சச்சிதானந்தம்

அறுமுகநூறு

 

தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி,

உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி,

சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி,

அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் போற்றி!                                                                     11

 

அரும்பாத தாமரைப் புன்னகை போற்றி,

அரும்பாதம் பற்றியே போற்றுவோம் போற்றி,

தரும்பாதம் பற்றினால் வரம்தருவான் போற்றி,

விரும்பாத பேருக்கும் அருளுவான் போற்றி!                                                                 12

 

ஐந்தமு துணவின் சுவையே போற்றி,

நைந்தம னங்களுக் கருள்வாய் போற்றி!

வைந்தவ ரெல்லாம் வருவார் போற்றி,

பைந்தமிழ் மைந்தன் பெருமை போற்றி!                                                                         13

 

இசைக்கு மயங்கும் இறைவா போற்றி,

இமைக்க மறந்தேன் உன்னைப் போற்றி,

இணைந்து கொண்டேன் தலைவன் போற்றி,

இருண்ட இதயம் களைவோன் போற்றி!                                                                          14

 

வாரம் கடந்து, வருடம் கடந்து,

வாழ்வைக் கடந்து, வேட்கை கடந்து,

காமம் கடந்து, கவலை கடந்து,

கந்தன் அருளின் கருணை அடைவோம்!                                                             15

 

(தொடரும்)

படத்திற்கு நன்றி :

http://www.gildedserpent.com/art36/SashiResponse.htm

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அறுமுகநூறு (3)

  1. பார்வதி இராமச்சந்திரன்,

    தொடர்ந்து தங்களது மேலான கருத்துக்களை வெளியிட்டு ஊக்கப் படுத்துவதற்கு நன்றி!

  2. அழகனி்ன் அறுமுகநுாறு கண்டு அகமகிழ்ந்தேன் கவியே வாழிய மேலும் படைப்புகளை எதிர்பார்க்கிறேன் நன்றி

Leave a Reply to பார்வதி இராமச்சந்திரன்.

Your email address will not be published. Required fields are marked *