சேவாலயாவில் உலக வன தினக் கொண்டாட்டம்

0

 

சேவாலயா முரளிதரன்

21.03.2012

திருவள்ளூர் மாவட்ட சமூக வனச் சரகத்தின் சார்பாக உலக வன தினமானது 21.03.12 அன்று திருவள்ளூர் அருகே உள்ள கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த இளஞ்செஞ்சிலுவை சங்கம் மற்றும் கருணா குழுவில் உள்ள மாணவர்கள் பொது மக்களிடையே காடுகளைப் பாதுகாப்பது மற்றும் மரங்கள் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஓர் விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டனர். மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி கோஷமிட்டு சென்றனர். மேலும் காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றியும் காடுகளின் பயன்கள் அடங்கிய வாசாகங்களைக் கூறிக் கொண்டு சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திரு.ஏ.கோபு (மாவட்ட வனச் சரக அலுவலர், பூண்டி), திரு.கே.ஆறுமுகம் (மாவட்ட வன விரிவாக்க அலுவலர், பூண்டி) மற்றும் திரு.முருகவேல் (பசுமைப்படை ஒருங்கிணைப்பாளார், திருவள்ளூர்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

திரு. கோபு அவர்கள் பேசுகையில் இயற்கையோடு இணைந்த வாழ்வை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்றும் உலகத்தில் இயற்கையாக அமைந்த எதுவும் நமக்குத் தீமையைத் தருவதில்லை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள்களே தீமையைத் தருகிறது. அதனால் எப்போதும் மகாத்மா காந்தி கூறியது போல இயற்கையோடு வாழுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் திரு. ஆறுமுகம் அவர்கள் பேசுகையில் இந்தியாவில் மக்கள் தொகை உயர உயர காடுகளின் பரப்பளவு குறைந்து கொண்டே போகிறது. மாணவர்களாகிய நீங்கள் பிறந்த நாள் மற்றும் இதர சிறப்பான நாட்களில் மரக் கன்றுகளை பரிசாக கொடுத்து காடுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் என்று கூறினார்.

பின்னர் வெள்ளியூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர் லாரன்ஸ் அவர்கள் பேசுகையில் மரங்களை முறையாக பராமரிக்கும் வழிகள் பற்றியும் தான் பராமரித்து வரும் மரங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். மரங்களின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பாடலைப் பாடி அசத்தினார்.

இறுதியாக அதிகமான மரங்களை நட்டு வளர்த்து வருகின்ற கடம்பத்தூர் விவசாயிக்கு வனச் சரகம் சார்பாக பரிசளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வளாகத்தில் அதிகமான மரங்களை நட்டு பராமரித்து வரும் சேவாலயா தொண்டு நிறுவனத்திற்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்க சேவாலயா பசுமைப்படை ஆசிரியர் திரு.சௌந்தர்ராஜன் அவர்கள் நன்றி நவில விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.

சேவாலயாவுக்காக,

(வி.முரளிதரன்)
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

Board of Trustees:
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram
Advisory ommittee: Mr. A. Annamalai, Mr.K.Mohan, Mr.Muthaiah Ramanathan, Dr.G.Nammalwar,
Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj,IPS(Retd) Ms.Saalai Manikkam,
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *