மோகன் குமார்

கேள்வி: பெயர் வெளியிட விரும்பாத பெண்மணி 

எனது கணவர் மிக பயங்கரக் குடிகாரர். நாங்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். தினமும் குடித்து விட்டு எங்காவது ரோட்டில் விழுந்து விடுவார். அவர் சம்பாதிப்பது போக அவர் இப்படிச் செலவு செய்ய அவருக்கு யார் கடன் தருகிறார்கள் என்று தெரியவில்லை. இப்போதே பல முகம் தெரியாதவர்கள், நான் ஆயிரம் தந்தேன் அறுநூறு தந்தேன் என்கிறார்கள். இப்போது எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றேதான்…

To whomsoever it may concern என்று பேப்பரில் விளம்பரம் அல்லது அறிவிப்பு தருவார்களே, அது போல செய்தித் தாள்களில் இது போல, இன்னார் என் கணவரே ஆயினும் இவர் வாங்கும் கடன்களுக்கு நான் அல்லது நாங்கள் பொறுப்பாளி அல்ல என்று தர முடியுமா…. பயனிருக்குமா….?

தற்சமயம் அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றாலும் இப்போதும் அவர் காலத்துக்குப் பின்னும் கடன் தீர்க்கும் பிரச்னை இல்லாமல் இருக்கும் வழி உண்டா? 

பதில்:  

உங்கள் பிரச்சனை மிக சிக்கலானது தான். 

நீங்கள் குறிப்பிட்டது போல “என் கணவர் வாங்கும் கடன்களுக்கு நான் பொறுப்பேற்க முடியாது” என பேப்பரில் குடுப்பது சரியான தீர்வு அல்ல . ஒருவர் மரணம் அடைந்த பின் அவரது சொத்துக்கள் எப்படி அவர் legal heirs-க்கு வருகிறதோ, அதே போல் அவரது கடன்களும் legal  heirs -க்கு தான் வரும். 

நீங்கள் அத்தகைய விளம்பரம் கொடுத்தால் கூட , ஒரு வேளை அவரது மறைவுக்கு பின் கடன் தந்தவர்கள் கோர்டுக்கு சென்றால் அவரது கடன்களுக்கு, அவர் குடும்பத்தினர் தான் பொறுப்பு என சொல்ல கூடும் என்றனர்.

இப்போதைக்கு ” யாரிடம் கடன் வாங்கினீர்களோ அவரிடமே கேளுங்கள். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை” என சொல்லலாம். அல்லது கணவரை பற்றி போலீசில் புகார் சொல்லி, போலீசை  விட்டு “இப்படி குடிக்காதீர்கள்; கடன் வாங்காதீர்கள்” என சொல்ல சொல்லலாம். இவை தான் எனக்கு தெரிந்த வரை உள்ள இரு தீர்வுகள். 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சட்டம் ஆலோசனைகள் (12)

  1. இங்கிலாந்து சட்டப்படி, கணவனின் கிரெடிட் கார்டு கடன்களுக்கும் மனைவி பொறுப்பல்ல. மனைவியின் கிரெடிட் கார்டு கடன்களுக்கு, கணவன் பொறுப்பல்ல. இந்தியாவில் எப்படி? ‘அவரது கடன்களும் legal  heirs -க்கு தான் வரும். ‘ என்பதற்கு, சட்டம்/ஷரத்து/ தீர்வு ஆதாரங்கள் தருமாறு, திரு.மோஹன் குமாரை கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *