கவிஞர் இரா .இரவி

 

 

படத்திற்கு நன்றி:

http://foter.com/f/photo/3138264542/5719167fda/

 

பதிவாசிரியரைப் பற்றி

52 thoughts on “தமிழின் இமயம் திருவள்ளுவர்

 1. கவிஞர் இரா.ரவி அவர்களின் அவர்களின் கவிதைகளை  இணையத்தின் மூலம் நிறையப் படித்திருக்கிறேன். எளிமையான தமிழில் எவருக்கும் புரியும் வண்ணம் வள்ளுவரை வாழ்த்திய கவிஞரின் கவிதை நயததைப் பாராட்டுகின்றேன்..

 2. நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com
  http://www.kavimalar.com
  http://www.eraeravi.blogspot.com
  http://eluthu.com/user/index.php?user=eraeravi
  http://en.netlog.com/rraviravi/blog
  http://www.noolulagam.com/product/?pid=6802#response

   இறந்த பின்னும்
   இயற்கையை ரசிக்க
   கண் தானம் !
   

 3. பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
  திருவள்ளுவர் !                         கவிஞர் இரா .இரவி !

  புலவர்களின் புலவர் 
  கவிஞர்களின் கவிஞர் 
  திருவள்ளுவர் !   
    
  உலகப்பொதுமறைப் படைத்த 
  உலகப்பெரும்  புலவர்  
  திருவள்ளுவர் !   

  பெயரிலேயே திருவைப் பெற்ற 
  திருவாளர்  
  திருவள்ளுவர் !   

  அறநெறிப்  போதிக்கும்
  அற்புத இலக்கியம் வடித்தவர் 
  திருவள்ளுவர் !

  அவ்வையின் உதவியால் 
  அரங்கேற்றம் ஆனவர்  
  திருவள்ளுவர் !   

  அழைத்ததும் ஓடிவரும் 
  அன்பு மனைவியைப் பெற்றவர்  
  திருவள்ளுவர் !   

  உலகில் அதிக மனிதர்கள் 
  வாசித்த இலக்கியம் படைத்தவர்  
  திருவள்ளுவர் !
     ஈராயிரம்  வயது கடந்தும் 
  இளமையாக இருப்பவர்  
  திருவள்ளுவர் !   

  மரபு அன்று என்றவர்களையும்
  ஏற்க வைத்தவர் 
  திருவள்ளுவர் !   

  வாசுகியின் கணவர் 
  வாசகர்களின் கண் அவர்  
  திருவள்ளுவர் !   

 4. தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி

  தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
  தனிப்பெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள்
  தமிழ் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
  தமிழன் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
  கடவுள் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
  கற்கண்டை மிஞ்சும் கனிச்சுவை மிக்க திருக்குறள்
  வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
  வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்
  உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
  உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்
  உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
  உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்
  அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
  அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்
  மனிதநேயம் மனத்தில் விதைக்கும் திருக்குறள்
  மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள்
  ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
  எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்
  காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
  டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவர் திருக்குறள்
  சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
  சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்
  தமிழுக்கும் செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
  தமிழருக்குப் பெருமை ஈட்டித் தந்த திருக்குறள்

 5. திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி

  திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
  திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்
  தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்
  நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள்
  உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள்
  ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள்
  முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள்
  அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள்
  ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள்
  ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள்
  மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள்
  மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள்
  மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள்
  மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள்
  மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள்
  அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள்
  அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள்
  உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள்
  உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள்
  உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை
  உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள்
  இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும்
  அன்பும் அறனும் அவசியம் வேண்டும்
  உயர்ந்த தவத்தை விட சிறந்தது
  ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது
  பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி
  பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம்
  பூ உலகில் செம்மையாக வாழ்பவன்
  வானுலக தேவர்களை விட சிறந்தவன்
  வாழ்வது எப்படி என்பதை அறிய
  வளமான திருக்குறளைப் படியுங்கள்
  பாடாத பொருள் இல்லை திருக்குறளில்
  சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில்
  1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட
  10 திருக்குறள் வழி நடப்பது நன்று

 6. உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி                                                                     கவிஞர் இரா.இரவி
    
  இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி 
  இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி 
  உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி 
  உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி 
  காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி 
  கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி 
  எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி 
  எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி 
  பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி 
  புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி 
  இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி 
  இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி 
  முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி 
  மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி 
  உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி 
  உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி 
  மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி 
  மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி 
  பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி 
  பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி 
  புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி 
  அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி 
  விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி 
  மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி 
  இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி 
  எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி 
  அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி 
  அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி 
  முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி 
  மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி 
  மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி 
  மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி 
  தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி 
  தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி 
  ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி 
  ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி 
  காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி 
  தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி 
  கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி 
  கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி 
  உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி 
  உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி

 7. உலகின் சிறந்த மொழி தமிழ் !கவிஞர் இரா .இரவி !

  உலகில் பல மொழிகள் இருந்தாலும் ,அற்புதத்தமிழ் மொழிக்கு ஈடான மொழி உலகில் இல்லை .உலகின் முதல் மொழி தமிழ் .உலகின் முதல் மனிதன்  பேசிய மொழி தமிழ் .
  அகழ்வாய்வுகளில் , பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் உள்ளது .மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பல மொழிகள்  அறிந்தவர் .ஆராய்ந்தவர் .அவர் நிறுவிய உண்மை உலகின் முதல் மொழி தமிழ் .உலக மொழிகளின் மூலம் தமிழ் .

  தமிழ் மொழி இலக்கண  இலக்கியங்கள் நிறைந்த மொழி .நீதிக் கதைகள் ,வாழ்வியல் கற்பிக்கும் கதைகள் நிறைந்த மொழி .மகாகவி பாரதியார் பல மொழிகள் அறிந்தவர் .அவர் பாடினார் .யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் ..என்று கல்வெட்டுப் போல செதுக்கி உள்ளார் .
  .
  தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளனர் .ஆனால் தமிழகத்தில் வாழும் தமிழர்கள்தான் தமிழ் மொழியின் சிறப்பை உணரவில்லை .ஆங்கில மோகம் பிற மொழி மோகம் பிடித்து அலைகின்றனர் .வேற்று மொழி அறிஞர்கள் பலர் தமிழ்தான் தொன்மையான மொழி .உலகின் முதல் மொழி என்ற ஆய்வு முடிவாக அறிவிக்கின்றனர் .என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில் ..தமிழர்கள் பிற மொழி கலந்து பேசுவதை விட வேண்டும் .
  தமிழ் படித்தால் வேலை கிடைக்காது .தமிழ் படித்தால் பயன் இல்லை என்று இன்று பலர் தவறாக பரப்புரை செய்கின்றனர் .இன்று எல்லாத் துறையிலும் சாதித்த சாதனையாளர்கள் அனைவருமே ஆரம்பக்கல்வியை தமிழ் வழி  பயின்றவர்கள்தான் .அப்துல் கலாம் தொடங்கி மயில்சாமி அண்ணாத்துரை வரை ஆரம்பக்கல்வியை தமிழ் வழி பயின்றவர்கள்தான் .
  திரைப்படத்துறையில் இயக்கத்தில், இசையில், நடிப்பில் சாதித்தவர்கள் அனைவரும் ஆரம்பக்கல்வியை தமிழ் வழி  பயின்றவர்கள்தான் .தாய்மொழியான தமிழ்மொழியில் குழந்தைகள் அனைவரும் ஆரம்பக்கல்வியை  பயின்றால் .சுயமாக சிந்திக்கும் ஆற்றல் பிறக்கும் . தாய்மொழிதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உரம் போன்றது .

  எந்த மொழியும் தெரிந்து கொள்வதில் தவறு இல்லை .தாய்மொழியான தமிழ் மொழி தெரியாமல் பிற மொழி பயில்வது மடமை .இன்று பலர் தாய் மொழியான தமிழ்மொழியை விட்டுவிட்டு ஆங்கிலத்தையும் ,இந்தியையும் ,சமஸ்கிருதத்தையும் தேர்வு செய்து குழந்தைகளை படிக்க வைக்கின்றனர் .மேல் நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற இந்தியும் ,சமஸ்கிருதமும் உதவும் என்று நம்பி குழந்தைகளுக்கு தமிழ் கற்ப்பிக்காமல் தவிர்த்து வருகின்றனர் .மதிப்பெண் பெறும் இயந்திரமாகவே குழந்தைகள் வளர்கின்றனர்.
   .
  ஆரம்பக் கல்வி தமிழ் மட்டுமே  இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் .தமிழகத்தில் மட்டும்தான் தமிழே படிக்காமல் பட்டப் படிப்பு வரை படிக்க முடியும் என்ற அவல நிலை உள்ளது .வேறு எந்த மாநிலத்திலும் இந்த அவல நிலை  இல்லை .

  குழந்தைப் பருவத்தில் இருந்து தமிழ்மொழி கற்பித்தால் குழந்தைகள் அறிவாளியாக வரும் .மேதையாக வரும் .சாதனையாளராக வரும் .தமிழ்  மொழியால் பல நன்மைகள் உண்டு .பண்பாடு ,ஒழுக்கம் ,பொறுமை ,நீதி ,நெறி அனைத்தும் கற்பிக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு .

  தமிழ் மொழியின் மகுடமாக விளங்கும் திருக்குறள் .அனைவரும் படிக்க வேண்டிய வாழ்வியல் இலக்கியம் .உலக இலக்கியங்களில் திருக்குறளுக்கு இணையான ஒரு இலக்கியம் இல்லை என்று அறிஞர்கள் அறிவித்து உள்ளார்கள் .
  காந்தியடிகள் லியோ டால்ஸ்டாய் நூல்களின் மூலமாக திருக்குறளின் சிறப்பை உணர்ந்து பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கி படித்து அறிந்தார் .அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டார் காந்தியடிகள் .காரணம் திருக்குறளை அதன் மூல மொழியான தமிழில் படிப்பதற்காக .

  குசராத்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட காந்தியடிகள் திருக்குறளுக்காக தமிழை நேசித்தார் .தமிழனாக பிறக்க ஆசைப்பட்டார் .ஆனால் தமிழத்தில் பிறந்த தமிழர்களோ தமிழ் படிக்க மறுக்கின்றனர் .ஏன் ? இந்த அவல  நிலை .
  இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பொய் பேசி வருகின்றனர் .இந்தி தெரிந்த வடவர்கள் பலர் வடக்கே வேலை இன்றி தமிழகத்தில் வேலை தேடி  தினந்தோறும்  வந்த வண்ணம் உள்ளனர் .

  உலகின்  முதல் மொழியான தமிழ் மொழியை விட்டு விட்டு பிற மொழியை குழந்தைகளுக்கு கற்ப்பிப்பது மடமை .கண்ணை விற்று விட்டு சித்திரம் வாங்கி என்ன பயன் .சிந்திக்க வேண்டும் 

 8. தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! 

  ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! 

  கவிஞர் இரா. இரவி ! 

  யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு தன்னம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மூன்றாவது கை தன்னம்பிக்கை. உருவம் இல்லாத உறுப்பு . உள்ளத்தில் இருப்பதே சிறப்பு. எதை இழந்தாலும், பெற்று விடலாம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தால். 

  “உன்னால் முடியும் தம்பி” என்றார் தன்னம்பிக்கை எழுத்தாளர் M.S. உதயமூர்த்தி. “உன்னை பலமானவன் என்று நினைத்தால் பலமானவன். உன்னை நீ பலவீனமானவன் என்று நினைத்தால் பலவீனமாவாய். என்னவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்” என்றார் விவேகானந்தர். 

  உன்னால் முடியும் வரை முயல்வது அல்ல, நீ நினைத்த செயல் முடியும் வரை முயல வேண்டும் என்றார் மாமனிதர் அப்துல் கலாம். “இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும், விதைத்துக்கொண்டே செல்ல வேண்டும்” என்பார் முதுமுனைவர் வெ. இறைஅன்பு. இ.ஆ.ப. 

  இப்படி எல்லோரும் சொல்லும் தன்னம்பிக்கை கருத்துக்களுக்கு ஆணி வேர் நம் தமிழ் இலக்கியங்கள் . தன்னம்பிக்கை சிந்தனையின் சுரங்கமாக இருப்பது தமிழ் இலக்கியம். 

  அன்றே ஔவை பாடிய அற்புதமான ஆத்திச்சூடியில் உள்ள அனைத்து கருத்துக்களும், தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் மனிதனை, பண்பாளனாக, நல்ல மனிதனாக ஒழுக்கமுள்ளவனாக நேர்மறை சிந்தனையாளனாக மனிதநேயம் மிக்கவனாக வெற்றியாளனாக மாற்றிட உதவுவது ஆத்திசூடி. 

  சங்க காலத்தில் பல பெண்பாற்புலவர்கள் இருந்தாலும் ஔவையார் அவர்களுக்கு சிறப்பிடம் என்றும் உண்டு. ஔவையார் என்ற பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்த போதும் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஔவையார் அவர்களால் பாடப்பட்டது ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை , நல்வழி ஆகிய நான்கும் இவரால் பாடப்பட்டது. 

  மிக சுருக்கமான சொற்களால் நீதி சொன்ன ஒப்பற்ற இலக்கியம் ஆத்திசூடி. ஆத்திசூடி படிக்க மிக எளிமையாகவும் , இனிமையாகவும் இருக்கின்ற காரணத்தினால் குழந்தைகளுக்கு இளம் வயதிலேய கற்பிக்கும் வண்ணம் பாடத்தில் உள்ளது . 

  புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் வசிக்கும் உலக தமிழர்கள் யாவரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆத்திசூடியை மறக்காமல் கற்பிக்கின்றனர். காரணம் ஆத்திசூடியில் “தன்னம்பிக்கை” விதைக்கும் கருத்துக்கள் இருப்பதால் தான். 

  ஆத்திசூடி முழுவதுமே தன்னம்பிக்கை விதைப்பது. நேர்மறை சிந்தனையில் நேர்மையாளனாக, வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவனாக, சிறந்த மனிதனாக வாழ உதவும் ஒப்பற்ற நூல் அவ்வையின் ஆத்திசூடி. 

  ஆத்திசூடி முழுவதும் தன்னம்பிக்கை என்ற போதும் அதில் மிகவும் முக்கியமாக தன்னம்பிக்கை உணர்த்தும் வைர வரிகளை மட்டும் இங்கே மேற்கோள் காட்டி உள்ளேன். 

  அறம் செய விரும்பு : 

  நல்லது நினை என்பது போல அறம் செய்ய விரும்பு என்கின்றார். விரும்பினால் தான் அந்த விருப்பம் செயலாக மாறும். எந்த செயலாக இருந்தாலும் அறம் சார்ந்ததாக நல்ல செயலாக இருக்க வேண்டும். தமிழர்களின் வாழ்வியல் முறையில் ஒன்று அறவழி நடத்தல் அதனால் அறம் செய்ய விரும்பு என்கிறார் ஔவையார். 

  நேர்மையான வழியில் நடந்து அடுத்தவருக்கு உதவிடும் உள்ளம் உடையவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வார்கள். தானும் சிறப்பாக வாழ்ந்து தன்னை சார்ந்து வாழ்பவர்களையும் சிறப்பாக வாழ்விப்பார்கள். அறம் செய்ய விரும்பி விட்டால் சிந்தனை, செயல், சொல் யாவும் அறம் சார்ந்தே அமையும். அறமற்ற சிந்தனை, செயல், சொல் அற்றுப்போகும் . மனிதனை நெறிப்படுத்தி பண்பாடு பயிற்றுவிக்கும் விதமாக ஔவை நீதி நூல் எழுதி உள்ளார்கள் .. 

  ஆறுவது சினம் : 

  “ஒருவன் கோபத்தோடு எழுந்தால் நட்டத்தோடு அமர்வான் ” என்று பொன்மொழி உண்டு. சினத்தை அடக்க மட்டும் கற்று கொண்டால் வாழ்வில் சிறக்கலாம். ஒரு முறை புத்தரை ஒருவர் கண்டபடி ஏசி, திட்டி இருக்கிறார். திட்டி முடிக்கும் வரை எதுவும் பேசாதிருந்த புத்தர், நீங்கள் என்னிடம் ஒன்றை தருகிறீர்கள், அதனை நான் பெறவில்லை என்றால் அது உங்களிடமே இருந்து விடும். அது போல தான் நீங்கள் திட்டிய எதையும் நான் பெற்று கொள்ளவில்லை என்றார். திட்டியவர் தலை குனிந்தார். இப்படிதான் கோபத்தில் ஒருவர் நம்மை திட்டும் பொது நாமும் பதிலுக்கு திட்டினால் சண்டை வரும். வன்முறை வரும். பேசாமல் அமைதி காத்திட்டால் சண்டைக்கு வாய்ப்பு இல்லை. “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்ற பழமொழி உண்டு. பொறுமையாக இருந்து கோபம் தவிர்ப்பதும் ஒரு தன்னம்பிக்கையாளரின் கடமை ஆகும் . 

  இயல்வது கரவேல் : 

  கொடுக்க முடிந்த பொருளை ஒளிக்காமல் கொடு. நம்மால் முடிந்ததை பிறருக்கு கொடுத்து உதவிடல் வேண்டும் என்கிறார் ஔவை. 

  ஊக்கமது கைவிடேல் : 

  மனவலிமையை கை விடாதே . தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள் இவை. மனவலிமை தான் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா கதவுகளும் திறந்து வரவேற்பு அளிக்கும். தன்னம்பிக்கை உள்ளவர் எங்கும் முத்திரை பதிக்க முடியும். 

  எண்ணெழுத் திகழேல் : 

  கணக்கையும் இலக்கணத்தையும் இகழாமல் நன்றாக கற்றுக் கொள். கணக்கு, இலக்கணம் எனக்கு வராது என்று சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் விதமாக சொன்ன கருத்து இது. 

  ஓதுவது ஒழியேல் : 

  எக்காலத்தும் படித்து கொண்டே இரு. ஒரு தன்னம்பிக்கையாளர் எப்போதும் நல்ல நூல்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். படிக்க படிக்க அறிவு வளரும், ஆற்றல் பெருகும். 

  நயம்பட உரை : 

  யாரிடமும் இனிமையாக பேசு. சாதனையாளர், வெற்றியாளர் இவர்களின் ரகசியம் என்னவென்று பார்த்தால் எல்லோருடனும் இனிமையாக பேசும் பண்பு உள்ளவர்களாக இருப்பார்கள். ஒற்றை வரியில் ஒளவை சுருங்க சொல்லி விளங்க வைக்கும் விதமாக உயர்ந்த கருத்துக்களை மிக எளிமையாகவும், இனிமையாகவும் ஆத்திசூடியில் பாடி உள்ளார் . 

  இணக்கமறிந் திணங்கு : 

  நல்ல குணம் உள்ளவரோடு நட்பு செய். உன் நண்பன் யார் என்று சொல் ‘நீ யார் என்று சொல்கிறேன்’! என்பார்கள். அது போல நல்ல நண்பர்களுடன் பழகினால் நன்மைகள் கிட்டும். வாழ்க்கை சிறக்கும். வளங்கள் பெருகும். 

  உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடிகளில் சொன்ன கருத்துக்களை ஒட்டி பல கருத்துக்கள் ஒரே அடியில் ஔவை சொன்ன ஆத்திசூடியில் காண்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் என்று இன்று சொல்கிறோம். ஆனால் அன்றே திருவள்ளுவர் என்ற ஆணுக்கு நிகராக ஒளவை என்ற பெண்ணும் பாடல்கள் எழுதி உள்ளார் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. பெண் இனத்தின் இமயமாக ஒளவை விளங்குகின்றார் . 

  தந்தை தாய் பேண் : 

  தாய் தந்தையரை மதித்துக் காப்பாற்று. இயந்திரமயமான உலகில் மனிதனும் இயந்திரமாக மாறி பெற்றோரை பேணாத காரணத்தால் தான் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. அவ்வை சொன்ன வழி நடந்து பெற்றோரை பேணினால் தான் முதியோர் இல்லங்கள் தேவைப்படாது . 

  நன்றி மறவேல் : 

  பிறர் செய்த உதவிகளை மறக்காதே. இதையே தான் வள்ளுவர் ஒன்றே முக்கால் அடியிலும் சொல்லி உள்ளார். இன்றைய ஹைக்கூ வடிவத்தின் முன்னோடி யார் என்றால் திருவள்ளுவரையும் அவ்வையாரையும் கூற முடியும். சுருங்க சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திரத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றனர். நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் படைப்புகள் வாழ்கின்றது. 

  பருவத்தே பயிர் செய் : 

  ‘எந்த செயலையும் உரிய காலத்தில் செய்’. இந்த ஒற்றை வரியில் ஓராயிரம் தன்னம்பிக்கை கருத்துக்கள் உள்ளன. எந்த ஒரு செயலையும் நாளை, நாளை என்று நாளை கடத்தாமல் உடன் உரிய நேரத்தில் செயலை செய்து முடித்தால் வெற்றிகள் குவியும், சாதனைகள் நிகழும், புகழ் மாலைகள் தோளில் விழும். “உழுகும் போது ஊர் வழியே சென்று விட்டு அறுக்கும் பொது அரிவாளோடு வந்தானாம்” என்று கிராமிய பழமொழி உண்டு. இன்றைக்கு பலரும் உரிய காலத்தில், உரிய செயல் உடன் செய்யாத காரணத்தினால் தான் வாழ்வில் தோல்வி அடைந்து விரக்தியில் வாடுகின்றனர். 

  இயல்பலாதன செயேல் : 

  நல்லொழுக்கத்திற்கு மாறாக நடக்காதே. இதையே தான் வள்ளுவரும் வலியுறுத்தி உள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது தமிழர் பண்பாடு. ஒழுக்கமுடன் வாழ்ந்தால் எய்ட்ஸ் என்னும் உயிர்க்கொல்லி நோயே வராது. ஒழுக்கம் நமது பண்பாடு சார்ந்தது. ஒழுக்கமானவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும் மரியாதையும் என்றும் உண்டு. சென்ற இடமெல்லாம் சிறப்பும் உண்டு. பிறர் மதிக்கும்படி வாழ்வதும் தன்னம்பிக்கையே. 

  வஞ்சகம் பேசேல் : 

  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே. உள்ளத்தில் உள்ளதை அப்படியே பேச வேண்டும். நல்லது நினைக்க வேண்டும். நல்லது பேச வேண்டும். எண்ணம், பேச்சு, செயல் யாவும் நல்லனவாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்க்க உதவுவது இது போன்ற பண்பு. 

  அனந்த லாடேல் : 

  காலையில் அதிக நேரம் தூங்காதே. இதைத்தான் பாட்டுக் கோட்டையான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், “தூங்காதே தம்பி தூங்காதே” என்று பாடினார். பெரிய மனிதர்களை சந்திக்க வேண்டுமென்றால் காலையில் சென்றால்தான் சந்திக்க முடியும். அதற்கு நாம் அதிகாலையில் எழ வேண்டும். அதிகாலை தூக்கம் என்பது சோம்பேறிகளின் பழக்கம். சுறுசுறுப்பானவர்கள், சாதிக்க வேண்டும் என்ற வெறி உள்ளவர்கள், வெற்றியாளர்கள் அனைவருமே அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள். தன்னம்பிக்கையாளர்களின் முதல் தகுதி அதிகாலை எழுவது. இதைத்தான் அவ்வை வலியுறுத்தி உள்ளார். 

  குணமது கை விடேல் : 

  உயர்குணத்தை எந்த நிலையிலும் கைவிடாதே. நல்ல குணத்துடன் என்றும் நடப்பவர்களுக்கு சமுதாயத்தில் நன்மதிப்பும், மரியாதையும் என்றும் உண்டு . மேன்மக்கள் மேன்மக்களே என்ற கூற்றுக்கு ஏற்ப உயர்ந்த குணத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடாமல் தன்னம்பிக்கையோடு வாழ ஔவை கற்று தருகிறார் . 

  கேள்வி முயல் : 

  நல்ல கருத்துக்களை விரும்பி கேட்க முயற்சி செய். நல்ல கருத்துக்களை கேட்கும் போது நமது குணம் செயல் யாவும் நல்லவையாகவே இருக்கும். 

  செவிகளை நல்லது கேட்க மட்டும் பயன்படுத்துவது நல்லது, கெட்டவை கேட்காமல் இருப்பது சிறப்பு. 

  சான்றோரினத் திரு 

  கல்வி , அறிவு, ஒழுக்கம் நிறைந்தவர்களுடைய கூட்டத்தில் எப்பொழுதும் இரு. அறிவார்ந்தவர்களுடன் இணைந்தே இருக்கும் போது நமக்கும் அறிவு வளரும், ஆற்றல் பெருகும். 

  மூன்றாவது கையாக விளங்கும் தன்னம்பிக்கை : 

  ஔவையின் ஆத்திசூடி உணர்த்தும் தன்னம்பிக்கை எழுத தொடங்கினால் எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அள்ள அள்ள அன்னம் வரும் அட்சய பாத்திரம் போல ஆத்திசூடி படிக்கப்படிக்க தன்னம்பிக்கை கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கும் . 

  ஆத்திசூடி என்பது குழந்தைகள் படிப்பதற்கு என்றே பெரியவர்கள் படிக்காமல் இருந்து விடுகிறோம். ஆத்திசூடியை பெரியவர்கள் அனைவரும் ஆழ்ந்து படிக்க வேணடும். ஆழ்ந்து படித்தால் கவலைகள் காணாமல் போகும். விரக்திகள் ஓடி போகும். தாழ்வு மனப்பானமை தகர்ந்து விடும். தன்னம்பிக்கை வளர்ந்து விடும். வாழ்வியல் நெறி கற்பிக்கும் அற்புதம் ஆத்திசூடி. 

  இன்றைய தன்னம்பிக்கை எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் அனைவருக்கும் ஆணி வேர் ஒளவையின் ஆத்திசூடி தான் . ஆத்திசூடியை ஆழ்ந்து படித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வோம்.

 9. திருக்குறளை தேசிய நூலாக்குக !       கவிஞர் இரா .இரவி !

  பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
  பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !

  மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! 
  மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !

  வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
  வசந்தம் அடையும் ரகசியம் கூறும்  நூல் !

  தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
  தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.

  தமிழென்ற சொல்லின்றி  பெருமை சேர்த்த  நூல் ! 
  தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் ! 

  நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க  எனும் நூல் !
  நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க  எனும் நூல் !

  ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
  ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !

  பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
  பயனுற வாழ்க்கை  வாழ்ந்திட வழி சொல்லும்  நூல் !

  வானிலிருந்து வரும் மழை அமிர்தம்  எனும் நூல் !
  வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் ! 

  இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
  இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !

  கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும்  எனும் நூல் !
  கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக  எனும் நூல் !

  முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
  முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற   நூல் !

  மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
  மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !

  விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
  பறவையில் தேசியப் பறவை மயில்  உள்ளது !

  தேசிய  மரம் மலர் விலங்கு பறவை உள்ளன  !
  தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?

  உலகப்பொது மறையை  தேசிய நூலாக்க !
  உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?  

  திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
  தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !

  திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
  திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

 10. தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத்   தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி !

  வடமொழி எழுத்துக்கள் என்றும் வேண்டாம் !
  வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு !

  நடக்க முடியாதவருக்கு  ஊன்றுகோல் தேவை !
  ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று !

  .தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் !
  தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து  வேண்டாம் !

  பொருளில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
  தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் !

  ரோஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் !
  ரோசா என்று எழுதிப் பழகுங்கள் !

  இராஜா  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
  இராசா  என்று எழுதிப் பழகுங்கள் !

  ரமேஷ்  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
  ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் !

  எழுத்துக்குப் பற்றாக்குறை தமிழில் இல்லை !
  ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் !

  இல்லாதவன்தான்  பிட்சை எடுத்து வாழ்வான் !
  இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் !

  வளமான எழுத்துக்களின் களஞ்சியம் தமிழ் !
  வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் !

  திட்டமிட்டு எழுத்துக் கலப்பை செய்கின்றனர் !
  தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் !

  அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ்மொழி !
  அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் !

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.noolulagam.com/product/?pid=6802#response*

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 11. தமிழ் எங்கள் உயிருக்கு மேல் ! கவிஞர் இரா .இரவி !

  தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு 
  தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று 

  மற்றவர்களுக்கு உயிர்தான் மேல் 
  மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல் 

  தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன் 
  தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும் 

  தமிழைப் பழிப்பவர்களை நாங்கள் 
  தாயே தடுத்தாலும் விடமாட்டோம் 

  உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி 
  உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி 

  அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி 
  ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு 

  இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி 
  எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி 

  உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி 
  அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி 

  பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி 
  பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி 

  பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி 
  பாடல்களால் நிறைந்து விளங்கும் தமிழ்மொழி 

  தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி 
  தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை 

  தமிழின் மகுடமான திருக்குறளுக்கு 
  தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்

 12. தமிழா நீ பேசுவது தமிழா !   கவிஞர் இரா .இரவி 

  தமிழா நீ பேசுவது தமிழா !
  தமிழா இப்படிப்  பேசுவது தகுமா ?

  காலைப் பொழுதை மார்னிங் என்றாய் 
  மதியப் பொழுதை ஆப்ட்ரநூன்  என்றாய்

  மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய்
  நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய் 

  பாட்டை சாங் என்றாய்
  வீட்டை ஹவுஸ் என்றாய்

  படுக்கை அறையை பெட்ரூம்   என்றாய்
  கழிவறையை டாய்லெட் என்றாய்

  தமிழை டமில்  என்றாய்
  தண்ணீரை வாட்டர் என்றாய்

  சோற்றை ரைஸ் என்றாய்
  உப்பை சால்ட் என்றாய்

  கடற்கரையை பீச் என்றாய்
  காதலியை   லவ்வர் என்றாய்

  கண்களை அய்ஸ்     என்றாய்
  கடிதத்தை லெட்டர்  என்றாய்

  பள்ளியை ஸ்கூல் என்றாய்
  கல்லூரியை காலேஜ்  என்றாய்

  மாணவனை ஸ்டுடென்ட் என்றாய்
  ஆசிரியரை  டீச்சர் என்றாய்

  வானொலியை ரேடியோ என்றாய்
  விமானத்தை பிளைன் என்றாய்

  தொலைக்காட்சியை டிவி என்றாய்
  தொலைபேசியை போன்  என்றாய்

  பணத்தை மணி என்றாய் 
  குணத்தை கேரக்டர் என்றாய்

  வஞ்சியை கேர்ள் என்றாய்
  விபத்தை ஆக்ஸிடென்ட்  என்றாய்

  இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய்
  எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !

  தமிழா உன்னிடம் ஒரு கேள்வி சிந்தித்துப் பார் 
  ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ? 

  ஈழத் தமிழர்களின் உச்சரிப்பைப் பார் 
  சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர் 

  தமிழைச் சிதைப்பது தமிழனுக்கு அழகா ?
  தமிழா !சிந்தித்து தமிழிலேயே பேசு ! 

 13. தமிழா ! பேசுவது தமிழா சொல் !கவிஞர் இரா .இரவி

  .
  தமிழா தமிழா சொல் தினமும் நீ
  தரணியில்  பேசுவது தமிழா சொல்

  உலகின் முதல் மொழி தமிழ் உணர்
  உலக மொழிகளின் தாய் தமிழ்

  ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
  உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை

  நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
  நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை

  அழகு தமிழில் அம்மா இருக்கையில்
  ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை

  அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
  ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை

  தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
  தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு

  ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
  ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை

  தமிழன்தான் தமிழ் பேசும்போது
  தமிங்கிலம் பேசி உளறுகின்றான்

  இரு கரம் குவித்து வணக்கம் சொல்
  ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.noolulagam.com/product/?pid=6802#response*

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 14. .
  சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! 
  கவிஞர் இரா .இரவி 

  சாகாமல் காக்கும் மருந்து 
  அமுதம் என்றார்கள் ! 

  அமுதம் நாங்கள் பார்தது இல்லை ! 
  அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! 

  அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக 
  அன்று புராணக்கதை கதைத்தது ! 

  இன்பமாக வாழ வேண்டுமா ? 
  இனிய தமிழ் படியு்ங்கள் ! 

  துன்பம் தொலைய வேண்டுமா ? 
  தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! 

  சோகங்கள் ஒழிய வேண்டுமா? 
  சந்தத்தமிழ் படியு்ங்கள் ! 

  கவலைகள் போக வேண்டுமா? 
  கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! 

  விரக்தி நீங்க வேண்டுமா ? 
  வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் ! 

  ஒழுக்கமாக வாழ வேண்டுமா ? 
  ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் ! 

  பண்பாடாக வாழ வேண்டுமா ? 
  பைந்தமிழ் படியு்ங்கள் ! 

  நெறிகளை அறிந்திட வேண்டுமா ? 
  நிதமும் தமிழ் படியு்ங்கள் ! 

  வீரம் அறிந்திட வேண்டுமா ? 
  விவேகத்தமிழ் படியு்ங்கள் ! 

  சாதி மத வெறி அகற்ற வேண்டுமா? 
  சீர்மிகு தமிழ் படியு்ங்கள் ! 

