருக்கிறது.    இதற்கான செயல்பாடுகளை அறநிலையத் துறை முடுக்கிவிடவேண்டும்.    யாத்திரை சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருவர்.   நகரத்திற்கும் அரசுக்கும் வருவாயும் அதிகரிக்கும்.  மீண்டும் கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

  18. வணக்கம்.
    The NHAI has now decided “to restrict the proposed ROW [right of way] width to avoid acquisition of the ancient temple near Panaiyapuram village by restricting the extent of land acquisition up to the existing compound wall of the temple on the LHS [left hand side] of the temple portion only.” The NHAI has stated this in a letter, dated October 6, 2012, to the Competent Authority and the Special District Revenue Officer (LA), National Highways-45C, Villupuram. In an earlier communication also, dated September 20, 2012, the NHAI said the “four-laning of NH-45C will be accommodated between the existing compound wall of the temple and the existing Veeranam pipeline on the other side.” When contacted, an NHAI official said: “The temple will not be touched.”

    மிகவும் மகிழ்வான செய்தியை அறிவித்துள்ளீர்கள்.
    இம்முயற்சியில் பெரும் பங்கு வகித்த அன்பர் அனைவரது பாதங்களையும் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.
    அன்பன்
    கி.காளைராசன்

Leave a Reply to Sankar Kumar

Your email address will not be published. Required fields are marked *