மோகன் குமார்

கேள்வி:  கண்ணன், அம்பத்தூர்

சென்னை அம்பத்தூரில் ஒரு மனை, விற்பனைக்கு வந்தது. அதனை வாங்கும் பொருட்டு, அதன் பத்திரங்களை நோக்கினோம். தாத்தாவின் பெயரில் முதலில் மனை இருந்தது. அவருக்கு இரு மகன்கள். முதல் மகன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டாம் மகனின் 10 – 12 வயதுள்ள இரு பிள்ளைகளுக்கு இந்த மனையைத் தானமாகக் கொடுப்பதாகப் பத்திரம் பதிவு செய்திருந்தார். பின்னர், முதல் மகனுடன் சமரசம் ஏற்பட்டு, தானத்தை ரத்து செய்வதாக, இன்னொரு பத்திரம் பதிவு செய்திருந்தார். சிலரிடம் கேட்டதில், தானமாகக் கொடுத்த பிறகு, அவர் கையிலிருந்த உரிமையை அவர் இழக்கிறார்; எனவே மீண்டும் அதனை ரத்துச் செய்ய அவருக்கு உரிமை இல்லை; இது தொடர்பாக உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்திருக்கிறது என்றனர். இன்னும் சிலரோ, தானம் கொடுத்தவர், உயிருடன் இருக்கிறார்; எனவே அவர் தன் தானத்தை ரத்துச் செய்யலாம் என்றனர். மைனர் வயதுள்ள பிள்ளைகளுக்குத் தானம் கொடுத்து அதனை ரத்து செய்ததால், அவர்கள் மேஜர் ஆனதும் வழக்குத் தொடர உரிமை உள்ளது என்றும் சிலர் கூறினர். எனவே இந்த மனையை வாங்குவதற்குக் கொடுத்த முன்பணத்தைத் திரும்பப் பெற்றோம். எனினும் இந்தச் சந்தேகம் தீரவில்லை. தானமாகக் கொடுத்த பிறகு, அதனை ரத்து செய்து, மீண்டும் சொத்தின் மீது உரிமை கோர ஒருவருக்கு உரிமை உண்டா?

பதில்:  

ஒரு அசையா சொத்தை உயில் எழுதி வைப்பதற்கும்,  தானமாய்த் தருவதற்கும்  வித்தியாசம் உள்ளது.

தானமாய்த் தந்து அது ரிஜிஸ்தர் செய்யப்பட்டால் அதை தானம் செய்தவருக்கு அந்த சொத்தின் மீது பின் எந்த உரிமையும் கிடையாது. குறிப்பிட்ட சொத்து மைனர்களுக்கு வேறு எழுதி வைக்கப்பட்டுள்ளது. மைனர் பெயரில் உள்ள சொத்தை மாற்றி எழுத, பிறருக்கு விற்க  பெற்றோருக்கு கூட உரிமை கிடையாது.

சட்டப்படி அந்த பெரியவர் தான் தந்த தானத்தை கேன்சல் செய்தது தவறு. 

இதே சொத்தை அவர் உயில் மூலம் எழுதி வைத்தார் எனில் , அவர் உயிரோடு இருக்கும் வரை அதனை திரும்ப வேறு யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு உரிமை உண்டு.

குறிப்பிட்ட சம்பவத்தில் தானத்துக்கும், உயில் மூலம் வரும் சொத்துக்கும் உள்ள நடைமுறைகளை குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

இந்த குறிப்பிட்ட நிலத்தைப் பொறுத்த வரை, நிலத்தின் possession யாரிடம் இருந்தது என்பது முக்கியமான விஷயம். அந்த பெரியவர் வசமே possession இருந்தால், நீங்கள் அந்த சொத்தை வாங்கி இருந்தாலும்,  மறுபடி அந்த நிலத்தின் possession நீங்கள் பெறுவது கடினமாய் இருந்திருக்கும். நீதிமன்றம் சென்று வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகி நீங்கள் மன நிம்மதி இழக்க வேண்டி வந்திருக்கும்.

இப்படி குழப்பம் உள்ள நிலையில் நீங்கள் அந்த நிலத்தை வாங்காதது நல்ல முடிவு தான்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சட்டம் ஆலோசனைகள் (6)

  1. எனது அம்மாவின் அம்மா [பாட்டி] நிலத்தை உறவினர் 20 ஆண்டுகளாக அணிபவித்து வருகிறார் பாட்டியால் அந்த நிலத்தை மீட்க முடியாத நிலையில் எனது அப்பாவிற்கு pawor தந்து உள்ளார் [10 வருடங்களுக்கு முன்பு] ஆனது அப்பா எனது பெயருக்கு சுத்த கிரயம் செய்து உள்ளார் .எங்கள் வசம் பட்டா ,பத்திரம், 10 வருடங்களாக கட்டி வரும் விட்டு வரி ரசிது உள்ளது அனால் அந்த நபர் நிலத்தை காலி செய்ய முடியாது என்கிறார் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம் .இனி என்ன செய்ய வேண்டும்

  2. நான் ஒரு நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தேன் எனது செல்ல [வீட்டில் அழைக்கும் ] பெயரில் PROVIDENT FUND பிடித்து வந்தார்கள் .தற்போது பணியில் இருந்து விலகி 4 வருடங்காக ஆகிறது என்னுடைய PROVIDENT FUND தொகை பெற வழி எதாவது உள்ளதா? அந்தச் செல்லப் பெயருக்கு என்னிடம் ரேசன் கார்டு, வங்கிப் புத்தகம் உள்ளது. நிறுவனம் எனக்கு உதவி செய்யவில்லை [திடீரென வேலையில் இருந்து நின்றதால்]

Leave a Reply to rajaram

Your email address will not be published. Required fields are marked *