இலக்கியம்கவிதைகள்

என் புருஷா மிருகம்!

அலுவலகத்திலிருந்து வரும் போதே
அரற்றலுமாய், அலறலுமாய்  வந்தது.
மூச்சு வாங்க வந்ததை, இன்முகம் காட்டி,
முகம் கழுவ வைத்ததில் மறைந்தது
மூடி வைத்திருந்த அழுக்குகள்.
கோபத்தோடு, தொந்தரவு தந்த மீசையையும்
 நறுவிசாய் நறுக்கியதில், மெல்ல வெளிப்பட்டது
அப்பா எனும் அழகு முகம், மகன் கட்டிக் கொள்ள!
இருந்தாலும் ஏதோ வலியின் சாயல் தெரிந்ததால்,
இரவெல்லாம், தைத்த வார்த்தை முட்களைப் பிடுங்கி,
களிம்பிட்டதில் மகிழ்ந்து , கணவனாய் எனைச் சீராட்டியது!  

மீண்டும் அலுவலகப் பந்தயத்தில், ஓடுவதற்காய்
மெருகேற்றிக் கொண்டது தன் பாதங்களை.
 திருகிவிட்டுக் கொண்டது தன் மீசையை.
அரக்க பரக்க  வண்டியில் புயலாய்ச்  செல்லும்
என் புருஷா மிருகம் எப்படி வருமோ
என்ற கவலையில் காத்திருக்கும் தேவதை!
 படத்திற்கு நன்றி
http://raakachi.hubpages.com/hub/The-Legends-of-Thiruvathavur-Part-13-The-Purusha-mirugam-made-as-the-guardian-deity-of-Thiruvathavur
 பின் குறிப்பு:
தினமும் மன அழுத்தத்தோடு, மனிதர்களோடும், யந்திரங்களுடனும், போராடிக் கொண்டு தன்னை வேலைக்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம் 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. Avatar

    நேந்து விட்ட மனிதர்களுக்காக, ஒரு வார்த்தெடுத்த கவிதை !. நன்று.

  2. Avatar

    தேவதைகள் இருப்பதால்தான் மிருகங்கள் சாந்தம் அடைகின்றன.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க