  மனிதம் மலர்ந்திட வேண்டுமா ? 
  மயக்கும் தமிழ் படியு்ங்கள் ! 

  முத்திரை பதிக்க வேண்டுமா ? 
  முதல்மொழி தமிழ் படியு்ங்கள் ! 

  கற்பனைத்திறன் வேண்டுமா ? 
  கனித்தமிழ் படியுங்கள் ! 

  சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ? 
  சுந்தரத்தமிழ் படியுங்கள் ! 

  வாழ்வியலை உணர வேண்டுமா ? 
  வற்றாதத் தமிழ் படியுங்கள் ! 

  மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ? 
  முத்தமிழ் படியு்ங்கள் ! 

  மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ? 
  மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் ! 

  இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ? 
  இனிமையான தமிழ் படியு்ங்கள் ! 

  சாகாமல் வாழ வேண்டுமா ? 
  சங்கத்தமிழ் படியு்ங்கள் ! 

  சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! 
  சாதாரணம் தமிழ் முன் அமுதம் !

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.noolulagam.com/product/?pid=6802#response*

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 15. பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !

  .இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !
  ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் !
  திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் !
  திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் !
  எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் !
  எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் !
  உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக !
  உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக !
  உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் !
  உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் !
  இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் !
  இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் !
  எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி !
  இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக !
  தமிழா தமிழை, தமிழாகப் பேசு !
  தமிழா தமிழை, தமிழாக எழுது !
  ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு !
  ஒப்பற்ற தமிழுக்கு, பிறமொழி நஞ்சு !
  என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் !
  ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
  ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை !
  ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை !
  தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு !
  தமிழில் பிறமொழி கலவாமல் பேசு !
  பிறமொழி எழுத்தும் , சொல்லும் !
  தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்!

 16. நண்பர் இரா. இரவி முன்னொரு பின்னோட்டத்தில் திருக்குறளைப் பற்றி எழுதிய போது, வள்ளுவர் “கடவுள்” என்று எழுதவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். 

  திருக்குறளின் முதல் 10 பாக்களில் கடவுளைப் பற்றிதானே வள்ளுவர் எழுதி இருக்கிறார்.  அவற்றில் “இறைவன்”  என்று இரண்டு இடங்களில் [இருவினையும் சேரா இறைவன், நீந்தார் இறைவன் அடிசேராதார்] வருகின்றனவே.

  மேலும் ஊழிற் பெருவலி யாவுள ?  பரந்து கெடுக உலகு இயற்றியான், வகுத்தான் வகுத்த வழியின்றி, இவையெல்லாம் இறைவனைத்தானே குறிப்பிடுகின்றன. 

  வள்ளுவர் நாத்திகர் அல்லர் என்பது என் கருத்து..

  சி. ஜெயபாரதன்

 17. தமிழை நினைக்காதவன் தமிழனா ?   கவிஞர் இரா .இரவி !

  தமிழை நாளும் சிதைக்கின்றனர் ஊடகத்தில் 
  தமிழை நினைக்காதவன் தமிழனா ?  சிந்திப்பாய் !

  தமிழின் பெருமை தரணி அறிந்துள்ளது !
  தமிழின் அருமை தமிழன் அறியவில்லை !

  பேசும் சொற்களில் பெரும்பகுதி ஆங்கிலம் !
  பேச்சில் நல்ல தமிழ் காணமல் போனது !

  இந்நிலை இப்படியே தொடர்ந்தால் நம் !
  இனிய தமிழின் நிலை என்னாகும்  சிந்திப்பீர் !     

  உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
  உயர்மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !

  நல்ல தமிழ் பேசினால் கேலி பேசாதீர்கள் !
  நல்ல தமிழ் பேசி அனைவரும் முயலுங்கள் !

  ஆடு மாடு உலக உயிரினங்கள் யாவும் !
  அம்மா என்று அழகு தமிழில் ஒலிக்கின்றன !

  தமிழன் மட்டும்தான் தாய்மொழி தமிழ் மறந்து !
  தமிங்கிலம் பேசித் தமிழை சிதைக்கின்றான் !

  மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் 1 
  மம்மி என்று அழைப்பது  மடமை உணர்ந்திடு !

  அப்பா என்று அழைப்பது தான் அன்பு !
  டாடி என்பது தமிழ் அல்ல நீ  நம்பு !

  பெரியப்பா சித்தப்பா மாமா என்று !
  பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

  பெரிய ஆங்கிலத்தில் அங்கிள் என்ற !
  பதத்தில்  ஒற்றைச் சொல் மட்டுமே  உண்டு !

  பெரியம்மா சின்னம்மா அத்தை அண்ணி  என்று !
  பெரிய பட்டியலே உறவுச்சொற்கள் உண்டு !

  உலக மொழி என்று சொல்லும் ஆங்கிலத்தில் 
  ஒற்றைச் சொல் ஆண்ட்டி  மட்டுமே  உண்டு !

  அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் !
  ஆங்கிலேயரும் புகழும் மொழி தமிழ் !

  முப்பாலை உலகிற்கு தந்த மொழி தமிழ் !
  முத்தமிழை உலகிற்கு தந்த மொழி தமிழ் !

  தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர் !
  தாயினும் உயர்ந்தது தமிழ் உணர்வீர் !

 18. தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! 

  கவிஞர் இரா .இரவி ! 

  தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களே இல்லாமல் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது திருக்குறள் .உலகில் தமிழ் மொழி அறியாதவர்கள் கூட திருக்குறள் அறிந்துள்ளனர்.அதனால்தான் தமிழ்ப்பாட்டி அவ்வை சொன்னாள். 

  .”அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் 
  குறுகத் தரித்த குறள் . 

  திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை .திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை .பெரும்பாலான உலக மொழிகள் யாவிலும் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் அளவிற்கு பெரும்பாலான மொழிகளில் 
  கம்ப இராமாயணம் மொழி பெயர்க்கப்பட வில்லை என்பது உண்மை . 

  பெற்ற தாய் பசியோடு இருந்தால் பஞ்சமா பாதகம் செய்தாவது தாய் பசியினை போக்கிடு என்றுதான் வேதங்கள் சொல்கின்றன .ஆனால் திருவள்ளுவரோ . 

  ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க ( 656) 
  சான்றோர் பழிக்கும் வினை . 

  பெற்ற தாய் பசியோடு இருந்தாலும் தவறான செயல் செய்து பசி போக்க நினைக்காதே ! அறம் பற்றி இவ்வளவு உயர்வாக உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . 

  திருக்குறளின் அருமை பெருமை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு “என்று பாடினான் மகாகவி பாரதி . 

  காந்தியடிகள் அடுத்தபிறவி என்று ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் .காரணம் திருக்குறளை எழுதப்பட்ட மூல மொழியான தமிழில் படித்து உணர வேண்டும் .என்று ஆசைப்பட்டார். காந்தியடிகள் இராமனை வணங்கிய போதும் அவர் திருக்குறளை நேசித்த அளவிற்கு கம்ப இராமாயணத்தை நேசிக்கவில்லை என்பது உண்மை .காந்தியடிகளை அகிம்சை வழியில் நடக்கக் காரணமாக இருந்தது திருக்குறள் . 

  இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண ( 314 ) 
  நன்னயம் செய்து விடல் . 

  விவிலியம் கூட ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னம் காட்டு என்கிறது .திருவள்ளுவர் ஒருபடி மேலே சென்று உனக்கு தீங்கு செய்த பகைவனும் வெட்கப்படும் வண்ணம் நன்மை செய் .இதுபோன்ற ஒப்பற்ற அகிம்சை கருத்தை உலக இலக்கியம் எதிலும் சொல்லவில்லை என்பது உண்மை . கம்ப இராமாயணதிலும் சொல்லவில்லை . 

  மனிதனுக்கு அழகு ! நன்றி மறக்காதது .அதை வலியுறுத்தும் அற்புத திருக்குறள் . 

  நன்றி மறப்பது நன்றன்று ; நன்றல்லது ( 108 ) 
  அன்றே மறப்பது நன்று . 

  ஒருவர் உனக்கு செய்த நன்மையை ஒருபோதும் மறக்காதே .செய்த தீமையை உடன் மறந்து விடு .மனிதநேயம் கற்பிப்பது ஒப்பற்ற திருக்குறள் .வாழ்வியல் நெறி போதிப்பது உயர்ந்த திருக்குறள் . 

  இறுதி மூச்சு வரை தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சிக்காகப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் இலட்சியப் பாதைக்குக் காரணமாக இருந்தது திருக்குறள் . 

  எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ( 423) 
  மெய்ப்பொருள் காண்பது அறிவு . 

  எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அப்பொருளின் மெய்யான பொருளை ஆராந்து அறிவதே அறிவு . 

  தந்தை பெரியார் சொல்வார் ” நான் சொல்வதற்காக எதையும் ஏற்க வேண்டாம் .உங்கள் அறிவுக்கு சரி என்று பட்டால் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் .” தந்தை பெரியார் கம்ப இராமாயணத்தைச் சாடியவர் திருக்குறளைப் போற்றி திருக்குறள் மாநாடு நடத்தினார் . 

  மாமனிதர் அப்துல்கலாம் நேசிப்பது திருக்குறள் .அதனால்தான் எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார் அவருக்கு மிகவும் பிடித்த திருக்குறள் . 

  வெள்ளத்து அனைய மலர்நீட்டம் ; மாந்தர்தம் ( 595 ) 
  உள்ளத்து அனையது உயர்வு . 

  நீரின் உயரத்திற்கு ஏற்ப மலரின் காம்பு உயரும் .மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாழ்க்கை உயரும் . 

  வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் சாதனையாளர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் .இறந்தும் மக்கள் மனங்களில் வாழும் நல்லவர்கள் அனைவரும் திருக்குறள் வழி நடந்தவர்கள் என்பது உண்மை . திருக்குறளில் இல்லாத கருத்துக்களை இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாழ்வில் உள்ள அனைத்து பொருள்களிலும் எழுதி உள்ளார். 

  தமிழண்ணல் , இரா .இளங்குமரனார் ,முனைவர் இரா .மோகன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் யாவரும் மிகவும்நேசிப்பது திருக்குறளே. அவர்கள் நடப்பதும் திருக்குறள்வழியே. அதனால்தான் தமிழ் உலகம் போற்றுகின்றது . 

  சிறந்த சிந்தனையாளர் , பேச்சாளர் , எழுத்தாளர் முது முனைவர் 
  வெ. இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் மிகவும் நேசிப்பது திருக்குறளே. அதனால்தான் முதல் முனைவர் பட்ட ஆய்வு ” திருக்குறளில் உள்ள மனிதவள் மேம்பாடு ” இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வு ” திருவள்ளுவரும் சேக்ஸ்பியரும் ” ஆகும் .முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு தேர்ந்தெடுத்த தலைப்புகளேஅவரது திருக்குறள் பற்றைப் பறை சாற்றும்.திருக்குறள் ஆய்வோடு நின்று விடாமல் திருக்குறள் வழி வாழ்ந்து வருகிறார் . வெற்றி பெறுகின்றார் . 

  செக்கோஷ்லேவியாவில் இருந்து தமிழ் படிக்க தமிழகம் வந்தார் . ஒரு அறிஞர் அவரிடம் உலக மொழிகள் பல இருக்க தமிழை தேர்ந்தெடுத்து படிக்க என்ன ? காரணம் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் . 

  இனிய உளவாக இன்னாத கூறல் ( 100 ) 
  கனியிருப்பக் காய்கவர்ந் தற்று . 

  இனிய சொற்கள் எனும் கனிகள் இருக்கும்போது இன்னாத சொற்களான கடும் சொற்களான காய்கள் எதற்கு ? 

  ” இந்த திருக்குறளை மொழி பெயர்ப்பில் படித்தேன் .இவ்வளவு நல்ல கருத்து உள்ள திருக்குறளை தமிழில் எழுதி உள்ளார்கள் என்ற காரணத்தால் தமிழைப் படிக்க விரும்பினேன் .” 

  திருக்குறள் என்பது மூலம்.ஆனால் கம்ப இராமாயணம் என்பது வால்மீகி இராமாயணம் என்பதைத் தழுவி எழுதப்பட்ட நகல் .கம்ப இராமாயணத்தில் நம்ப முடியாத கற்பனைக் கருத்துக்கள் உள்ளன. திருக்குறளில் நம்ப முடியாத கருத்து எதுவும் இல்லை . 

  மதுரையில் இருந்த இங்கிலாந்து வெள்ளையர் எல்லீசர் திருக்குறளின் அருமை உணர்ந்து அன்றே திருவள்ளுவர் உருவம் பொறித்து பொற்காசு வெளியிட்டுள்ளார் . 

  திருக்குறளில் இன்பத்துப்பாலில் கூட இன்பம் உண்டு .ஆனால் ஆபாசம் இல்லை .ஆனால் கம்ப இராமாயணத்தில் ஆபாசம் உண்டு என்பதற்கு அறிஞர் அண்ணா எழுதிய கம்பரசம் நூலே சாட்சி .
  இரசியாவில் பாதுக்காக்கப்பட்டு வைத்திருக்கும் உலக முக்கிய நூல்களில் திருக்குறள் உள்ளது .கம்ப இராமாயணம் இல்லை . 
  திருக்குறளின் அருமை பெருமை உலகம் அறிந்து வைத்துள்ளது. ஆனால் தமிழர்கள்தான் திருக்குறளின் அருமை ,பெருமை இன்னும் உணரவில்லை .திருக்குறள் படிக்க மட்டுமல்ல வாழ்வில் கடைபிடிக்க வழி காட்டும் நூல். வாழ்வியல் இலக்கியம் . 

  தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே என்பதை தமிழர்கள் யாவரும் உணர்ந்து திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி பெறுவோம் .மனிதனை மனிதனாக வாழ வைப்பது திருக்குறள் .மகத்தான திருக்குறளைப் போற்றுவோம் . 
  நம் குழந்தைகளுக்கும் திருக்குறளைப் பயிற்றுவிப்போம். எந்நாட்டவர்க்கும் , எந்த மத்தவர்க்கும் , எந்த இனத்தவர்க்கும் ,எந்த மொழியினருக்கும் எக்காலமும் பொருந்துவது திருக்குறள். 

  ஒட்டுமொத்த மனித இனத்திற்காக எழுதப்பட்டது திருக்குறள் .ஈடு இணையற்ற இலக்கியம் திருக்குறள் .உலகப் பொதுமறை என்பது முற்றிலும் உண்மை .திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கத் தயங்குபவர்களுக்கு தமிழர்களின் வாக்கு இல்லை என்று அறிவிப்போம் . 

  தமிழ் இலக்கியத்தில் மிகவும் உயர்ந்தது திருக்குறளே ! திருக்குறளே !திருக்குறளே !

  — 

  .

 19. என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! 
  ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்! 

  கவிஞர் இரா .இரவி . 

  உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ் ! 
  உலகம் முழுவதும் பரவியுள்ள மொழி தமிழ் ! 

  உலகின் முதல்மொழி தமிழ்மொழி என்பதை 
  உரைத்தார் அன்றே பன்மொழி அறிஞர் பாவாணர் ! 

  பன்னாட்டு ஆட்சிமொழியான மொழி தமிழ் ! 
  பண்டைக் காலம் முதல் ஆளுமை மொழி தமிழ் ! 

  இணையத்தில் வாகை சூடிய மொழி தமிழ் ! 
  இதயத்தில் இடம் பிடித்த மொழி தமிழ் ! 

  மூவேந்தர்கள் போற்றி வளர்த்த மொழி தமிழ் ! 
  மூத்த புலவர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ் ! 

  எழுத்து பேச்சு இரண்டிலும் வாழும் மொழி தமிழ் ! 
  இணையில்லா திருக்குறளை ஈந்தமொழி தமிழ் ! 

  மொழி அறியாதவர்களும் ரசிக்கும் மொழி தமிழ் 
  மொழியின் பால் ஈர்ப்பு சக்தி உள்ள மொழி தமிழ் ! 

  செம்மொழி நம் மொழி உணர்வாய் தமிழா ! 
  செம்மையைக் காத்திட முயல்வாய் தமிழா ! 

  கலப்பு தாவரத்தில் நன்மை தரலாம் ! 
  கலப்பு மொழிக்கு தீமையே தந்திடும் ! 

  கலப்படம் உணவில் தண்டனைக்குரிய குற்றம் ! 
  கலப்படம் மொழியில் புரிவதும் குற்றமே ! 

  இலக்கண இலக்கியம் நிறைந்த மொழி தமிழ் ! 
  எண்ணிலடங்கா சொற்கள் மிகுந்த மொழி தமிழ் ! 

  இயல் இசை நாடகம் நிறைந்த மொழி தமிழ் ! 
  இனிய முத்தமிழில் இனிய மொழி தமிழ் ! 

  தமிங்கிலப் பேச்சிற்கு முடிவுரை எழுதுங்கள் ! 
  தமிழை தமிழாகவேப் பேசிட முயலுங்கள் ! 

  ஆயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும் 
  அழகு தமிழுக்கு எந்த மொழியும் ஈடாகாது 

  தமிழன் பெருமையை நெஞ்சில் நிறுத்து ! 
  தமிழோடு பிற மொழி கலப்பதை நிறுத்து ! 

  இல்லாதவன் பிச்சை எடுத்தல் நியாயம் ! 
  இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம் ! 

  என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ! 
  ஏன் ? கையை ஏந்த வேண்டும் பிற மொழியில்!

 20. உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ?  கவிஞர் இரா .இரவி !

  தமிழ்மொழி போல சிறந்த  மொழி உலகிலில்லை !
  தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை !

  காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் !
  கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் !

  சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் !
  சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் !

  உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது !
  உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் !

  எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை !
  எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க  வேண்டும் !

  தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் !
  தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் !

  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் !
  மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் !

  தமிங்கிலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம் !
  தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் !

  ஊடகத்தில் தமிழை சிதைத்து வருகின்றனர் !
  ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் !

  ஆங்கிலேயர் ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை !
  தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கல்ப்பதேன் ?
  .

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.noolulagam.com/product/?pid=6802#response*

  http://www.eegarai.net/sta/eraeravi

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 21. உங்கள் தமிழ்ப் பற்றைப் போற்றுகிறேன். மேலும் எழுதுங்கள். ஆனால் தமிழ் பற்றி நீங்கள் புகழ்ந்து சொல்லியுள்ள அத்தனையும் பிறமொழியாளர் சொல்ல வேண்டும் என்பதே என் அவா. அது நிறைவேற நாம் ஆவன் செய்வோம். கே.ரவி

 22. வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி ! 

  கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் ! 
  கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் ! 

  மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் ! 
  மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் ! 

  வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் ! 
  வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் ! 

  ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் ! 
  ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் ! 

  மனஇருளை நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் ! 
  மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் ! 

  மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் ! 
  மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் ! 

  வாசித்தவருக்கு வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் ! 
  வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் ! 

  அகிம்சை தத்துவம் போதிக்கும் வள்ளுவம் ! 
  அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் ! 

  நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் ! 
  நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் ! 

  கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் ! 
  கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் ! 

  தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் ! 
  தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் ! 

  விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் ! 
  விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் ! 

  ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் ! 
  எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் ! 

  தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் ! 
  தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !

 23. பொதுவாக எல்லாப் பாடல்களிலும் தமிழ்ப் பற்று வெளிப்படுகிறது.  வாழ்த்துக்கள்.
  – புதுவை யுகபாரதி

 24. தமிழ்நாட்டில் தமிழ்க்கொலையா ? கவிஞர் இரா .இரவி ! 

  சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் 
  செந்தமிழில் வழக்காட இன்னும் முடியவில்லை ! 

  மீனாட்சியம்மன் திருக்கோவில் கருவறையில் 
  மதுரத்தமிழ் இன்றும் அனுமதிக்கவில்லை ! 

  அங்காடிகளின் விளம்பரப் பலகைகளில் 
  அழகு தமிழ் இன்னும் இடம் பெறவில்லை ! 

  தமிழர்கள் பேசிடும் பேச்சு வழக்கில் 
  தமிங்கிலம் மிக வேகமாக பரவிவிட்டது ! 

  பத்துச் சொற்கள் தமிழன் பேசினால் 
  பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது ! 

  பத்திரிகைகளும் போட்டியிட்டு பரப்புகின்றன தமிங்கிலம் 
  பைந்தமிழைத் தின்னும் திமிங்கிலமானது தமிங்கிலம் ! 

  பண்பலை வானொலிகளும் பரப்புகின்றன தமிங்கிலம் 
  படிக்காத பாமரப் பாட்டி பேச்சிலும் கலந்தது தமிங்கிலம் ! 

  தொலைக்காட்சிகளும் தொல்லை தொடர்கின்றது 
  தவறாமல் தினமும் நடக்குது தமிழ்க்கொலை ! 

  நிகழ்ச்சிகளின் பெயர்களில் ஆங்கிலம் 
  நிகழ்ச்சியில் பேசுவோரின் பேச்சில் தமிங்கிலம் ! 

  இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இனி 
  என்னாகும் நம் தமிழ் தயவுசெய்து சிந்திப்பீர் ! 

  உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! 
  உரிய மதிப்பினை நம் தமிழுக்குத் தந்திடுக !

 25. உலகின் முதல் மொழி உருக்குலையலாமா ? கவிஞர் இரா .இரவி ! 

  தமிழ்மொழி போல சிறந்த மொழி உலகிலில்லை ! 
  தமிழர்கள் தமிழின் சிறப்பை இன்னும் உணரவில்லை ! 

  காப்பியமும் காவியமும் நிறைந்த மொழி தமிழ் ! 
  கவிதைகளும் வசனங்களும் குவிந்த மொழி தமிழ் ! 

  சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் ! 
  சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ் ! 

  உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் கலந்தது ! 
  உயிரினும் மேலானது நம் தாய்மொழி தமிழ் ! 

  எழுத்துக்களுக்கு பற்றாக்குறை தமிழில் இல்லை ! 
  எதற்காக பிறமொழி எழுத்துக்களை கலக்க வேண்டும் ! 

  தமிழைத் தமிழாக மட்டுமே பேசுவோம் ! 
  தமிழைத் தமிழாக மட்டுமே எழுதுவோம் ! 

  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும் ! 
  மொழியில் தூய்மை நாளும் கடைபிடிப்போம் ! 

  தமிங்கிலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம் ! 
  தமிழோடு ஆங்கிலம் கலப்பதை ஒழித்திடுவோம் ! 

  ஊடகத்தில் தமிழை சிதைத்து வருகின்றனர் ! 
  ஒப்பற்ற தமிழை உருக்குலைத்து வருகின்றனர் ! 

  ஆங்கிலேயர் ஆங்கிலத்தோடு தமிழ் கலப்பதில்லை ! 
  தமிழர் மட்டும் தமிழோடு ஆங்கிலம் கல்ப்பதேன் ? 
  .

 26. தமிழ்நாட்டில் தமிழர் உடைக்கு தடையா ? கவிஞர் இரா .இரவி ! 

  குளிர்பிரதேசத்தில் அணியும் ஆடையை அணிந்து ! 
  வெப்பபூமியில் விளையாடும் மூடர் சங்கமே ! 

  மட்டைப்பந்து விளையாட்டு சங்கத்தின் குழுவினரா ? 
  மடையர்கள் கூட்டணி சங்கத்தின் குழுவினரா ? 

  தமிழர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை ! 
  தமிழர்கள்தான் முடிவு செய்திட வேண்டும் நீங்களல்ல ! 

  அப்பா தாத்தா என்றும் அணியும் எங்கள் வேட்டி ! 
  அடையாளம் தமிழருக்குத் தருவது எங்கள் வேட்டி ! 

  பாட்டன் பூட்டன் பாரம்பரியமாய் அணிந்தது வேட்டி ! 
  பாமரரும் படித்தவரும் பண்பாளரும் அணிவது வேட்டி ! 

  பச்சைத்தமிழர் காமராசர் அய்யா அன்று ! 
  பெரிய ரசியாவிற்கு வேட்டியோடு சென்று வந்தார் ! 

  ஐ .நா .மன்றமும் அனுமதிக்கும் ஆடை வேட்டி ! 
  அனுமதி மறுக்கும் முட்டாள்களே திருந்துங்கள் ! 

  நீதியரசரையும் வழக்கறிஞர்களையும் தடுத்து மடமை ! 
  நீசர்களுக்கு புத்திப் புகட்டுவது நமது கடமை ! 

  அனுமதிக்க மறுத்திட்ட நீதியரசரிடம் மன்னிப்பு கேள் ! 
  அனுமதி உண்டு என்று உங்கள்விதியை திருத்துங்கள் ! 

  தூங்கிக் கொண்டு இருக்கும் புலியைச் சீண்டாதீர்கள் ! 
  தூக்கம் விடுத்து விழித்து எழுந்தால் தாங்கமாட்டீர்கள் ! 

  தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி ! 
  தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி ! 

  வேட்டி என்பது விவேகத்தின் அடையாளம் ! 
  வேட்டிக்குத் தடை விதிப்பது அறிவீனம் ! 

  தமிழ்நாட்டில் வேட்டிக்கு எதிராக விதி வகுக்கும் ! 
  துணிவு உங்கள் சங்கத்திற்கு தந்தது யாரடா ? 

  தமிழர்களின் உடையை தீர்மானிக்க நீங்கள் யாரடா ? 
  தமிழகம் விட்டு உங்கள் சங்கத்தை இடம் மாற்றடா ! 

  வேட்டியை தடை செய்யும் முட்டாள் விதியை மாற்று ! 
  வேட்டி ஏற்காவிடின் தமிழகம் விட்டு வீதியை மாற்று ! 

  பண்பாட்டை ஏற்க மறுக்கும் மூட மடையர்களே ! 
  பண்பாடு கற்பிப்பார்கள் உங்களுக்கு தமிழர்களே ! 

  நட்சத்திர விடுதிகளுக்கும் எச்சரிக்கை தருகிறோம் ! 
  நாங்கள் வேட்டி கட்டி வந்தால் வரவேற்று வை வணக்கம்! 

  வேட்டி அணிந்து வருவோரை இனி தடுத்தால் ! 
  விபரீத விளைவுகள் விளையும் எச்சரிக்கை !

 27. பிறமொழி எழுத்தும் , சொல்லும் ! 
  தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும் ! கவிஞர் இரா .இரவி ! 

  இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! 
  ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! 

  திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! 
  திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! 

  எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ் ! 
  எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! 

  உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! 
  உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ! 

  உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் ! 
  உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் ! 

  இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் ! 
  இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் ! 

  எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி ! 
  இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக ! 

  தமிழா தமிழை தமிழாகப் பேசு ! 
  தமிழா தமிழை தமிழாக எழுது ! 

  ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு ! 
  ஒப்பற்ற தமிழுக்கு பிறமொழி நஞ்சு ! 

  என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் ! 
  ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் ! 

  ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை ! 
  ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை ! 

  தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு ! 
  தமிழில் பிறமொழி கலவாமல் பேசு !

 28. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே ! 
  கவிஞர் இரா .இரவி ! 

  சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று 
  சொல்லியது பன்மொழி அறிஞர் பாரதியார் ! 

  உலகின் முதல் மொழி தமிழ் என்று 
  உரைப்பது தமிழனன்று அமெரிக்கா ஆய்வாளர் ! 

  உறவுகளுக்கு என்று பலவிதமான சொற்கள் 
  உன்னத தமிழ் மொழியில் ஏராளம் ! 

  அடுக்கு மொழியில் அள்ளி விட சொற்கள் 
  ஆயிரக்கணக்கில் அழகு தமிழில் உண்டு ! 

  தமிழ் !தமிழ் !தமிழ் ! என்று உச்சரித்துப் பாருங்கள் 
  அமிழ்து ! அமிழ்து ! என்று ஒலி கேட்கும் ! 

  முத்தமிழுக்கும் மகுடமாக விளங்குவது சொற்கள் 
  முக்காலமும் வாழும் ஒரே மொழி தமிழ்மொழி ! 

  ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு 
  ஒரு சொல் கூட பொருள் இன்றி இல்லை ! 

  ஓர் எழுத்து சொல்லுக்கும் பொருள் உண்டு 
  இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள் உண்டு ! 

  உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து 
  மூவகை எழுத்துக்களின் சுரங்கம் தமிழ் மொழி ! 

  பிறமொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி 
  பிறக்கும்போதே சிறப்போடு பிறந்த மொழி ! 

  பன்மொழி அறிஞர்கள் பாராட்டும் தமிழ்மொழி 
  பன்னாட்டு அறிஞர்கள் போற்றிடும் தமிழ்மொழி ! 

  உலக உயிரினங்கள் உச்சரிக்கும் அம்மா தமிழ் 
  உலகமே போற்றிடும் உன்னத மொழி தமிழ்மொழி !

 29. vungal kavidaigal,vartaigal migavum nandraga vulladu .. ippodu yenaku indha thalaipil katturaigal vaindum mendru parivodu kaitu kolkirain…

  இமயம் நம் காலடியில் பற்றி சில கட்டுரைகள்

 30. தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; 
   திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்

  *****
         நூல் நிலத்தை அளக்கப் பயன்படும். செங்கல் அடுக்கும் போது சமம் பார்க்க பயன்படும். ஒழுங்குபடுத்துவது, செம்மைப்படுத்துவது நூல்.  மாந்தரை செம்மைப்படுத்துவது எதுவோ? பண்படுத்துவது எதுவோ? அதுவே நூலாகின்றது.  நூல் ஒன்று கீழே இருந்தால் மிதிபடக் கூடாது என்கிறோம்.  காரணம் சான்றோர் எழுத்திற்குத் தரும் மதிப்பு.  பல பொருள்களில் பயன்படுவது நூல்.

         நூல் எழுதுவதற்கே ஒரு பா இருந்தது நூற்ப்பா என்றனர்.  ஆசிரியரிடம் இருந்த நூலிற்கு ஆசிரியப்பா என்றனர்.  அகவல் போல ஓசை எழுப்பும் பாடலை அகவல் பா என்றனர்.  சின்நூல் சமணசமயத்தினருடையது, நன்னூல் சமணர்களுடையது.  தென்னூல் தஞ்சை பாலசுப்பிரமணி எழுதியது.  இந்நூல் புலவர் குழந்தை இயற்றியது.  பின்னர் தான் நூல் என்பது பொதுப்பெயர் ஆனது.  வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர், இங்கு வந்து தமிழ் கற்று தமிழில் நூல்கள் வடித்தார்.  சமணர்கள், கிறித்தவர்கள், சைவர்கள், வைணவர்கள் அனைவருக்கும் சமயம் கடந்த பொதுச்சொல்லாக நூல் ஆனது..  தமிழ்  தமிழர் பரந்து விரிந்த எண்ணத்தோடு இருந்தது தெளிவாகின்றது.

         இளங்கோவடிகள் சமணர்.  சிலப்பதிகாரத்தில் மற்ற கடவுள்கள் பற்றியும் பாடி உள்ளார்.  தமிழில் எல்லா மதத்தவருக்கும் நூல்கள் உள்ளன. கிறித்தவர்களுக்கு தேம்பாவணி, சைவர்களுக்கு பெரிய புராணம், வைணவர்களுக்கு இராமாயணம், மகாபாரதம் உள்ளன. கடவுள் இல்லை என்று மறுப்பவர்களுக்கு இராவண காவியம் உள்ளது.  வள்ளலார் பொதுநிலை அருட்பா எழுதினார்.  சன்மார்க்க வழி கற்பித்தார்.  அவரிடம் முன்பு பல தெய்வங்களை வழிப்பட்டீர்கள் என்று கேட்டதற்கு, அப்போது என் அறிவு, அவ்வளவு குறைவு என்றார்.  உலகில் உள்ள எல்லோரும் வாழப் பிறந்தவர்கள், யாரையும் வாழவிடாமல் செய்வது மாந்தநேயம் அன்று.  எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றார் வள்ளலார்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார்.

         உலகத்தை உங்கள் கையில் கொண்டு வருவது நூலகம்.  அப்துல் ரகீம் என்ற எழுத்தாளர் அவரது நூலில் ஒரு பணக்காரர் பற்றி எழுதி உள்ளார்.  ஒருவர் திட்டமிட்டார் :  உழைத்து பொருள் ஈட்டுவது, 40 வயதில் வேலைகளை நிறுத்தி விடுவது : 40 கோடி டாலர்கள் ஈட்டுவேன் என்று கணக்குப் போட்டு உழைத்தார்.  40 வயது ஆனதும் ஈட்டுவது நிறுத்தினார்.  56 கோடி டாலர்கள் சேர்ந்தது, ஒரே ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பகுதியை ஒதுக்கினார்.  நண்பர்களுக்கு 1500 டாலர்கள் கொடுத்தார்.  மீதம் இருந்த பணத்தில் 1726 நூலகங்கள் அமைத்தார் என்பதை எழுத்தாளர் அப்துல் ரகீம் அழகாக எழுதி உள்ளார்.

         கெடுப்பது அல்ல நூல், எடுத்துக் கொடுப்பதே நூல், செம்மைப்படுத்துவது நூல், பாரசீக கதை ஒன்று உண்டு.  வென்ற மன்னனிடம் அவரது  தளபதி, போரிட்டு தோற்ற மன்னனின் மணிமுடியையும், தங்கப்பேழையையும் கொண்டு வந்து கொடுத்து, இந்த மணிமுடியை நீங்கள் பயன்படுத்தலாம், தங்கப் பேழையை அணிகலனாக அன்னைக்குத் தரலாம் என்றார். என்னிடம் தோற்றவரின் மணிமுடியை நான் அணிய மாட்டேன், அன்னைக்கு அணிகலனுக்கு தங்கப்பேழையையும் தர மாட்டேன். இரண்டையும் வைத்து அதன் மீது இரண்டு நூல்களை வைக்கலாம் என்றார் மன்னர்.  அந்த மன்னர் வேறு யாருமல்ல அலெக்சாண்டர் தான்.

         நூலின் பயன் பார்க்க வேண்டுமானால் எந்த நூலிலாவது பற்று வைக்க வேண்டும், நூலின் ஆழத்திற்குப் போக வேண்டும், நூல் படிக்கும் இன்பத்திற்கு இணையான இன்பம் இவ்வுலகில் வேறில்லை.

         நூலகம் என்பது குழந்தைகளுக்கு பாலகம், முதியோர்களுக்கு மேலகம், நூலின் பயன்பாடு மிகுதி.  ஆங்கிலத்தில் ‘NEWS’ என்றார்கள்.  நான்கு திசைகளையும் பற்றி சொல்வார்கள்.  வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு நான்கின் சுருக்கம்.

         இங்கிலாந்தில் இருக்கக் கூடியவர் அவர், பிறந்தது ஜெர்மனி.  25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை.  25000 நூல்கள் படித்தார்.  அவர் பொதுவுடைமை பற்றி மிகச்சிறந்த நூல் எழுதினார்.  அவர் தான் காரல்மார்க்சு.  படிப்பதை நிறுத்தாவிட்டால் ஞாயிறுதோறும் கட்டி வைத்து 25 சவுக்கடிகள் தருவோம் என்றாலும், படிப்பதை நிறுத்த மாட்டேன், சவுக்கடிகளை வாங்கிக்கொண்டு திரும்பவும் படிப்பேன் என்றார் காரல்மார்க்சு.  அந்த அளவிற்கு வாசிப்பை நேசித்தவர்.

         சாக்ரடீசு சென்ற இடமெல்லாம் கேள்விகள் கேட்பார்.  அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது.  நஞ்சை குடித்து விட்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.  அப்போது சொன்னார்கள் : பேசுவதை நிறுத்துங்கள், அப்போது தான் நஞ்சு விரைவாக வேலை செய்யும். விரைவில் இறப்பீர்கள், துன்பம் இல்லை என்றனர்.  சாக்ரடீசு சொன்னார், இன்னும் கூட நஞ்சு கொடுங்கள், குடித்து விட்டு பேசுகிறேன், ஒருபோதும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என்றார்.  அப்போது வெளியே பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.  அருகில் உள்ளவரை அந்தப்பாடல் கேட்டு எழுதி வாருங்கள்.  நான் படிக்க வேண்டும் என்றார்.  இப்போதுமா படிக்க வேண்டும் என்று கேட்டார்.  அதற்கு சாக்ரடீசு சொன்னார், போகுமுன் ஒன்றை தெரிந்து கொண்டு போகிறேன் என்றார்.  அவ்வளவு பெரிய அறிஞர் சொன்னார்.  எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று.  எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் அந்த ஒன்று.  பெரிய அறிஞரின் அடக்கம் பாருங்கள்.

         விவேகானந்தர் சொன்னார், என்னிடம் உலகில் தலைசிறந்த சிந்தனையாளர் ஒருவர் பெயர் சொல் என்றால், ‘புத்தர்’ என்றே சொல்வேன் என்றார்.  ஆனால் புத்தரோ அவருடைய சீடர் ஆனந்தன் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் பாருங்கள் : உங்கள் அளவிற்கு ஞானம் பெற்றவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்றார்.  அதற்கு புத்தர், மூடிய கையைக் காட்டி உள்ளே என்ன இருக்கிறது? சொல் என்றார். தெரியவில்லை என்றார், என் கைக்குள் இருப்பதே உனக்குத் தெரியவில்லை, என் கூட்டுக்குள் இருப்பது உனக்கு எப்படித் தெரியும். என் கையில் உள்ளது. ஒரே ஒரு அரச இலை.  உலகம் முழுவதும் பல இலைகள் உள்ளன.  நான் அறிந்தது ஒரு இலை அளவு தான் என்றார் புத்தர்.  புத்தரின் அடக்கம் பாருங்கள்.

         சங்க காலத்திலேயே கருமருந்து இருந்து இருக்கின்றது.  ஆனால் நாமோ கருமருந்தை கோயில் விழாவிற்கு வேட்டு வைக்க மட்டுமே பயன்படுத்தினோம்.  ஆனால் வெள்ளையர்கள் கருமருந்தை அழிவுக்கும் பயன்படுத்தினர்.  நீராவியில் நாம் இட்லி, புட்டு அவித்தோம், அவர்கள் தொடர்வண்டி, கப்பல் இயக்கினார்கள்.

         படிப்பவரைப் பொறுத்துத் தான் எந்த நூலும் பயன் தரும்.  மருத்துவர் கையில் உள்ள கத்தி, போகப் போடும் உயிரை வாழ்விக்கும்.  கொலைகாரன் கையில் உள்ள கத்தி வாழ வேண்டிய உயிரைக் கொன்று விடும்.  கத்தி நன்மைக்கும் பயன்படும், தீமைக்கும் பயன்படும், பயன்படுத்துவதில் உள்ளது நன்மையும், தீமையும்.

         திருக்குறள் ஆய்வுரை எழுதியவர் ஓர் உவமை எழுதினார். குளத்தில் தங்கக்காசு உள்ளது, இரண்டு அடி தூரம் கையை விட்டேன், கிடைக்கவில்லை, மேலும் விட்டேன், கிடைக்கவில்லை, திருக்குறள் மிக ஆழமானது, ஒவ்வொருவருக்கும் அவரவர் எடுத்துக் கொள்ளும் அளவு தான் கிட்டும், திருக்குறள் முழுமையும் யாருக்கும் கிட்டாது.

         தன்நிலையை உயர்த்த வாய்ப்பாக இருக்கும் நூல்.  நூல் போன்று, நூலகம் போன்று உயர்ந்தது உலகில் வேறு இல்லை.  நூல்-புத்தகம்-ஏடு என்றும் சொல்வதுண்டு.  போந்தகம் என்றால் பனைமரம் என்று பொருள்.  பனை ஓலையில் எழுதுவதால் பொத்தகம் என்றனர்.  பின்னர் புத்தகம் ஆனது.  பொந்து இருக்கும் மரம் பனைமரம் என்பதால் போந்தகம் என்றனர்.

         ஓலைச்சுவடி என்றால் சம்மான ஓலைகளை சுவடி சேர்த்தல்.  இதுவே சோடு என்றானது, பின்னர் ஜோடி என்றனர்.  சுவடி என்ற சொல்லை ஜோடியாக்கி விட்டோம்.  சுவடனை – சோடனையானது.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புத்தகசாலைக்கு சுவடிச் சாலை என்று பெயர் சூட்டினார்.  பெரிய புராணத்தில் புத்தகம் என்ற சொல் வருகின்றது.  பனைஓலையும் பக்குவமாக இருக்க வேண்டும், அதிகம் வளைந்ததாகவோ, அல்லது வளையாத்தாகவோ அல்லாமல் பதமாக வளைந்த ஓலையை வெந்நீரில் காய வைத்து உலர்த்த வேண்டும்.  பின்னர் மஞ்சள் தடவ வேண்டும்.  இதற்கு பின்பு தான் எழுதுவதற்குப் பக்குவம் அடையும் ஓலை.  நூல் என்பதை பல்வேறு சொற்களில் பயன்படுத்தி உள்ளனர்.  முறை, திருமுறை, கணக்கு, (மேற்)கணக்கு, (கீழ்)கணக்கு, திரட்டு, திரட்டி, தொகை, (பத்துப்)பாட்டு, இப்படி பல சொற்களுக்கும் நூல் என்றே பொருள்.  அவ்வை, நூலை பட்டாங்கி என்பார்.  திருவள்ளுவர், நூலை விதை என்பார்.  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்வார், நூல் என்பது விதைநெல் என்று. ஒரு விதைநெல் பல நெல்மணிகளை விளைவிப்பது போல ஒரு நூல் பல நூல்களை உருவாக்கும்.

         எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, தொல்காப்பியர் சொன்னது, சொல்லின் பொருள் பார்த்த பார்வையில் தெரியாது, ஆழமாகப் பார்க்க வேண்டும், இயல்பாக தண்டனை என்ற சொல் பயன்படுகிறது  அடிக்குச்சியால் அடிப்பது, சிறையில் இடுவது, தூக்கிலிடுவது என அனைத்தும் தண்டனை என்ற சொல் இடம்பெறுகிறது.

         தண்ணீர் இருந்து வரும் தாமரைக்கு தண்டு என்கிறோம். மேலே வந்த கீரையை கீரைத்தண்டு என்கிறோம்.  மரம் தண்டிலா இருக்கு என்கிறோம்.  தண்டு என்ற சொல் தடியானது, ஊன்றுகோலுக்கும் தடி என்றார்கள்.  தண்டபாணி, தண்டல் நாயகன், தண்டோரா இப்படி பல சொற்களுக்கு மூலம் தண்டு.  புல், மரத்திற்கு தண்டு என்று இருந்த சொல், பின்னர் தங்கம், வெள்ளி உலோகங்களின் பொருட்களுக்கும் தண்டு என்ற சொல் வந்தது.  இப்படி சொல்லை ஆயும் இன்பத்திற்கு இணையான இன்பம் இல்லை.  தண்டு என்ற சொல் வழி பிறந்ததே தண்டனை என்ற சொல்.

         படைப்பாளி எப்படி இருக்க வேண்டுமென்றால், படிப்பாளிகளையும் படைப்பாளியாக்க வேண்டும்.  இந்தக் கொள்கை கொண்டு இருந்தால் கல்லார் இல்லார் என்ற நிலை வரும்.  கணவன், மனைவி கல்லாமல் இருந்தால் கற்பிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் கற்பிக்க வேண்டும்.  கடமையை, கற்பித்தலை செய்ய வேண்டும்.  எல்லோரையும் கற்றவராக்க வேண்டும்.  பெண்கள் இன்று எல்லாத் துறையிலும் உள்ளனர்.  காரணம் கல்வி. நூல் வாசித்தல்.

         வேலு நாச்சியாரிடம் குயிலி என்ற தோழி இருந்தாள்.  அவள் வெள்ளையர்கள் துப்பாக்கி, பீரங்கி என்று குவித்து வைத்திருந்த கிடங்கிற்கு சென்று தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு எரிந்து கிடங்கை எரித்தாள்.  குயிலி வரலாற்றில் இடம் பெற்றாள்.  ஈழத்தில் நடந்த போராட்டத்திற்கு முன்னோடி குயிலி தான்.  (சொல்லும் போது அவர் கண்ணில் கண்ணீர் வந்தது).

         அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்று சொல்பவரைத் தடுத்து, பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும், தாய்மொழி, தாய்நாடு காக்க பெண்களுக்கு சொத்துரிமை, சொல்லுரிமை வழங்கிடல் வேண்டும்.

  *****

        

  .

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  https://www.facebook.com/rravi.ravi

  http://www.eraeravi.com

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.noolulagam.com/product/?pid=6802#response*

  http://www.eegarai.net/sta/eraeravi

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 31. பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் ! கவிஞர் இரா .இரவி ! 
  புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் ! 
  பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்! 
  தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களை 
  தனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்! 
  தமிழ் ஆசிரியராகப் பணியினைத் தொடங்கியவர்! 
  தமிழ் ஆசு கவியாக வாழ்வில் உயர்ந்தவர்! 
  கொள்கையில் குன்றாக என்றும் நின்றவர்! 
  குணத்தில் அன்பின் சிகரமாகத் திகழ்ந்தவர்! 
  கனக சுப்புரத்தினம் என்ற இயற்பெயரை பாரதிக்காக 
  பாரதிதாசன் என்று மாற்றிய உண்மைச் சீடர்! 
  பாரதிதாசன் ஆத்திசூடி அழகாக வடித்தவர்! 
  பாரினில் அனைவரும் விரும்பிடும் பாடல் படைத்தவர்! 
  பாடல்களால் பரவசம் படிப்பவர்களுக்குத் தந்தவர்! 
  பார் போற்றும் பாடல்கள் புனைந்தவர்! 
  பகுத்தறிவுக் கருத்துக்களை விதைத்தவர்! 
  பகுத்து உணர பாடலால் உணர்த்தியவர்! 
  தமிழ் இன உணர்வை கவிதையில் ஊட்டியவர்! 
  தமிழுக்காக குரல் தந்த புதுவைக் குயில் அவர்! 
  ‘இருண்ட வீடு’ தந்து ‘குடும்ப விளக்கு’ ஏற்றி 
  ‘எதிர்பாராத முத்தம்’ தந்து ‘அழகின் சிரிப்பு’க் கண்டவர்! 
  ‘தமிழச்சியின் கத்தி’யை ‘பாண்டியன் பரிசாக’த் தந்தவர்! 
  ‘குயில்’ ‘இசையமுது’ ‘குறிஞ்சித் திட்டு’ வடித்தவர்! 
  ‘பெண்கள் விடுதலை’யை ‘பிசிராந்தையார்’க்கு யாத்தவர்! 
  படைப்பால் ‘தமிழ் இயக்கம்’ கண்ட பாவலர்! 
  புதுவையில் பிறந்திட்ட புதுமைக் கவிஞர்! 
  பிரஞ்சு படித்த போதும் தமிழை நேசித்தவர்! 
  பண்டிதர்களிடம் தமிழைக் கற்றவர்! 
  பைந்தமிழை அமுதமென்று புகழ்ந்தவர்! 
  பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு 
  பல்வேறு பொருள்களில் பாடிய பாவலர்! 
  கவிதை கதை வசனம் கட்டுரை என 
  கணக்கிலடங்காத படைப்புகள் படைத்தவர்! 
  சகலகலா வல்லவராக வாழ்ந்து சிறந்தவர்! 
  சரித்தியம் படைத்து கவிஉலகில் உயர்ந்தவர்! 
  குடும்பக்கட்டுப்பாடு பேசுகிறோம் இன்று 
  குடும்பக்கட்டுப்பாடு பற்றி அன்றே பாடியவர்! 
  தமிழின் அருமை பெருமை உணர்த்தியவர்! 
  தமிழருக்கு மானமும் அறிவும் கற்பித்தவர்! 
  பாரதிதாசன் கவிதைகள் படித்தால் போதும் 
  பைந்தமிழ்ச் சொற்கள் யாவும் தெரியும்! 
  தமிழ் எனும் கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்! 
  தமிழ் முத்துமாலை தொடுத்து வழங்கியவர்! 
  கவிதையின் சுவையை பாமரருக்கும் உணர்த்தியவர்! 
  கவிதையில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர்! 
  புதுவையின் பெருமைகளில் ஒன்றாக மாறியவர்! 
  புதுமைகள் படைப்புகளில் புகுத்தி வென்றவர்! 
  சொற்களைச் சுவைபட பாட்டில் யாத்தவர்! 
  சுந்தரத்தமிழை சொக்கிடும் வண்ணம் தந்தவர்! 
  பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார்! 
  பாரதிதாசன் தான் அந்த ஒருவர்!

 32. தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி ! 

  தமிங்கிலப் பேச்சிற்கு முடிவு கட்டுவோம் ! 
  தமிழோடு ஆங்கிலக் கலப்பின்றிப் பேசிடுவோம் ! 
  ஆரம்பக்கல்வியை தமிழில் மட்டும் வழங்குவோம் ! 
  அதன் பின் மற்ற மொழிகள் எதுவும் படிக்கட்டும் ! 
  அப்பா அம்மா என்றழைப்பதைக் கட்டாமாக்கிடுவோம் ! 
  டாடி மம்மி என்றால் தண்டத்தொகை வாங்கிடுவோம் ! 
  குழந்தைகளுக்கு பெயர்களை நல்ல தமிழில் சூட்டுவோம் ! 
  குழந்தைகளுக்கு சிந்திக்க தமிழைப் பயிற்றுவிப்போம் ! 
  ஊடகங்களின் தமிழ்க் கொலையைத் தடுத்திடுவோம் ! 
  உரிமைகளைத் தமிழ் மொழிக்குப் பெற்றிடுவோம் ! 
  விளம்பரங்களில் வேற்று மொழிக்கு தடை விதிப்போம் ! 
  விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முதலிடம் அளிப்போம் ! 
  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றாக்கிடுவோம் ! 
  எம் தமிழன் பெருமையை உணர்த்திடுவோம் ! 
  உலக மொழிகளின் தாய்மொழி தமிழ் புரிய வைப்போம் ! 
  உலக முதல்மொழி தமிழ் மூத்தது தமிழ் அறிய வைப்போம் ! 
  தமிழின் அருமையை தமிழருக்குக் கற்பிப்போம் ! 
  தமிழ் மொழி போல இனிது இல்லைஅறிவிப்போம் ! 
  திருக்குறளை உடன் தேசிய நூலாக்க வேண்டும் ! 
  தேசிய நூலாக்க தாமதிக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ! 
  தமிழ் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுவோம் ! 
  தமிழ் கல்வி மட்டுமல்ல வாழ்வியல் அறிந்திடுவோம் ! 
  வாழும் தமிழ் அறிஞர்களின் வாழ்நாளை நீட்டிப்போம் ! 
  வாழும் காலமெல்லாம் போற்றிப் பாதுகாப்போம் ! 
  படைப்பாளிகள் தமிங்கிலம் எழுதுவதை நிறுத்திடுவோம் ! 
  படைப்பைக் கலப்பின்றி படைக்க வலியுறுத்துவோம் ! 
  பிறமொழி இலக்கியங்களை தமிழாக்கம் செய்திடுவோம் ! 
  பைந்தமிழ் இலக்கியங்களை பிறமொழியில் பெயர்த்திடுவோம் ! 
  தமிழர் தமிழரோடு தமிழில் மட்டும் பேசிடுவோம் ! 
  தமிழர்கள் அனைவரும் சாதி மதம் விடுத்து சங்கமிப்போம் ! 

