கவிநயா

நம்பிக்கை என்பது
சிறகுகளுடன் கூடியது…
அது –
ஆன்மாவைத் தன்னுடைய
உறைவிடமாய்க் கொண்டிருக்கும்;
கணங்கூட இடைவெளி யின்றி
மொழியில்லா கானம் பாடும்.
 
இடி மின்னல் பெரு மழையும்
தரும் வலியைத் தாங்கிய படி
பலருக்கும் நிழல் தந்த
அந்தச் சின்னஞ்சிறு பறவை,
தன்னையே அழிக்க வரும்
புயற் காற்றின் நடுவினிலும்
இனிய கீதம் இசைத்திருக்கும்!
கடுங் குளிர் பிரதேசத்தில்
அதன் குரலைக் கேட்டதுண்டு;
தனிமையான கடல் நடுவே
அதன் பாடல் கேட்டதுண்டு;
எனினும்,
துயரங்கள் எல்லை மீறும் நேரங்களிலும்,

பிரதியாக அது என்னைத்

 துகள் உணவும் கேட்டதில்லை!

 

 

 

படத்துக்கு நன்றி

http://sparkofhope.tumblr.com/

Hope

 By: Emily Dickinson

 “Hope” is the thing with feathers
That perches in the soul
And sings the tune without the words
And never stops at all,

 And sweetest in the gale is heard;
And sore must be the storm
That could abash the little bird
That kept so many warm.

I’ve heard it in the chillest land
And on the strangest sea,
Yet never, in extremity,
It asked a crumb of me.

 

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “நம்பிக்கை

  1. உங்கள் நம்பிக்கையை படித்த பின் எனக்கே நம்பிக்கை மேல் நம்பிக்கை வந்து விட்டது. இனி நம்பிக்கையை நம்பி நம்பிக்கையோடு இருக்கப் போகிறேன்

  2. நல்லது; அப்படியே இருங்கள் 🙂 வாசித்தமைக்கு நன்றி, திரு.முகில் தினகரன்!

  3. எமிலி டிக்கின்ஸெனின் கவிதைகளின் உள்ளுறை காண தவம் புரியவேண்டும். கவி நயாவின் மொழியாக்கத்தை ரசித்தேன். Feathers is not exactly சிறகு. அது இறகு. சிறகு பறக்க உதவும். இறகு ஆத்மாவில் உறையும். இது என் கருத்து. கவிநயத்தைக் குறைத்து சொலவதில்லை.
    இன்னம்பூரான்

  4. ஒவ்வொரு நாளும் புதிது புதியாய்க் கற்றுக் கொள்கிறேன். வாசித்தமைக்கு மிக்க நன்றி, இன்னம்பூரான் ஐயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *