சித்திரை சிங்கர்

சென்னை

சமீபத்தில் 02.06.2012 அன்று மாலை ஏழு மணிக்கு நாரதகான சபாவில் சோ அவர்கள் எழுதி இயக்கி நடித்த “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்ற நாடகத்தை டி.வி.வரதராஜன் அவர்கள் குழுவினர் நடிக்க பார்த்து ரசித்தேன். அருமையாக இருந்தது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு எழுதிய நாடகம் என்றாலும் “திரு. சோ” அவர்களின் தீர்க்கதரிசனம் ஆச்சரியமாக உள்ளது. அருமையான நாடகம்.

காட்சிகளில் நடித்தவர்கள் மட்டுமே வேறு நபர்கள் என்பதை தவிர கருத்து கொஞ்சம் கூட மாறாமல் வசனங்களும் மாறாமல் இருந்தது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. ரசிகர்கள் கூட்டம் நாரதகான சபா முழுவதும் பால்கனி உட்பட நிரம்பி நின்று கொண்டும் பார்த்தது, இந்த பாரத நாட்டுக்கு இன்னமும் அந்நியரிடம் இருந்து பெற்ற சுதந்திரம் அரசியல்வாதிகளின் கரங்களுக்கு சென்று அவர்களிடம் இருந்து இன்னமும் பாரத மக்களுக்கு வரவில்லை என்பதை பறை சாற்றியது.

இந்த நாடகத்தை சென்னை நகர மக்கள் கண்டு ரசிக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் உள்ள “சாஸ்தா பல்கலைகழக வேந்தர் திரு.சேதுராமன்” அவர்கள் இன்று இந்த நாடகம் நடதுவதற்கான முழு செலவினையும் ஏற்றுக்கொண்டு தானும் முதல் வரிசையில் அமர்ந்து நாடகத்தை ரசித்து, நாடகத்தையும் அதில் நடித்தவர்களையும் பாராட்டியது நாடக ரசிகர்களையும் மகிழ்வித்தது. இவர்களை போன்ற நல்லவர்களினால் நாடகக்கலை இன்னமும் மறையாமல் வளர்கிறது என்பது சிறப்பானதே. ஒரு பல்கலைகழகம் இது போன்ற சமுதாய சிந்தனையைத் தூண்டி அதன் வளர்ச்சிக்கு உதவுவது வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

திரு. சோ அவர்களிடம் இன்னும் பல நல்ல நாடகங்கள் இருக்கின்றன….! திரு.டி.வி. வரதராஜன் அவர்கள் இந்த நாடகத்தைப் போன்றே மற்ற நாடகங்களையும் நன்கு சிறப்பாக்குவர் என்ற நம்பிக்கை நாடக ரசிகர்களுக்கு உள்ளது…! திரு.சோ அவர்கள் தன்னுடைய மற்ற நாடகங்களையும் திரு.டி.வி.வரதராஜன் அவர்கள் குழுவினரிடம் கொடுத்து மீண்டும் மேடை ஏற்றலாமே…? இது போன்ற நல்ல செயல்களை செய்ய மற்ற பல்கலைக்கழகங்களும் முன்னணி தொழிலதிபர்களும், ஐ பி எல் அணிகளின் உரிமையாளர்களும் முன்வரலாமே….?

சித்திரை சிங்கர்,
சென்னை
கை பேசி: 9789778442
03.06.2012

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *