கேள்வி-பதில்சட்ட ஆலோசனைகள்

சட்டம் ஆலோசனைகள் (17)

மோகன் குமார்

கேள்வி : சுதாகர் சென்னை 

வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். தயவு செய்து உரிய ஆலோசனை கூறவும்.

பதில் : 

ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார். 

தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள். உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அவர் ஒரு Permissive occupier தான். அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும், உடனடியே தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் நலம்.  

அவர் காலி செய்யாத பட்சத்தில்  Ejection -க்கு   வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும். முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான். 

நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும். 

**********

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (3)

 1. Avatar

  ஐயா,

      வணக்கம்,

          என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்து கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்கு செல்ல ஒரு பொது பாதை அமைத்துகொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை(பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன்(பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் கேட்கவில்லை. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அந்த பாதையை பின்னால் இருக்கும் எங்கள் வீட்டின் வாசல் முடிவு வரை உரிமை கோர முடியுமா? அல்லது அவர் வாங்கிய வீட்டின் அளவு வரை பாதையை உரிமை கோர முடியுமா? ஏனெனில் அவருக்கு ரோட்டின் மீது வாசல் உள்ளது ஆனால் எங்களுக்கு அப்பாதைதான் ஒரே வழியாக உள்ளது. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அப்பாதையை எதுவரை உரிமை கோர முடியும்? அல்லது பாதி அளவு மறைக்க உரிமை உள்ளதா? சட்டம் அதற்கு என்ன சொல்லுகிறது.

  karthik

 2. Avatar

  Sir, en amma en siruvayathileye iranthuvidar. En amma vin petroruku (en thatha patti ku) thani thani ye poorvega sothu ullathu.. Thatha iranthuvidar. Patti irugirar. Intha sothil nan peran endra muraiyil (en thaai iranthu vidar) urimai kolla mudiyuma

 3. Avatar

  ஐயா,
  எனது பாட்டியின் பெயரில் செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட், களத்தூர் கிராமத்தில் நிலம் இருந்து வந்தது. அவர் மயிலாப்பூரில் வசித்துவந்தார்.
  அவர் 17 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு பின் அவரது வாரிசுகளாக  மூன்று பெண்கள் இருக்கின்றனர்.
  மேற்கண்ட விவசாய நிலத்தினை அவரது வாரிசுகளில் ஒருவரும், அவருக்கு இரண்டாவது பெண்ணிடம் நிலத்தினை அவர் பொறுப்பில் விட்டிருந்தார். அவரது பெயருக்கு நிலத்தை எழுதி கொடுக்கவில்லை.
  அந்த பெண் தான் மட்டுமே வாரிசு போல காட்டி 5 வருடங்களுக்கு முன்பு 2010ல் நிலத்தினை அவர் பெயரில் மாற்றிக் கொண்டது மட்டுமல்லாமல் தற்போது அந்த நிலத்தை தனது மகனது பெயருக்கு எழுதி கொடுத்துவிட்டார்.
  இந்த விவரங்கள் எனக்கு தற்பொழுதான் தெரியவந்தது. நான் அவர்களின் மேல் வழக்கு தொடர்ந்தால் எங்களுக்கு சாதகமான நிலை இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  -சேகர். மயிலாப்பூர்

Leave a Reply to suresh Cancel reply