  .

 33. பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! 

  தமிழா தமிழனா இரு ! கவிஞர் இரா .இரவி ! 

  ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதை நிறுத்து 
  அழகு தமிழில் கையொப்பம் இட்டுப் பழகு ! 

  ஆங்கிலத்தில் முன் எழுத்து எழுதுவதை நிறுத்து 
  அற்புதத் தமிழில் முன் எழுத்தை எழுது ! 

  தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நிறுத்து 
  தமிழர்களிடம் தமிழில் பேச என்ன தயக்கம்? 

  தமிங்கிலம் பேசும் தமிழ்க் கொலையை நிறுத்து 
  தமிழில் ஆங்கிலச் சொல் கலப்பின்றிப் பேசு ! 

  குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர் வைப்பதை நிறுத்து 
  குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை சூட்டு! 

  மம்மி டாடி என்றழைப்பதை உடனே நிறுத்து 
  மம்மி என்றால் செத்தப்பிணம் என்று பொருள் ! 

  அம்மா அப்பா என்றே அழகு தமிழ் அழைக்கட்டும் 
  ஆங்கில மோகம் தமிழன் மனம் விட்டு அகலட்டும் ! 

  உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழைக் கற்றிடு 
  ஒலிக்கும் மொழி வீட்டில் தமிழாகவே இருக்கட்டும் !. 

  தமிழனாகப் பிறந்ததற்காக பெருமை கொள் 
  தமிழனாகப் பிறக்க ஆசைபட்டார் தேசப்பிதா ! 

  உலகப் பொது மறையை உலகிற்கு தந்தது தமிழ் 
  உலகிற்கு பண்பாட்டைக் கற்பித்தது நம்தமிழ் ! 

  தொல்காப்பியம் அகத்தியம் ஹைக்கூ கண்ட தமிழ் 
  தொன்மையான உணமையான ஆதி மொழி தமிழ் ! 

  ஆங்கில அறிஞர்களும் தமிழை நேசிக்கின்றனர் 
  அவர்கள் அறிந்த பெருமையை தமிழா அறிந்திடு ! 

  மலையாளத்தார் மலையாளியாகவே வாழ்கின்றனர் 
  கன்னடத்தார் கன்னடராகவே வாழ்கின்றனர் ! 

  தமிழர் மட்டும் தமிழராய் வாழ்வதில்லை ஏன் ? 
  தமிழா தமிழராக வாழ்வது நமது கடமை ! 

  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 
  தரணிப் போற்றும் வைர வரிகளை உணர்ந்திடு !

 34. பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

  எழுந்து நிற்க எழுது!
  கவிஞர் இரா. இரவி.

  *****
  தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
  எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது!

  கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
  குமுகாயம் சிறக்க எழுந்து நில்!

  “தூங்காதே தம்பி தூங்காதே” என்று
  திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!

  விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
  வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!

  தமிழனின் தூக்கம் களைய வில்லை
  தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் !

  உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
  உணரவில்லை நம் தமிழர்!

  உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
  உணரவில்லை நம் தமிழர்!

  அம்மா அப்பா என்று நல்ல
  அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!

  ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
  ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!

  ‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
  மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!

  உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
  உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!

  பேருந்து நிலையத்தை ‘பஸ் ஸ்டாண்டு’ என்கிறான்
  தொடர்வண்டி நிலையத்தை ‘ரயில்வே ஸ்டேசன்’ என்கிறான்!

  இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
  இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்

  தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
  தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!

  பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
  பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!

  பத்துச் சொற்கள் பேசினால் அதில்
  பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!

  தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
  தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!

  டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
  டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!

  அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
  அற்புத தமிழனாகப் பிறக்க விரும்பினார்!

  நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
  நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!

  மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
  மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!

  விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
  விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!

  ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
  அறிவாளியாக குழந்தைகள் வளரும்!

  என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
  ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

  இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
  எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!

  சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
  சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!

  காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
  கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!

  உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
  உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!

  ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
  அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!

  தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
  தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!

  தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
  தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!

  உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
  உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!

  தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
  தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!

  ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
  ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!

  உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
  ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!

  தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
  தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!

  குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
  குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!

  ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
  ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!

  மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
  மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!

  ஒரு கை தட்டினால் ஓசை வராது
  ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!

  தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
  தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!

  கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
  கொட்டிய கரத்தை முறிப்பவன் தமிழன்!

  எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
  எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!

  தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
  தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!

  உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!

  முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
  முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்

  தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
  தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!

  ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
  தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!

  உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
  உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!

  ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
  உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!

  மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
  மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி

  அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
  அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!

  அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
  அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!

  வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
  விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!

  எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
  எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!

  ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
  ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!

  மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
  மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!

  உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
  உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!

  எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
  எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!

  கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
  கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!

  தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
  தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!

  படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
  படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!

  ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
  அனைவரும் உடனே விழித்து எழுவோம்!

  ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
  எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!

  அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
  அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்

  தமிழா! தமிழா! தூங்கி வழிந்தது போதும்
  தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!

  எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
  எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!

 35. கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன்
  அவர்கள் தந்த தலைப்பு !

  செழுமை மிகு தமிழுக்கேன்
  சமற்கிருத எழுத்துக்கள் ! கவிஞர் இரா .இரவி !

  இல்லாதவன் கடன் வாங்கலாம்
  இருப்பவன் கடன் வாங்கலாமா ?

  சொற்களின் பெட்டகம் களஞ்சியம் தமிழ்
  சமற்கிருத எழுத்துக்கள் தமிழிலில் எதற்கு ?

  வேட்டி என்ற அழகான சொல் இருக்க
  வேஷ்டி என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  இராசா என்ற இனிய சொல் இருக்க
  இராஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  ரோசா என்ற நல்ல சொல் இருக்க
  ரோஜா என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  இந்து என்ற இனிய சொல் இருக்க
  ஹிந்து என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  செயம் என்ற சொல் செழிப்பாக இருக்க
  ஜெயம் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  இராமேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
  இரமேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  சுரேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
  சுரேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  கணேசு என்ற சொல் தமிழிலில் இருக்க
  கணேஷ் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  சோசப் என்ற என்ற சொல் தமிழிலில் இருக்க
  ஜோசப் என்று சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  நட்டம் என்ற சொல் தமிழிலில் இருக்க
  நஷ்டம் என்ற சொல்வதும் எழுதுவதும் ஏன் ?

  இருபத்தி ஆறு எழுத்துக்கள் மட்டுமே உள்ள
  ஆங்கிலத்தில் வேறு எழுத்துக்கள் சேர்ப்பதில்லை !

  இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்கள்
  இருக்கின்றன இனிமையான தமிழில் !

  இன்னும் எதற்கு சமற்கிருத எழுத்துக்கள்
  இனி அவற்றை தவிர்த்து எழுதுவோம் !

  உணவில் கலப்படம் உடலுக்கும்
  உயிருக்கும் கேடு தரும் கவனம் !

  உன்னத மொழியான தமிழில் கலப்படம்
  ஒப்பற்ற மொழிக்குக் கேடு தரும் !

  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://tamil.pratilipi.com/kavignar-eraravi

  https://www.facebook.com/rravi.ravi

  http://www.kavimalar.com

  http://www.eraeravi.blogspot.in/
  .
  http://www.tamilthottam.in/f16-forum

  http://eluthu.com/user/index.php?user=eraeravi

  http://www.eegarai.net/sta/eraeravi

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க
  கண் தானம் !

 36. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
  கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன்
  அவர்கள் தந்த தலைப்பு !
  .
  இது என்ன தமிழ் மொழியா ?
  எவன் மொழிக்கோ அடிமைதானா ? கவிஞர் இரா .இரவி !

  முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
  முதல் முதலாக உருவான மொழி தமிழ் !

  உலகின் முதல் மொழி தமிழ்
  உலகம் முழுவதும் பேசும் மொழி தமிழ் !

  மொழிகளின் மூல மொழி தமிழ்
  மொழிகளில் சிறந்த மொழி தமிழ் !

  இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்
  இலக்கணங்களின் சுரங்கம் தமிழ் !

  மூத்த குடிகள் பேசிய மொழி தமிழ்
  முன்னோர்கள் முழங்கிய மொழி தமிழ் !

  மூவேந்தர்கள் கட்டிக் காத்த மொழி தமிழ்
  முத்தமிழின் பெட்டக மொழி தமிழ் !

  எண்ணிலடங்காச் சொற்களின் மொழி தமிழ்
  ஏட்டில் தொடங்கி கணினியில் சிறந்த தமிழ் !

  எழுத்தாணிக் காலம் தொட்டுத் தொடரும் தமிழ்
  எந்த மொழிகளுக்கும் இல்லாத சிறப்புப் பெற்ற தமிழ் !

  பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்த மொழி தமிழ்
  பண்டைத் தமிழர்கள் பேசிய மொழி தமிழ் !

  காந்தியடிகள் விரும்பிய ஒப்பற்ற மொழி தமிழ்
  காவியங்கள் நிறைந்து செழித்த மொழி தமிழ் !

  வல்லினம் மெல்லினம் இடையினம்
  வலமாக நிறைந்திட்ட மொழி தமிழ் !

  செம்மொழி தகுதி நிரம்பிய மொழி தமிழ்
  செந்தமிழரின் வாழ்வின் அங்கம் தமிழ் !

  எல்லோரும் போற்றிடும் மொழி தமிழ்
  ஈடு இணையற்ற தன்னிகரில்லாத் தமிழ் !

  பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது பிழை !
  பைந்தமிழில் கலப்படம் செய்வது பிழை !

  ஊடகத்தில் இன்று பேசும் மொழி
  ஒப்பற்ற தமிழ் மொழியா சிந்திப்பீர் !

 37. என்றும் வாழ்வான் பாரதி ! கவிஞர் இரா .இரவி !

  வான்புகழ் வள்ளுவருக்கு அடுத்து
  வந்த கவிஞர்களில் வான்புகழ் பெற்றவன் !

  கவியரசர் என்பதனால் அவன் சந்தித்த
  புவியரசனிடமும் நூல்களையேப் பெற்றவன் !

  சிட்டுக்குருவிகளை உள்ளபடியே நேசித்தவன்
  விட்டு விடுதலையாகிக் கவிகள் வடித்தவன் !

  எட்டயபுரம் என்ற ஊரில் பிறந்து அவன்
  எட்டாத உயரம் பாடலால் தொட்டவன் !

  முறுக்கு மீசைக்காரன் மட்டுமல்ல அவன்
  முண்டாசுக் கட்டிய முத்தமிழ் வேந்தன் !

  எளிய தமிழில் இனிய கவி யாத்தவன்
  எல்லோருக்கும் புரியும்படி எழுதியவன் !

  முப்பத்தியொன்பது ஆண்டுகள்தான் அவன்
  மூச்சு இருந்தது இன்று வரை பேச்சு உள்ளது !

  கனகசுப்பு ரத்தினத்தின் குருவாகியவன்
  கவி பாரதி தாசனை உருவாக்கியவன் !

  பன்மொழிகள் அறிந்திருந்த காரணத்தால் அவன்
  பைந்தமிழன் சிறப்பை செழிப்பை உணர்த்தியவன் !

  பாரதி பாடிய பாடல்கள் யாவும் என்றும்
  பா ரதியாக அழகிய பாடல்கள் ஆனது !

  திருவல்லிக் கேணியில் வாழ்ந்து சிறந்தவன்
  செந்தமிழ்க் கேணியாக இருந்து வென்றவன் !

  விடுதலை உணர்வை பாட்டால் விதைத்தவன்
  விடுதலை அடைந்துவிட்டதாகப் பாடியவன் !

  பெண் விடுதலைக்கு பாடல்கள் செய்தவன்
  பெண்இன உயர்வுக்கு ஏணியானவன் !

  அச்சமில்லை என்று பாடிய வீரமகன்
  அன்பாய் குழந்தைப் பாட்டும் பாடியவன் !

  நூற்றாண்டு கடந்தும் இன்றும் வாழ்பவன்
  நூற்றாண்டு பல ஆனாலும் என்றும் வாழ்வான் !

 38. எழுந்து நிற்க எழுது!
  கவிஞர் இரா. இரவி.

  *****
  தூங்கிக் கிடக்கும் தமிழ்ச் சமுதாயம் உடன்
  எழுந்து நிற்க எழுது! விழித்தெழ எழுது!

  கும்பகர்ணன் தூக்கம் தூங்கியது போதும்
  குமுகாயம் சிறக்க எழுந்து நில்!

  “தூங்காதே தம்பி தூங்காதே” என்று
  திரைப்படத்தில் பட்டுக்கோட்டை எழுதினார்!

  விழித்தெழு! விழித்தெழு! என்று பலரும்
  வெள்ளித்திரையில் பாடல் பாடினார்கள்!

  தமிழனின் தூக்கம் களைய வில்லை
  தட்டி எழுப்புவோம் எழுத்தால் தட்டி எழுப்புவோம் !

  உலகின் முதல்மொழி தமிழ் என்பதை
  உணரவில்லை நம் தமிழர்!

  உலகின் முதல்மனிதன் தமிழன் என்பதை
  உணரவில்லை நம் தமிழர்!

  அம்மா அப்பா என்று நல்ல
  அழகிய தமிழ்ச் சொற்கள் இருக்கையில்!

  ஆங்கிலத்தில் மம்மி டாடி என்கிறான்
  ஆங்கில வழியில் கல்வி பயில்கின்றான்!

  ‘மம்மி’ என்றால் செத்தபிணமென்று பொருள்
  மம்மியின் பொருள் அறியாது விரும்புகின்றான்!

  உலகம் முழுவதும் தமிழன் வாழ்கின்றான்
  உள்ளூரில் தமிழ் வாழ்கின்றதா? இல்லை!

  பேருந்து நிலையத்தை ‘பஸ் ஸ்டாண்டு’ என்கிறான்
  தொடர்வண்டி நிலையத்தை ‘ரயில்வே ஸ்டேசன்’ என்கிறான்!

  இப்படியே தமிங்கிலம் பேசிப் பேசி
  இனிய தமிழ்மொழியைக் கொல்கிறான்

  தொலைக்காட்சியில் தமிழ்க்கொலை என்பது
  தொடர்கதையாகத் தொடர்ந்து வருகின்றது!

  பேசுகின்ற பேச்சில் ஆங்கிலத்தைக் கலந்து
  பைந்தமிழ் மொழியைச் சிதைத்து வருகின்றான்!

  பத்துச் சொற்கள் பேசினால் அதில்
  பாதிக்கு மேல் ஆங்கிலச் சொற்கள்!

  தாய்மொழி குசராத்தியை காந்தியடிகள் நேசித்தார்
  தனது வரலாற்றை குசராத்தி மொழியில் எழுதினார்!

  டால்சுடாயின் வழி திருக்குறளை நேசித்தார்
  டால்சுடாயின் வழி தமிழை வாசித்தார்!

  அடுத்த பிறவி இருந்தால் திருக்குறள் பயில
  அற்புத தமிழனாகப் பிறக்க விரும்பினார்!

  நோபல் நாயகர் ரவீந்திரநாத் தாகூர்
  நாளும் விரும்பியது அவரது தாய்மொழி வங்க மொழி!

  மாமனிதர் அப்துல்கலாம் பயின்றது தமிழ்வழி
  மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து மனதில் நின்றார்!

  விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் அனைவரும்
  விரும்பிப் பயின்றது தாய்மொழி தமிழ்மொழி!

  ஆரம்பக்கல்வி அழகுதமிழில் இருந்தால்
  அறிவாளியாக குழந்தைகள் வளரும்!

  என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
  ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்!

  இல்லாதவன் பிச்சை எடுத்தால் தவறில்லை
  எல்லாம் இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும்!

  சொற்களின் களஞ்சியம் நம் தமிழ்மொழி
  சொற்களின் சுரங்கம் நம் தமிழ்மொழி!

  காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
  கற்கண்டு கவிதைகள் உள்ள மொழி!

  உலகப்பொதுமறையை உலகிற்கு தந்த மொழி
  உலகம் போற்றிடும் உன்னத தமிழ்மொழி!

  ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பு முதல்மொழி தமிழ்
  அறியவில்லை புரியவில்லை நம் தமிழர்களுக்கு!

  தமிழின் பெருமையை தமிழர்கள் அறியவில்லை
  தரணியில் மற்றவர் நன்கு அறிந்துள்ளனர்!

  தமிழைப் பிரிக்கும் சாதியும் மதமும் வேண்டாம்
  தமிழரை இணைக்கும் தமிழ்மொழி வேண்டும்!

  உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை
  உலகத் தமிழர் யாவரும் தமிழால் ஒன்றுபடுவோம்!

  தமிழருக்கு ஓர் இன்னல் என்றால் உடனே
  தட்டிக் கேட்போம்! தோள் கொடுப்போம்!

  ஒருநூறு ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் ஒன்று
  ஓர் எச்சரிக்கை செய்துள்ளனர் ஆய்வாளர்கள்!

  உலகின் முதல்மொழி தமிழைத் தமிழர்கள்
  ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!

  தமிங்கிலப் பேச்சுக்கு முடிவு கட்டுவோம்
  தமிழர்களோடு தமிழிலேயே உரையாடி மகிழ்வோம்!

  குழந்தைகளுக்கு முதலில் தமிழ் கற்பிப்போம்
  குழந்தைகள் வளர்ந்தபின்னே ஆங்கிலம் பயிலட்டும்!

  ஏமாந்த காலம் முற்றுப் பெறட்டும்
  ஏமாற்றமின்றி விழிப்புணர்வு பெற்றிடுவோம்!

  மற்றவரின் ஒற்றுமையைக் கண்டு பாடம் கற்று
  மண்ணில்உள்ள தமிழர்கள் ஒன்றிணைவோம்!

  ஒரு கை தட்டினால் ஓசை வராது
  ஒன்றுபடாமல் கத்தினால் யாருக்கும் கேட்காது!

  தமிழ்மொழி காக்க ஒன்றுபடுவோம்!
  தமிழஇனம் காக்க ஒன்றுபடுவோம்!

  கொட்டக் கொட்டக் குனிபவன் அல்ல தமிழன்
  கொட்டிய கரத்தை முறிப்பவன் தமிழன்!

  எழுத்திலும் வடமொழி நஞ்சு கலந்து வருகின்றனர்
  எழுத்துக் கலப்பிற்கும் முடிவு கட்டுவோம்!

  தமிழைத் தமிழாக தமிழர்கள் எழுதிடுவோம்
  தமிழைத் தமிழாக தமிழர்கள் பேசிடுவோம்!

  உணவில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும்
  மொழியில் கலப்படம் மொழிக்குக் கேடு தரும்!

  முடிந்தமட்டும் நல்ல தமிழ் பேசுவோம்
  முடிந்தமட்டும் நல்ல தமிழ் எழுதுவோம்

  தமிழராகப் பிறந்ததற்காக பெருமை கொள்வோம்
  தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்!

  ‘தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!’
  தரணிக்கு நாமக்கல் கவிஞர் வரிகளை பறைசாற்றிடுவோம்!

  உலகஅளவில் பல சாதனைகள் நிகழ்த்தியவர்கள் தமிழர்கள்
  உணர்ந்து தமிழ்வழி பயின்றதால் சாதித்துக் காட்டினார்கள்!

  ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உரைப்பது தமிழ்மொழி
  உயிருக்காக இரங்கிட இரக்கம் காட்டுவது தமிழ்மொழி!

  மனிதநேயத்தை மனதிற்கு கற்பிப்பது தமிழ்மொழி
  மட்டற்ற இலக்கியத்தை தன்னில் கொண்ட்து தமிழ்மொழி

  அகமும் புறமும் அழகாய் விளக்குவது தமிழ்மொழி
  அய்ந்திணை இலக்கியங்கள் கொண்டது தமிழ்மொழி!

  அறம் செய்ய விரும்பு என்று சொல்வது தமிழ்மொழி
  அனைவரையும் நேசிக்க வைப்பது தமிழ்மொழி!

  வீரத்தை போர்விதிகளை விளக்குவது தமிழ்மொழி
  விவேகத்தை தன்னம்பிக்கையை விதைப்பது தமிழ்மொழி!

  எல்லா மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
  எல்லா மொழிகளின் மூலமொழி தமிழ்மொழி!

  ஆங்கிலத்திலும் பல சொற்கள் உள்ள மொழி தமிழ்மொழி
  ஆங்கிலேயரும் விரும்பிப் படித்த மொழி தமிழ்மொழி!

  மதம் பரப்ப வந்தவரும் தமிழ் பரப்பிய வரலாறு உண்டு
  மதம் கடந்து மனிதம் கற்பிக்கும் மொழி தமிழ்மொழி!

  உலகத்தமிழ் மாநாடுகள் கண்ட மொழி தமிழ்மொழி
  உலகமெங்கும் ஒலிக்கும் உன்னத மொழி தமிழ்மொழி!

  எண்ணிலடங்காத சிறப்புப் பெற்ற மொழி தமிழ்மொழி
  எண்ணத்தை தூய்மைப்படுத்திடும் மொழி தமிழ்மொழி!

  கலை பண்பாடு கற்பிக்கும் மொழி தமிழ்மொழி
  கனியை விட சிறந்த இனிமை மொழி தமிழ்மொழி!

  தமிழ்சொற்கள் இல்லாத பிறமொழிகள் இல்லை
  தரணியில் உள்ள மொழிகளில் வள்ளல் தமிழ்மொழி!

  படைப்பாளிகள் அனைவருக்கும் வேண்டுகோள்
  படைப்பில் விழிப்புணர்வு விதைத்திடுங்கள்!

  ஆண்டாண்டு காலமாக தூங்கியது போதும்
  அனைவரும் உடனே விழித்து எழுவோம்!

  ஏமாளி அல்ல தமிழன் என்று மெய்ப்பிப்போம்
  எப்பாடுபட்டாவது நம் தமிழ்மொழி காத்திடுவோம்!

  அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
  அளவிற்கு மிஞ்சிய தூக்கமும் கேடாகும்

  தமிழா! தமிழா! தூங்கி வழிந்தது போதும்
  தமிழா! தமிழா! எழுந்து நில் எழுச்சி கொள்!

  எழுந்து நிற்போம் எழுச்சி கொள்வோம்
  எல்லோரும் ஒன்றிணைவோம் இன்பத்தமிழைக் காத்திடுவோம்!

 39. பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !

  மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
  கவிஞர் இரா .இரவி !

  உலகம் தோன்றியபோதே தோன்றிய
  உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !

  உலகின் முதல் மனிதன் பேசிய
  ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !

  பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
  பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !

  மண் தோன்றும் முன்பே இந்த
  மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !

  திருக்குறள் என்ற இணையற்ற நூலை
  தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !

  காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
  கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !

  தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
  தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !

  ஆய்வாளர்கள் அனைவரும் அறிவித்த மெய்
  அனைத்து மொழிகளின் தாய் தமிழ் மொழி !

  காந்தியடிகளைக் கவர்ந்த மொழி தமிழ்
  கடல் கடந்த புலம் பெயர்ந்தோர் பேசும் மொழி !

  தமிழ்மொழி ஒலிக்காத நாடே இல்லை
  தமிழ்மொழி ஒலிக்காத நாடு நாடே இல்லை !

  பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும்
  பைந்தமிழ் இளமையாக புதுமையாக உள்ளது !

  எந்த மொழியும் நம் தமிழ்மொழிக்கு
  ஈடு இணை இல்லை என்பது உண்மை !

  உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம்
  ஒப்பற்ற தமிழுக்கு மகுடம் சூட்டுவோம் !

  சங்கத்தமிழ் இன்றும் என்றும் நன்றே வாழும்
  மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !

 40. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்
  கவிமாமணி சி. வீரபாண்டியத்தென்னவன் தந்த தலைப்பு!

  “தமிழ்நாடு ஐம்பது தான் தமிழ்மொழிக்கு ? ”

  கவிஞர் இரா. இரவி

  எல்லா மொழிக்கும் வரலாறு சிலநூறு ஆண்டுகள்
  எம் தமிழ்மொழிக்கு வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள்!

  எப்போது பிறந்தது என்பது யாருக்கும் தெரியாது
  எப்போதோ பிறந்தது இன்றும் நிலைத்து உள்ளது!

  உலகம் தோன்றிய போதே தோன்றிய மொழி
  உலகம் முழுவதும் பேசப்படும் ஒப்பற்ற மொழி!

  முதல் மனிதன் மொழிந்திட்ட முதல் மொழி
  மூத்த மொழி என்பதை அறிஞர்கள் ஏற்ற மொழி!

  உலகப்பொதுமறை உலகிற்கு வழங்கிய மொழி
  உலகின் பன்னாடுகளின் ஆட்சிமொழி நம் மொழி!

  மண் தோன்றும் காலம் முன்பே தோன்றிய மொழி
  மண்ணில் சிறந்து விளங்கிடும் சீரான மொழி!

  காப்பியங்கள் காவியங்கள் நிறைந்த மொழி
  கவிதைகள் கட்டுரைகள் நிறைந்த மொழி!

  பக்தி இலக்கியத்திற்கு பஞ்சமில்லாத மொழி
  பகுத்தறிவு இலக்கியமும் பெற்றுள்ள மொழி!

  பார் போற்றும் பரவசம் தந்திடும் மொழி
  பண்பாட்டைப் பறைசாற்றிடும் பைந்தமிழ் மொழி !

  இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தின் மொழி
  இலக்கியங்கள் எண்ணிலடங்காதவை கொண்ட மொழி!

  இயல், இசை, நாடகமென முத்தமிழ் உள்ள மொழி!
  இனிமையில் தேனையும் மிஞ்சிய உயர்மொழி!

  உயர்தனிச் செம்மொழி என்ற சிறப்பு மிக்க மொழி
  உண்மையில் காலத்தால் அழியாத அதிசய மொழி!

  சங்கம் வைத்து வளர்த்திட்ட பெருமைமிக்க மொழி
  சரிசமமாக உலகில் எந்தமொழியும் இல்லவே இல்லை!

  மொழி ஆய்வாளர்கள் அறிவித்த முதல்மொழி
  மொழிகளுக்கு எல்லாம் தாயான தாய்மொழி!

  தமிழ்ச்சொற்கள் இல்லாத பிறமொழி இல்லை உலகில்
  தமிழே சொற்களின் களஞ்சியம் பெட்டகம் !

  வரலாற்று சிறப்புமிக்க வளமை மிக்க மொழி
  வாழ்த்துவோம் வாழ்த்துவோம் தமிழ் வாழ்க என்றே!

 41. தமிழ்நாடு அதை நாடு!
  கவிஞர் இரா. இரவி
  இந்தியாவிலேயே அரசுக்கு வருவாய் தருவதில் முதலிடம்!
  இந்தியர்கள் மனதினில் தமிழ்கம் பெறுகின்றது முதலிடம்!
  கலைஅம்சம் மிக்க கோவில்கள் நிறைந்த தமிழகம்
  கண்கவர் சிலைகள் எங்கும் நிறைந்த தமிழகம்!
  வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடக்கும் தமிழகம்!
  வந்தாரை எல்லாம் வளமாக வாழ்விக்கும் தமிழகம்!
  உலகப்புகழ் சல்லிக்கட்டு நடக்கும் நல்ல தமிழகம்
  உலகம் முழுவதிலிருந்தும் பயணிகள் வரும் தமிழகம்!
  கைத்தறி ஆடைகளில் முத்திரை பதிக்கும் தமிழகம்
  கைவினைப் பொருட்களில் சாதனை படைக்கும் தமிழகம்!
  உழவுத்தொழிலை உயிரென மதித்து நடக்கும் தமிழகம்
  உழவுக்கும் உழவுமாட்டிற்கும் திருவிழா நடத்தும் தமிழகம்!
  உலகின் முதல்மொழி தமிழ்மொழி ஒலிக்கும் தமிழகம்
  உலகின் முதல்மனிதன் பிறந்து சிறந்த தமிழகம்!
  ஊட்டி கொடைக்கானல் குளிர் நல்கும் தமிழகம்
  ஒப்பற்ற அருவிகள் குற்றாலம் உள்ள தமிழகம்!
  பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் உள்ள தமிழகம்
  பண்பாட்டை உலகிற்கே கற்பித்து வரும் தமிழகம்!
  காகித உற்பத்தியில் சாதித்து வரும் தமிழகம்
  கப்பல் போக்குவர்த்தும் சிறப்பாக நடக்கும் தமிழகம்!
  பாரம்பரிய உணவுகளை இன்றும் படைக்கும் தமிழகம்
  பார்த்தால் பசி தீரும் இயற்கைகள் உள்ள தமிழகம்!
  கரகம் காவடி என கிராமியக் கலைகள் செழித்த தமிழகம்
  கர்னாடக இசை மட்டுமன்றி தமிழிசையிலும் சிறந்த தமிழகம்!
  பாரத நாட்டியத்திற்கு பாரதத்தின் முன்னோடி நம் தமிழகம்
  பரதக்கலை மிக்க சிலைகளின் சிறப்பிடம் தமிழகம்!
  விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் நிகழ்த்திடும் தமிழகம்
  விதியை நம்பாமல் முயற்சியை நம்பிடும் தமிழகம்!
  தரணி முழுவதும் தேடினாலும் ஈடில்லாத தமிழகம்
  தரணிக்கே முன்மாதிரியாக விளங்கிடும் தமிழகம்!

 42. தமிழகத்தில் தமிழ் முழக்கம் தமிழாய் இல்லை!

  கவிஞர் இரா. இரவி !

  தமிழைத் தமிழாகப் பேசுக என்று உணர்த்த வேண்டியுள்ளது
  தமிங்கிலம் தமிழகம் முழுவதும் தலைவிரித்து ஆடுகின்றது!

  கலப்படம் குற்றமென்று சட்டம் உள்ளது
  கலப்படம் மொழியில் செய்வதும் குற்றமாக்குவோம்!

  நல்ல தமிழில் பேசுக நாளும் சொல்கிறோம்
  நம் தமிழர்கள் காதில் வாங்குவதே இல்லை!

  காய் விற்கும் கிழவி வாயிலும் தமிங்கிலம்
  கற்ற பேராசிரியர் வாயிலும் தமிங்கிலம்!

  இந்நிலை இப்படியே தொடர விட்டால்
  என்னாகும் தமிழ்மொழி சற்றே சிந்தித்து பாருங்கள்!

  பிறமொழிக் கலப்பை தவிர்த்திட வேண்டுகிறோம்!
  பச்சைத் தமிழ் மொழியைக் காத்திட வேண்டுகிறோம்!

  மம்மி டாடி வேண்டாமென்றால் கேட்பதே இல்லை
  மம்மி என்பது செத்தபிணம் என்ற பொருள் புரியவில்லை!

  வெள்ளைக்காரன் ஆங்கிலத்தில் தமிழ் கலப்பானா?
  வஞ்சியர் ஆங்கிலத்தில் தமிழ் கலந்து பேசுகின்றனர்!

  தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது நாளும்
  தமிழ்க்கொலை தங்குதடையின்றி நடத்துகின்றனர்!

  ஊடகங்களுக்கு கண்டனத்தை உடன் பதிந்திடுவோம்
  உணர்வோடு தமிழ்மொழி காக்க திரண்டிடுவோம்!

  உலகின் முதன்மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்
  உருக்குலைய விடலாமா ஒப்பற்ற தமிழ்மொழியை!

  முடிந்தளவிற்கு நல்ல தமிழில் பேசிடுவோம்
  முத்தமிழின் பெருமைகளைக் கட்டிக் காத்திடுவோம்!

  இலங்கைத் தமிழர்கள் இனிமையாகப் பேசுகின்றனர்
  எல்லோரும் இனி நல்லதமிழில் பேசிடுவோம்!

 43. மகாகவி பாரதியார்!

  கவிஞர் இரா. இரவி

  வாழும் போது உன்னை கண்டுகொள்ளவில்லை
  வையகம் இன்று போற்றுது உன்னை!

  கவிதை கதை கட்டுரை அனைத்தும் எழுதி
  கன்னித்தமிழுக்கு வளம் சேர்த்தவன் நீ!

  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள
  சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவன் நீ!

  உன்னால் பெருமைகள் பெற்றது சேதுபதி பள்ளி
  உள்ளே சென்றால் வரவேற்பது உன் சிலையே!

  உலகப் பொதுமறை வழங்கிய திருவள்ளுவருக்குப் பிறகு
  உலகப்புகழ் அடைந்திட்ட ஒப்பற்ற கவிஞன் நீ!

  எழுத்து பேச்சு செயல் வேறுபாடு இன்றி
  எப்போதும் நேர்மையாக வாழ்ந்தவன் நீ!

  மன்னரைச் சந்தித்து திரும்பிய போதும்
  மடிநிறைய நூல்களையே வாங்கி வந்தவன் நீ!

  உழைக்கும் கழுதையைத் தோளில் சுமந்து வந்து
  உழைப்பின் மேன்மையை உணர்த்தியவன் நீ!

  சாதிகள் இல்லையென்று உரக்கப் பாடியதோடு
  சகோதரனாக்கி பூணூல் அணிவித்து மகிழ்ந்தவன் நீ!

  விடுதலை வேட்கையை பாடலால் விதைத்து
  வீர முழக்கமிட்டு துணிவைக் கற்பித்தவன் நீ!

  பெண்விடுதலைக்கு வித்திட்டு கவிதைகள் வடித்து
  புரட்சிப்பெண்கள் உருவாகிடக் காரணமானவன் நீ!

  மண் விடுதலை பெண் விடுதலை இரண்டையும்
  மக்களுக்குப் புரியும் வண்ணம் பாடியவன் நீ!

  காந்தியடிகளைக் கூட்டத்திற்கு அழைத்தாய் மறுத்ததும்
  கடந்து சென்றாய் உன்னைக் காப்பாற்றிட வேண்டினார்!

  காந்தியடிகள் சொன்னபடி உன்னைக் காப்பாற்றி இருந்தால்
  காவியங்கள் பல வடித்து இன்னும் தந்திருப்பாய் நீ!

  உடலால் வாழ்ந்த காலம் முப்பத்தி ஒன்பது
  பாடலால் வாழும் காலம் ஒரு யுகம் என்பது உண்மை!

 44. மாமதுரைக் கவிஞர் பேரவையின்தலைவர்
  கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

  தமிழைக் காக்கத் தகுந்த வழிகள் ! கவிஞர் இரா .இரவி !

  மொகஞ்சதாரோ அரப்பா நாகரிகத்திற்கும்
  முந்தைய நாகரிகம் தமிழன் நாகரிகம் !

  உலகின் எந்த மூலையில் தேடினாலும்
  உடன் தென்படுவது தமிழ் எழுத்துக்களே !

  மனிதன் தோன்றியபோது தோன்றிய மொழி
  முதல் மனிதன் உச்சரித்த மொழி தமிழ் !

  ஒப்பற்ற தமிழ் மொழியை உருக்குலைய விடலாமா ?
  உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி சிதையலாமா !

  சில நுறு ஆண்டுகள் வரலாறு உள்ள மொழிகள்
  சதிராட்டம் போட்டு குதியாட்டம் போடுகின்றன !

  பல்லாயிரமாண்டு வரலாறு உள்ள தமிழ் மொழியை
  பாதுகாக்க வேண்டியது உலகத்தமிழரின் கடமை !

  இலக்கண இலக்கியங்களின் இமயம் தமிழ் மொழி
  இனிக்கும் கேட்க கேட்க இனிக்கும் நம் தமிழ் !

  தமிழர்களே தமிழர்களோடு தமிழில் மட்டும் பேசுங்கள்
  தமிழர்களே ஆங்கில மோகத்தை அறவே அழியுங்கள் !

  தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதுங்கள்
  தமிழை தமிழாக மட்டும் பேசிப் பழகுங்கள் !

  சிங்கப்பூரில் ஆட்சிமொழியாயாக சிங்காரத் தமிழ்
  சிங்களத்தோடு தமிழும் ஆட்சிமொழி இலங்கையில் !

  பன்னாட்டு மொழி என்ற தகுதி உள்ள தேசிய மொழி
  பண்பாட்டை பலருக்கும் பயிற்றுவிக்கும் மொழி !

  உலகம் உருவானபோது உருவான மொழி
  உலகம் உள்ளவரை காப்பது நமது கடமை !

  தமிழ் படித்ததால் தரணியில் சிறந்தோர் பலர்
  தமிழைக் கற்போம் குழந்தைகளுக்கும் கற்பிப்போம் !

  முதல்மொழிக்கு முதலிடம் கொடுப்போம் உள்ளத்தில்
  மற்ற மொழிக்கு இரண்டாமிடம் கொடுப்போம் மனதில் !

  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நடைமுறைப் படுத்துவோம்
  எவர் தமிழை எதிர்த்தாலும் பாடம் புகட்டிடுவோம் !

 45. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்

  கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு !

  வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது!

  மொழிந்தது ஏன் ? ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு !

  கவிஞர் இரா. இரவி !

  உலகின் முதல் மொழியை அழிய விடலாமா?
  உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து காக்க வரலாமே!

  அய் நா மன்றம் ஆய்வறிக்கையில் பொருள் உள்ளது
  அனைவரும் ஒருங்கிணைந்து தமிழ் காத்திட வேண்டும்!

  தமிங்கிலம் பரப்பிம் ஊடகங்களுக்கு பாடம் புகட்டுவோம்
  தமிழைத் தமிழாகப் பேசிட முயற்சி செய்திடுவோம்!

  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை அழிந்து
  எங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்றானது வேதனை!

  பாலில் நஞ்சு கலப்பது போலவே நாளும்
  பைந்தமிழில் பிறமொழி நஞ்சு கலப்பது முறையோ?

  பிறமொழி எழுத்துக்கள் வேண்டவே வேண்டாம்
  பிறமொழி சொற்களும் வேண்டவே வேண்டாம்!

  தமிழர் தமிழரோடு தமிழில் பேசுவதே சிறப்பு
  தமிழர் தமிழரோடு ஆங்கிலம் பேசுவது எதற்கு?

  மற்ற மொழியினர் தாய்மொழியில் பேசுகையில்
  மற்றற்ற தமிழர் பிறமொழியில் பேசுவது ஏனோ?

  தமிழ் என்பது மொழி மட்டுமல்ல நம் உயிர்
  தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் உணர்!

  மூத்தமொழி முதன்மொழி தமிழ்மொழி
  மூலைமுடுக்கு உலகெங்கும் ஒலிக்கும் மொழி!

  பன்னாட்டு மொழி என்ற பெருமை உண்டு
  பன்னாடுகளின் ஆட்சிமொழி நம் தமிழ்மொழி!

  தமிழின் சிறப்பை மற்றவர் அறிந்துள்ளனர்
  தமிழின் சிறப்பை மற்றவர்கள் அறியவில்லை!

  இந்த நிலை இப்படியே நீடித்தால் விரைவில்
  அய் நா மன்றம் சொன்னது நடந்து விடும்!

  எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது பழமொழி
  இனிய தமிழில் பலமொழி கலக்க தேயும் நம்மொழி!

  கொஞ்சம் கொஞ்சமாக பரவரும் தமிங்கிலம்
  கன்னித்தமிழை அழித்துவிடும் என்பதை அறிந்திடுக!

  நல்ல தமிழில் நாளும் பேசுவோம் எழுதுவோம்
  நாள்தோறும் நல்ல தமிழ்ப்பேச்சு நடைமுறையாகட்டும்!

 46. தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார் !

  சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு?

  கவிஞர் இரா. இரவி

  தமிழ்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க மறுப்பவர்களுக்கு
  தமிழகத்தில் இடமில்லை வெளியேறி விடுங்கள்!

  உலகமொழிகளின் தாய்மொழியின் வாழ்த்திற்கு
  உமக்கு நிற்க மனமில்லை என்றால் சென்று விடு!

  தியானம் செய்ததாக பொய்யுரைக்கும் நீயா சாமியார் ?
  தேசியகீதத்திற்கு மட்டும் தியானம் கலைத்து விட்டாய்!

  நமஸ்காரம் என்பதை விட்டொழியுங்கள் நாளும்
  நல்ல தமிழில் வணக்கம் என்று கூறி மகிழுங்கள்!

  விவாகம் என்ற சொல்லை விட்டுவிடுங்கள்
  வளமான தமிழில் திருமணம் என்று சொல்லுங்கள்!

  கிரகப்பிரவேசம் என்ற சொல்லே வேண்டாம் நமக்கு
  கன்னித்தமிழில் புதுமனை புகுவிழா என்று சொல்லுங்கள்!

  வடமொழி சொற்களும் வேண்டாம் எழுத்துக்களும் வேண்டாம்
  வண்டமிழ் மொழிக்கு எழுத்துகளும் சொற்களும் ஏராளம்!

  கிரந்த எழுத்துக்கள் தமிழ்மொழிக்கு வேண்டவே வேண்டாம்
  காந்த எழுத்துக்கள் தமிழ்மொழியில் நிறைய உண்டு!

  மணிப்பிரவாக நடையில் எதுவும் எழுதிட வேண்டாம்
  மணியான தமிழில் எதையும் எழுதிட வேண்டும்!

  உணவில் கலப்படம் குற்றம் தண்டனை உண்டு
  உன்னதத் தமிழ்மொழியில் கலப்படம் குற்றம் உணர்ந்திடு!

  தமிழ்ப்பாலில் பிறமொழி நஞ்சு கலப்பதை நிறுத்திடு
  தமிழைத் தமிழாகவே என்றும் எழுதிடு பேசிடு!

  பயிர் வளர்ந்திட களை எடுத்திட வேண்டும்
  பைந்தமிழ் வளர்ந்திட பிறசொல் நீக்கிட வேண்டும்!

  உலகின் முதன்மொழியை உருக்குலைய விடலாமா?
  உயர்தனிச் செம்மொழியை போற்றிட வேண்டும்!

  வேண்டாம் வேண்டாம் வடசொல் வேண்டாம்
  வேண்டாம் வேண்டாம் வடஎழுத்து வேண்டாம்!

 47. மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி
  சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு !

  தமிழ் சிதைந்தால்

  தமிழினமே சிதைந்து போகும்!

  கவிஞர் இரா. இரவி

  இனத்தை அழிக்க மொழியை அழிப்பார்கள்
  இனத்தைக் காக்க மொழியைக் காத்திடுங்கள்!

  தினந்தோறும் தமிழ்க்கொலை நடக்குது ஊடகத்தில்
  தமிழர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றோம்!

  பேசுகின்ற பேச்சில் தமிழ் இல்லை
  பேசுவது தமிங்கிலம் எங்கும் தமிங்கிலம்!

  கடவுளின் கருவறையில் தமிழ் ஒலிக்கவில்லை
  காணுகின்ற பலகைகளில் தமிழ் எழுதவில்லை!

  உயர்நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கவில்லை
  ஓங்கி ஒலிக்க வேண்டும் தமிழ் உயர்நீதிமன்றத்தில்!

  அத்தைக்கு மீசை வைத்தால் மாமா அன்று
  ஆங்கிலத்தைக் கொண்டாடினால் முதல்மொழி அன்று!

  வேண்டவே வேண்டாம் வடமொழி எழுத்துக்கள்
  வளமிக்க தமிழுக்கு பிறமொழி எழுத்துக்கள் தேவையில்லை !

  உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்மொழி
  உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி !

  ஆரம்பக்கல்வி தமிழிலேயே இருக்க வேண்டும்
  அப்போது தான் குழந்தைக்கு அறிவு வளரும்!

  தாய்மொழியின் முக்கியத்துவத்தை அன்றே நமது
  தேசத்தந்தை காந்தியடிகள் வலியுறுத்திச் சென்றார்!

  நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூரும்
  நன்று தாய்மொழிக்கல்வி என்றே உரைத்தார்!

  அறிவியல் மேதை அப்துல்கலாம் அவர்கள்
  ஆரம்பக்கல்வியை தமிழிலேயே பயின்றார்!

  கரும்பு தின்னக் கூலி தர வேண்டுமா?
  கன்னித் தமிழைப் படிக்க அறிவுறுத்த வேண்டுமா?

  குழந்தைகளின் பெயர்களில் தமிழ் இல்லை
  குழந்தைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டிட வேண்டுகிறோம்!

  தமிழா தமிழ் உன் மொழியல்ல அடையாளம்
  தமிழைக் காத்தால் தமிழினம் காக்கப்படும்!

 48. தைமகளே வருக ! தமிழ்ப் பொங்கல் தருக !

  கவிஞர் இரா .இரவி !

  தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சிப் பொங்கட்டும்
  தரணியெங்கும் தமிழர் புகழ் ஓங்கட்டும் !

  திக்கெட்டும் நல்ல தமிழ் நாடெங்கும் பரவட்டும்
  தித்திக்கும் தமிழின் சுவை உலகம் அறியட்டும் !

  உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில்
  ஒப்பற்ற தமிழ் இருக்கை உடன் உருவாகட்டும் !

  உலகத் தமிழர்கள் யாவரும் ஒன்றிணையட்டும்
  உலகம் யாவும் தமிழ் மொழி ஒலிக்கட்டும் !

  இன்னல் இல்லாத இன்ப வாழ்வு வசமாகட்டும்
  இனியவை வாழ்வில் என்றும் மலரட்டும் !

  மீனவர் வாழ்வில் வசந்தம் விரைந்து வரட்டும்
  மண்ணில் உழவர்கள் வாழ்வு சிறக்கட்டும் !

  உழைக்கும் மக்கள் வாழ்வு விடியட்டும்
  உணர்வு தமிழ் உணர்வு எங்கும் பெருகட்டும் !

  உலகில் எங்கு வாழ்ந்த போதும் தமிழர்களின்
  உள்ளத்தில் தமிழ்ப் பற்று நிலைக்கட்டும் !

  உலகின் முதல் மொழியான தமிழ் சிறக்க
  உலகத் தமிழர் யாவரும் உதவட்டும் !

  தமிழர்களின் குழந்தைகளுக்கு யாவரும்
  தமிழில் பெயர் சூட்டி மகிழட்டும் !

  தமிழர்களின் குழந்தைகளுக்கு யாவரும்
  தமிழ் கற்பிக்க முன்வரட்டும் !

  மழலைகளின் உதடுகள் தாய் மொழி
  மறக்காமல் நாளும் பேசட்டும் !

  தைமகளே வருக ! தமிழ்ப் பொங்கல் தருக !
  தமிழர்களின் வாழ்வில் இன்ப ஒளி தருக !

 49. நல்ல தமிழில் வாழ்கிறார் நன்னன்!

  கவிஞர் இரா. இரவி !

  வணக்கம் சொல்வதை விடச் சிறந்தது
  வாழ்த்துச் சொல்வது சிறப்பென்றவர்!

  நல்ல தமிழை எல்லோருக்கும் தினமும்
  நாடறிந்த தொலைக்காட்சி மூலம் கற்பித்தவர்!

  படித்தவர் முதல் பாமரர் வரை அனைவருக்கும்
  பைந்தமிழை போதித்திட்ட இனியவர்!

  திருஞானசம்பந்தன் என்பது இயற்பெயர்
  திக்கெட்டும் பரவியது நன்னன் என்ற புனைப்பெயர்!

  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும்
  அழகுசென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்!

  தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தொடங்கிய பயணம்
  தொன்மைமிக்க மாநிலக்கல்லூரி பேராசிரியராக உயர்ந்தார்!

  தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராகப் பணியாற்றி
  தமிழ் வளர்ச்சிக்கு உண்மையில் வித்திட்டவர்!

  எழுத்து அறிவித்த இறைவனாக விளங்கியவர்
  எண்ணத்தில் பகுத்தறிவுப் பகலவனைப் பின்பற்றியவர்!

  நூல்கள் பல எழுதிக் குவித்தார் முத்தாய்ப்பான
  நூலாக திருக்குறள் விளக்க உரை வடித்தார்!

  பெரியார் விருது திரு.வி.க. விருது தமிழ்ச்செம்மல் விருது
  பல விருதுகளைப் பெற்று விருதுகளுக்குப் பெருமை சேர்த்தார் !

  இவர்தான் பெரியார் என்று இரண்டு தொகுதிகள்
  இவரால் எழுதப்பட்டு பெரியாருக்குப் புகழ் சேர்த்தார்!

  செந்தமிழை செத்த மொழி ஆக்கி விடாதீர் என
  செந்தமிழுக்காக எழுத்திலும் பேச்சிலும் முத்திரை பதித்தார்!

  சிறுகுழந்தைக்கும் புரியும் வண்ணம் எளிமையாக
  செந்தமிழை உச்சரித்து தமிழை வளர்த்தவர் !

  கடைசிமூச்சு உள்ளவரை நாள்தோறும்
  கன்னித்தமிழை வளர்த்திட உதவி வந்தவர் !

  தமிழின் அருமை பெருமையை நாள்தோறும்
  தரணி எங்கும் பரப்பி புகழ் பெற்றவர் !

  ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு உண்மைதான்
  ஈடு செய்வோம் நல்ல தமிழில் நாளும் பேசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *