ஐ. பி. எல் கிரிக்கெட்: எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு? (பகுதி – 2)

0

 

மோகன் குமார்

ஐ. பி. எல் கிரிக்கெட்: செமி பைனல் செல்லும், கோப்பை வெல்லும் அணி எது?

ஐ.பி. எல்லில் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள வலுவான நான்கு அணிகள் பற்றி பார்ப்போம் !

கொல்கட்டா நைட் ரைடர்ஸ்

ஷாரூக் ஒவ்வொரு மேட்சும் வந்து பார்த்து, தட்டி கொடுத்து எவ்வளவோ பெப் டாக் தந்தாலும் செமி பைனல் வரை கூட இதுவரை போனதில்லை. ஷாரூக் வெறுத்து போய் ” இனிமே நான் மேட்சுக்கு வர மாட்டேன்” என்பார். மனசு வராமல் பின் மறுபடி வந்து விடுவார்.

கம்பீர் ஒரு நல்ல காப்டன். இந்திய அணியில் இப்போது தோனிக்கு வைஸ் காப்டனாக இருக்க இவர் தான் நல்ல சாய்ஸ். ஆனால் கோலியை வைஸ் காப்டனாக்கினார்கள் !

பிரெட் லீ, பாலாஜி, அப்துல்லா என நல்ல பவுலர்கள் மத்தியில் ஒரு சூப்பர் பவுலர் மேற்கு இந்திய தீவின் சுனில் நாராயன். இவரை ஆட முடியாமல் பல வீரர்களும் தடுமாறுகிறார்கள். இந்திய பிட்சுகள் ஸ்பின் எடுக்கும் என்பதால் இவர் இம்முறை கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

பலம்: ஆல் ரவுண்டர்கள் மற்றும் பவுலிங்
பலவீனம் : பேட்டிங் கம்பீர், காலிஸ் மற்றும் மெக்கலாமை மட்டுமே நம்பி உள்ளது.

ஆல் ரவுண்டர்கள்: காலிஸ், ஷாகிப் உல் ஹசன், யூசுப் பதான்

வாய்ப்பு: திறமை வாய்ந்த வீரர்கள் உள்ள அணி. நல்லதோர் காப்டன். இம்முறையாவது செமி பைனல் மட்டுமல்ல பைனலும் இவர்கள் செல்ல வேண்டுமென்பது நம் விருப்பம் !

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

க்றிஸ் கெயில், தில்ஷன், விராட் கோலி, டீ வில்லியர்ஸ் .. எப்படிப்பட்ட பெயர்கள் பாருங்கள் ! இந்த format-க்கு இதை விட மிக சிறப்பான பேட்ஸ்மன்கள் கிடைப்பது மிக மிக கஷ்டம். சென்ற முறை அனைத்து அணிகளையும் இந்த நால்வர் அணி தான் வெளுத்து கட்டியது.

குறிப்பாய் கெயில் என்கிற சூறாவளியில் தப்பி பிழைத்தோர் மிக அரிது. இன்று இந்தியாவில் மட்டுமல்ல உலகின் தலை சிறந்த வீரர் என்பதற்கு கோலி பெயரை தைரியமாய் பரிந்துரைக்கலாம்.

இவர்கள் இருவரையும் விட மிக புத்திசாலியான ஆட்டக்காரர் டீ வில்லியர்ஸ். மிடில் ஆர்டரில் இவர் ஆடுவது மிக பெரும் பலம். இறுதி ஓவர்களை அற்புதமாய் ஆட , ஆட்டத்தை வெற்றிகரமாய் முடிக்க இவரை விட சிறந்த வீரர் கிடைக்கவே முடியாது !

பவுலிங் தான் சற்று வீக் என்பதை உணர்ந்து இம்முறை முரளிதரன் மற்றும் வினய் குமாரை வாங்கி உள்ளனர். முரளிக்கு டீமில் ஆட இடம் கிடைப்பது மிக சிரமம். (நான்கே வெளி நாட்டு வீரருக்கு மட்டுமே அணியில் இடம் என்பதால் பெரும்பாலும் ஆட மாட்டார்)

பூஜாரா என்கிற நல்ல ஆட்டக்காரர் இம்முறை மீண்டும் ஆடுகிறார். எப்படி ஆடுகிறார் என பார்க்கனும். ஜாகிர் கான் உடல் நலத்துடன் முழுதும் ஆடுவாரா என்பதும் தெரியவில்லை.

பலம்: மிக சிறந்த பேட்டிங் வரிசை. வெட்டோரி என்கிற நல்ல காப்டன்
பலவீனம்: முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், அணி தோற்பது உறுதி.

ஆல் ரவுண்டர்கள் : கெயில், மெக் டொனால்ட்.

வாய்ப்பு: நல்ல பேலன்சுடு ஆன அணி. செமி பைனல் வாய்ப்பு நிச்சயம். கோப்பையும் வெல்ல கூடும் !

மும்பை இந்தியன்ஸ்

இம்முறை கோப்பை வெல்ல போவது இந்த அணி தான் என பலரும் சொல்கிறார்கள். ” எங்களை வெல்ல வையுங்கள்” என அணி தலைமை பல இடங்களிலும் “கவனிப்பு” நடத்தி விட்டதாக ஒரு பக்கம் ரூமர் போய் கொண்டு இருக்கிறது.

சச்சின் கேப்டன் பதவியிலிருந்து விலகியது அணிக்கு மிக நல்லது. ஹர்பஜன் நல்ல aggressive காப்டன் ஆக இருப்பார்.

பலம்: மலிங்கா, ஹர்பஜன், ஓஜா, மெக்கே, மிட்சல் ஜான்சன், RP சிங் என மிக திறமையான பவுலிங் அட்டாக்.
பலவீனம்: பவுலிங் அளவு பேட்டிங் வரிசை அவ்வளவு வலுவாய் இல்லை ! சச்சின் ரொம்ப அடித்து ஆடுவதில்லை. சிங்கிள்ஸ் எடுத்தே 30 -40 ரன்கள் எடுப்பார். பல நேரம் போலார்ட் தான் அடித்து காப்பாற்றுவார். இம்முறை ரோஹித் ஷர்மா புதிதாய் வந்துள்ளார் பார்க்கலாம் !

ஆல் ரவுண்டர்கள்: பொல்லார்ட் மற்றும் ஜேம்ஸ் பிராங்க்ளின்

வாய்ப்பு: செமி பைனல் நிச்சயம். கோப்பை இவர்கள் லட்சியம்

சென்னை சூப்பர் கிங்க்ஸ்

ஒரு அணியின் வெற்றிக்கு , வீரர்கள் மட்டுமல்ல, கேப்டன்சியும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையும் எவ்வளவு முக்கியம் என்பதை சென்னையை பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஐ.பி. எல் தொடங்கியது முதல் ஐந்து வருடமாய் பெரும்பாலான வீரர்கள் மாறாமல் இருக்கும் அணி இது மட்டும் தான் !

பலம்: தோனியின் கேப்டன்சி, ஒற்றுமை, சென்னை பிட்ச்சில் இவர்களை அடிப்பது கஷ்டம். இம்முறை பைனலும் சென்னையில் தான் !

பலவீனம்: பவுலிங் மற்றும் ஓபனிங் பேட்டிங். மேலும் கடந்த இரு முறை வென்றவர்கள் என்பதால் Law of averages-இவர்களுக்கு எதிராக உள்ளது !

ஆல் ரவுண்டர்கள்: பிரேவோ, மார்கல், ஜடேஜா & ரைனா
வாய்ப்பு: சென்னை பிட்ச் இம்முறை மாற்றப்பட்டுள்ளது. அதில் எப்படி சென்னை டீம் கோப்-அப் ஆகிறது, சென்ற முறை போல தொடர்ந்து அங்கு வெல்கிறதா என்பதை பொறுத்தே இதன் வெற்றி வாய்ப்பு அமையும். சென்னை செமி பைனல் செல்லும், கோப்பை வெல்லாது என்பது என் கணிப்பு !

***

நமது கணிப்பு தவறாகி, எதிர்பார்க்காத ஒரு அணி கோப்பையை வெல்லவும் கூடும். அப்படி நடந்தால் அது தான் சுவாரஸ்யமே !
வாருங்கள்.. இந்த கொண்டாட்டத்தை ரசிப்போம்!

 

படத்திற்கு நன்றி:

http://cricket.yahoo.com/player-profile/Jacques-Kallis_141

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *