ஒளவை நடராசன் உடன் குரல் நேர்முகம்

3

செவ்வி: அண்ணாகண்ணன்

பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள்,  தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்பு குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Avvai Natarajan
உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ஏதும் இருக்கிறதா என்ற அவரின் கேள்வி, ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. 2011 மார்ச் 14 அன்று, சென்னை, தி.நகரில் உள்ள அவரின் அலுவலகத்தில் இந்த நேர்முகம் பதிவானது. அவருடனான குரல் நேர்காணலை, இங்கே கேட்கலாம்.

http://www.4shared.com/audio/fLYzCIeF/Palmleaf_Avvai1output.html

நேர அளவு: 20 நிமிடங்கள்

மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஒளவை நடராசன் உடன் குரல் நேர்முகம்

  1. ஒளவை அவர்களுடனான உரையாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.

    ஐந்திரம் நூல் பற்றி அவர் சொன்ன போது வயிறு வலிக்கச் சிரித்தேன். இந்த நூல் படிப்பதற்கு எனக்கும் கிடைத்தது.
    ஒளவை ஐயா சொன்னது போலவே, “தொல்காப்பியத்திற்கும் முந்திய நூல் என்றும், எழுத்தில் இல்லாத இந்த நூலை தவத்தில் இருந்து வீரபத்திரன் என்பார் அறிந்து சொன்னதை அப்படியே எழுதிவைத்த நூல் இது” என்று எனக்கு அறிமுகம் கொடுத்தார்கள். நானும் வியந்துபோய் பயபக்தியுடன் படிக்கத் துவங்கினால் – சில பக்கங்களிலேயே சிரிப்பு வந்துவிட்டது 🙂

    குறைந்தது, பல இலக்க உரூவாய்களில் அச்சிடும் முன்னராவது தமிழக அரசு தக்க அறிஞர்களைக் கேட்டிருக்க வேண்டாவா? என்ற கேள்வி கேட்பவர் ஒவ்வொருவருக்கும் வரும். பதில் – அனைவருக்கும் தெரிந்த பதில்தான் 🙂

    தலைசிறந்த அறிஞருடனான உரையாடலை இங்கே கேட்கத் தந்தமைக்கு நண்பர் அண்னா கண்ணனுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *