மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)

18

 

திவாகர்

ஹெல்லோ..கொதிக்கற சாம்பார்லேர்ந்து சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானை அப்படியே எடுத்து வாயிலே போட்டு டேஸ்ட் பார்த்தா எப்படி இருக்கும்?

அடக் கண்றாவியே.. அப்படில்லாம் டேஸ்ட் பண்ணித் தொலைக்காதீங்க.. அப்புறம் டாக்டருக்கு வேஸ்ட் அழுதாகணும்..

அட, நான் அப்படில்லாம் செய்வேனா.. இல்லே அப்படி செஞ்சா உன்னோட இப்படி அழகா பேசமுடியுமா.. பெப்பப்பே’ ந்னுதான் பேசணும்..

சரி, என்ன பண்றீங்க..

அதுதான் சொன்னேனே.. சாம்பார் அடுப்பிலே கொதியா கொதிக்குது.. வெண்டைக்காய் வெந்துபோய் துள்ளி விளையாடுது..

என்ன.. அடுக்கு மொழி விளையாடுது.. ரொம்ப ஜாலியா இருக்கீங்களோ..

ஜாலி’ன்னா ஜாலி மாதிரி வெச்சுக்கலாம்.. இல்லன்னா ஜாலி இல்லே’ன்னும் வெச்சுக்கலாம்.. ஜாலி இல்லாத ஜாலி’ன்னும் வெச்சுக்கலாம்..

என்ன குழப்பறீங்க.. கொழ கொழ வெண்டைக்காய் மாதிரி.. ஆமா கேக்க மறந்துட்டேன்..

எதை வேணும்னாலும் கேளு.. மறக்காம கேளு..

அது சரி, வெண்டைக்காயை அப்படியே போட்டிங்களா.. இல்லே.. எண்ணெய்’ல வதக்கிப் போட்டிங்களா.. வதக்கலேன்னா கொழ கொழ’ன்னு இருக்கும்..

அடி சக்கைன்னானாம்,, இத உனக்கு சொல்லிக் கொடுத்ததே நானாக்கும்.. கல்யாணம் ஆன புதுசுல நீ ஒரு வெண்டைக்காய் வெத்த குழம்பு வெச்சயே.. பச்சையா அப்படிப் போடாதே’ன்னு அந்தக் கொழ கொழ வெண்டைக்காயைக் கையில் பிடிச்சுண்டே, குழந்தைக்குச் சொல்றா மாதிரி செல்லமா சொன்னேனே.. உனக்கு ஞாபகம் வரலே..

அப்படில்லாம் நான் செஞ்சதா ஞாபகம் இல்லே.. நான் எப்பவுமே பெர்ஃபெக்ட்டாதான்  பண்ணுவேன்.. நீங்க ஏதோ புதுசா கதை விடறீங்க.. விட்டால் எல்லா சமையலையும் நீங்களேதான் இதுவரை பண்ணினேன்’னு சொன்னாலும் சொல்லுவீங்க.. ஏதோ.. சமையல் உங்களுக்கு பழக்கம் இல்லையே’ன்னு இப்போ வதக்கச் சொல்லி ஞாபகமூட்டினேன்..

செந்தமிழும் நாப்பழக்கம்.. சமையலும் அப்படித்தான்.. இப்பல்லாம் நான் ரொம்ப டேஸ்ட்’டாவே பண்றேனாம்..

யார் சொன்னது அப்படி..

கோப்ப்படாதே.. நம்ம பில்டிங் வாட்ச்மேன் கோவிந்துதான் சொல்றான்.. நேத்து ராத்திரி என்கிட்ட தக்காளி பருப்பு வாங்கிண்டு போகறச்சே.. என் சமையலைப் பத்தியும் ருசியைப் பத்தியும் அவன் பேசறதெல்லாம் ஆஹா.. ஓஹோதான் போயேன்..

ஓஹோ.. அவனுக்கு ஓஸி  பழகிடுச்சு.. ஏன் சொல்லமாட்டான்.. அதுக்காக நீங்க ஊர்ல இருக்கற எல்லாருக்கும் சேர்த்து சமையல்’லாம் பண்ணவேண்டாம்.. இருக்கற விலைவாசில இலவச சேவை தேவையில்லே..

அது அப்படியில்லே..

எது எப்படி இல்லே.. உங்களை யாராவது ரெண்டு வார்த்தை இல்லாததை இருக்கறாப் போலப் புகழ்ந்து சொன்னா போதும்.. உங்களுக்கு கிக்’ ஏறி கை கர்ணன் கையா மாறிடும்.. அதான் சொன்னேன்..

சரி சரி.. இப்போ நான் உனக்கு எதுக்கு போன் பண்ணினேன்னா..

சொல்லுங்க..

ஏன் அலுத்துக்கறே.. என்னைப்  பார்.. கஷ்டமான வேளைல கூட  ஜாலியா பேசலே?.. இடுக்கண் வருங்கால் நகுக..

அப்பறம் நகுக்கலாம்.. என்ன’ன்னு சீக்கிரம் சொல்லுங்க

அவசரப்படாதே.. சரி, நீயே சொல்லு, நீ சீரியஸா ஒரு வேலையை பார்த்துப் பார்த்து செய்யறபோது நடுவுல ஒருத்தர் குறுக்கிட்டு கெக்கபிக்கே’ன்னு ஏதாவது செஞ்சா என்ன பண்ணுவே..

ஐய்யோ.. எதுக்கு இத மாதிரி எரிச்சலூட்டறீங்க.. எது கையில கிடைக்குதோ அதால ரெண்டு போடுவேன்.. ஐ மீன்.. அப்படி நடுவுல வர்ரவரை..

நீ அப்படி பண்ணுவே.. ஆனா நான் கையில தேன் பாட்டில் கொடுத்து அனுப்புவேன்..

ஐயோ வெண்டக்காய் மாதிரி கொழப்பாம சொல்லக் கத்துக்குங்களேன்.. ஒண்ணுமே புரியலே..

சரி சரி.. நான் இப்போ வெண்டைக்காய் சாம்பார் நல்லா கொதிக்கறச்சே கறண்டியாலே கலக்கிண்டே இருந்தேன்னா..

நல்ல கொதிக்கறச்சே அது பாட்டுக்கு கொதிக்கட்டுமே.. எதுக்கு சும்மா சும்மா கலக்கணும்?

இல்லே.. அப்பதான் உப்பு  போட்டேன். அதனால கலக்கினேன்..

சரி

நடுவுலே திடீர்னு உங்கப்பா வந்தார்..

ஆமா.. நான்தான் அவரை அங்கே அனுப்பிச்சு கொஞ்சம்  ஹெல்ப் ஏதாவது வேணும்னா பண்ணச் சொன்னேன்..

வந்தவர் சும்மா ஹால்’லேயே உட்காரக்கூடாதா.. நேரே இங்கேயே வந்துட்டு, ’என்ன மாப்பிளே அடுப்புலே.. ரசமா’ன்னு சிரிச்சுண்டே கேட்டார்..

சாம்பாரை தண்ணி  மாதிரி பண்ணியிருக்கீங்க போல.. நினைச்சுப் பார்த்தா எனக்கே சிரிப்பு வருது.. ஒண்ணு பண்ணுங்க.. உங்க சாம்பார் அடிப்பகுதியை சாம்பாரா ஊத்திக்குங்க.. மேல் பகுதியை ரசமா வெச்சுக்குங்க.. இந்த ஐடியா நல்லா இருக்குல்ல.. ஆனா என்ன.. ரசத்துல வெண்டைக்காய் வாசனை வரும்..

சிரிக்கறியா.. இனிமேதான்  விஷயமே இருக்கு.. அவர்ட்ட  ‘இல்லே மாமா.. இது வெண்டைக்காய் சாம்பார்’ன்னேன்.. அவரு உடனே என் கையிலே இருந்த கரண்டியைப் பிடுங்கி வாங்கிண்டு ‘மாப்ப்ளே.. வெண்டைக்காய் சாம்பார் பண்றதுல ஒரு டெக்னிக் இருக்கு.. ரெண்டு கொதி வரச்சேயே உப்பைப் போடணும், அப்பதான் உப்பு காயுலயும் ஊறும்.. ஆமா உப்பு போட்டீங்களா.. இல்லையா’ ந்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லறதுக்குள்ளேயே சுடச் சுட ஒரு வெண்டைக்காய் தானே கரண்டியோட் எடுத்து அப்படியே சடக்கென வாயுல போட்டுட்டார்..

யார் வாய்’லே?

அவர் வாய்’லதான்.. என்ன மாமா’ன்னு கேட்டா ஙே ஙே.. பேப்பே.. ஏதேதோ சொல்றார்..

ஐய்ய்யோ.. இதத்தான் முதல்லயே போன் பண்ணிக் கேட்டீங்களா.. எங்கப்பா இப்ப எங்கே.. அடக் கடவுளே..

உடனே கையுல தேன் கொடுத்து நாக்குல தடவிக்குங்க..ன்னு சொல்லி அனுப்பிச்சுட்டேனே.. நீ இப்போ அவர்கிட்டே ஏதும்  போன் போட்டு பேசாதே.. உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ…

 

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்)

  1. அன்பின் திவாகர்ஜி,

    அட…அட….அட…… மாமனார் மேல என்ன ஒரு பாசம்! புல்லரிக்குதுங்க…… தேனெல்லாம் கொடுத்து .. அதுக்கு இத்தனை வியாக்கியானமும் கொடுத்து… ஏன் சார்… ஏன்… ஏன்…. இந்த கொலவெறி…… சிரிச்சு மாளல….. அருமை!

    அன்புடன்
    பவள சங்கரி

  2. ஹாஹா. சூப்பர் வெண்டைக்காய். பாவம் மாமனார். இருந்தாலும் கூடவே வைத்தியமும் செய்துட்டீங்களே. அதனால கொஞ்சம் பரவாயில்லை!

  3. ஹ. ஹ. ஹா… உங்கள் தொலைபேசி உரைடால்-தொடர்கள் நகைச்சுவையின் சிகரம்.
    சொக்காய் வாங்கி, சீரகம் தேடி, வெண்டைக்காய் சமைத்து …என்று தொடர்ந்து சிரிப்பு சர வெடிகள்.
    அப்புசாமி சீதாப்பாட்டி தம்பதியினர் என்னை சிரிக்க வைத்த பிறகு நீங்களும் அந்த தம்பதியினர் போல சிரிக்க வைக்கிறீர்கள்.
    நீங்கள் இது போல வாரம் ஒரு “ஹல்லோ ” பதிவு எழுதி நூலக வெளியிட வேண்டுமென்பது எனது விருப்பம்.

  4. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், மருமகனுக்கு வெண்டைகாயும் ஆயுதம், பலே.

  5. அ ன்பு திவாகர் ஜி வெண்டைக்காய் ஹீரோவாக வந்தாலும் வழவழ கொழகொழன்னுஇல்லாமல் கமகம ன்னு ஒரு கட்டுரை . அதுல கொஞ்சம் பாசம் கொஞ்சம் அன்பு , கொஞ்சம் கோபம் என்று கொஞ்சம் ரசமாகவும் ஆனது ,திவாகர்ஜி சூப்பர் .தான்
    நானும் உங்கள் சாம்பார் சாப்பிட டிக்கெட் வாங்கிவிட்டேன் ஹாஹாஹா

  6. Ha ha ha ha. Sooperaaka irukku..

     //. இடுக்கண் வருங்கால் நகுக..
    அப்பறம் நகுக்கலாம்..//

    Too good. I enjoyed it immensely.

  7. “உனக்கும் பதில் பெப்பே’தான் வரும், ஹலோ.. ஹலோ.. ஹல்லோ… ”

    ஓ இதான் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே வா?

    அன்புடன் தமிழ்த்தேனீ

  8. ஒரு வெண்டைக்காய்.அதைச் சுற்றி இத்தனை குழப்பமா:))))
    பாவம் மாம்னார். சுடற வெண்டைக்காய் வாயில என்ன வெல்லாம் செய்ததொ/ எதற்கும் தயாராக இருங்க திவா. தொலைபேசியை வச்சிட்டு நேரில வந்துடப் போறாங்க!!!!அருமை.

  9. மற்ற இரண்டுடன் ஒப்பிடும்போது, வெண்டைக்காய் சாம்பாரில் கொஞ்சம் ‘உப்பு’ கம்மியாத்தான் போட்டுரீக்கீங்க.

    டைமிங் சென்ஸ் கொஞ்சம் குறைச்சல்.

    மாமனார் வந்தபோதே வெந்துபோன சாம்பார், அவருக்கு தேன் கொடுத்து அனுப்பிய பின்னும் இன்னும் கொதிச்சிண்டிருந்தா என்ன ஆறது?

    ஆனால், சிச்சுவேஷன் சென்ஸ் பிரமாதம். அந்த சஸ்பென்ஸைக் கடைசியில் உடைச்சதும், ஃபோன் துண்டிக்கப்பட்டதும் அருமை!

    அதுசரி…….மாமி அப்பா வீட்டுக்குப் போகலியா? வேறெங்கோ விஸிட்டா?

    இன்னும் தொடரவும்!

  10.  appada! MR.kkum koncham samarthu irukku…….Mrs kku nose cut kodukka!!!!{which hardly happens in real life situation}. humour romba  fluenta varuthu ungalukku.why don’t u try a muzhu neela comedy  story??

  11. வெண்டைக்காய் சாம்பார் அருமை. பாவம் மாமனார். வகையா வந்து மாட்டிக்கிட்டார். அவர் நேரம். அது சரி, எப்ப வர உன் நலபாகத்தை ருசி பாக்க.

    பிரியா! அவன் எழுதாத காமெடி கதையா? நீ கூட அதில் நடித்தாயே, மறந்துவிட்டாயா?

  12. ரசித்துப் படித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 

    அன்புடன்
    திவாகர்

  13. உங்களுக்கும் சேர்த்துதான் இ சார்!

    நன்றி!

    அன்புடன்
     திவாகர்

  14. ஹாஹா, வெண்டைக்காய் சாம்பார் அருமையாக இருந்தது.  அது சரி, மாமனாரை எதுக்குப் பழி வாங்கினீங்க?  அதைச் சொல்ல வேண்டாமோ! :)))))

    வெண்டைக்காயைப் போட்டு வெறும் குழம்பு, அதான் வத்தல் குழம்புனு வைச்சால் எனக்குப் பிடிக்கறதில்லை.  நல்ல வேளையா இதிலே சாம்பாரை வைச்சீங்க. :))))))

    லீவெல்லாம் முடிஞ்சு வந்து இன்னிக்குத் தான் பார்க்க முடிஞ்சது.

  15. வெண்டைக்காய், அதாவது ’ lady’s finger’, எனக்கு ரொம்ப பிடித்த ஒரு item. [I mean my wife’s only]. அதிலும் வெண்டை சாம்பார் என்று கேட்டாலே நாக்கில் ஜலம் ஊறும். அப்படி நாக்கில் ஜலம் ஊறவைத்ததற்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *