பூட்ட ஏதும்
பொருளிலாத போதும்
பூட்டிச் செல்வது
வழக்கத்தின் காரணமாய்
நிகழ்கிறது.
கதவைத் திறக்கும்போது
ஞாபகமாய்
மனசைப் பூட்டிக் கொள்ள
வேண்டியிருக்கிறது …..
உள் சுவர்களெங்கும்
பிறர் அறியாப்
பூட்டுகள்
தொங்கிக்கொண்டே இருக்கின்றன …..
தேவைக்கேற்ப
அவரவர்
எடுத்துக் கொள்வதுண்டு
சிலசமயம்
தனக்கு….
சிலசமயம்
பிறர் வாய்க்கு….
பலசமயம் விஷயங்களுக்கு ….
எப்போதும் கனவுகளுக்கு…
                                        
 படத்திற்கு நன்றி

http://madballs.wikia.com/wiki/Lock_Lips

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூட்டாத பூட்டுக்கள்

  1. இந்த கவிதையைப் படித்தவுடன், என்றோ படித்த மேத்தாவின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

    தலைப்பு நினைவில்லை. ஆனால் வரிகள் நினைவில் இருக்கிறது.
    ” அகற்றப் படாமலும், கழற்றப் படாமலும் அவரவர் மனதில் அசைந்து கொண்டிருப்பது” என்று முடியும்.
    ஆனால், இந்த கவிதையில் சொல்லியிருப்பதைப் போல், உங்கள் கனவுகளுக்கு மட்டும் பூட்டு போட்டு விடாதீர்கள். அவைதான் நம்மின் முயற்சிகளுக்கும், சாதனைகளுக்கும் உந்து சக்தி.
    வாழ்த்துக்கள் இனிய கவிதை தந்தமைக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *