தனுசு

நண்பா
உனக்கொரு வாய்ப்பு
நீ
தர்மத்தின் தலைவனாக.”தானத்தில் சிறந்த தானம்’
இன்னதென்று
ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.
இன்றைய அதி வேக உலகம்
சொல்வது
ரத்ததானமடா!உன்னுள் ஊறும்
அந்த ரத்தம்
நீ
உரமிட்டு வளர்க்கவில்லை
விலை கொடுத்து வாங்கவில்லை
அதை இறைக்க இறைக்க
அது ஊற்றெடுத்து பெருகுமடா!

இயற்கை கொடுத்த சீர் அது
அதைக் கொஞ்சம்
நீ
பகிர்ந்து கொண்டால்
உன்
உடல் ஒன்றும் கோபத்தில் சீறாது!

காயம் இது பொய்யடா
அதற்குள் ஓடும்
இந்த ரத்தம் அது மெய்யடா!
அது தானாய் சேரும் திரவமடா
அதை
கொடையாக்க
உனக்கொரு வாய்ப்படா!

தெருவெங்கும் திரியும்
இந்த விளம்பரம் பாரடா
இவருக்கு நாம் என்ன குறைச்சலாடா?
நாமும் கொடுப்போம்
குருதியடா
வள்ளல் எனும் பெயர் வாங்க

இது
சந்தர்ப்பமடா!
படத்துக்கு நன்றி தினமலர் செய்தித் தாள்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரத்ததானம்

  1. ரத்த தானத்தை ஊக்குவிக்கும் அருமையான விழிப்புணர்வுக் கவிதை!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *