கவிநயா

குட்டக் குட்டக் குனிவதனால்
நான் முட்டாளில்லை;
குனிந்து தரையில் வீழ்வதனால்
நான் கோழையுமில்லை;
மட்டந்தட்டிப் பேசுவோரிடம்
மார்தட்டி வீரம் காட்ட
நான்
மீசை வைத்த ஆண் பிள்ளையுமில்லை…

ஒரு வார்த்தை வீசுதற்கு
ஒரு நொடியும் ஆகாது
ஆயினும்,
வீசியதைப் பிடிக்கும் வலை
இவ்வுலகில் எங்குமில்லை
என்றுணர்ந்த
சாதாரணப் பெண்தான் நான்!

 

படத்திற்கு நன்றி:http://libguides.unm.edu/content.php?pid=15806&sid=105969

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நான் யார்?

  1. கவிதை நல்லாயிருக்கு. ஆனால் போகிற போக்கில, ஆண்களை இப்படி சொல்லியிருக்க வேண்டாம்.

  2. பெண்ணென்ற பிறப்பே பெருமைக்குரிய பிறப்புதான். எனவே சஞ்சலப்படாதே பெண்ணே…உம்மை தாயெனக் கூறியும்…சகோதரியெனக் கூறியும் பெருமைப்
    படுத்துவோம் நாங்கள்.

    முகில் தினகரன்
    கவிஞர்….எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *