இலக்கியம்கவிதைகள்

ஆசான்

பி.தமிழ்முகில் நீலமேகம்

 

அன்னையும் பிதாவும்

கொடுத்த அறிவினை

சுடர் விட்டெரிய செய்யும்

தூண்டுகோல் !!!

 

கண்டிக்கும் வேளையில்

சற்று கரடு முரடு தான்

கற்றுத் தரும்

ஆசான்கள் எப்போதும் !!!

 

அவர்தம் உள்ளந்தனில்

மாணாக்கரின் நினைவுகள்

என்றென்றும் – நினைத்தாலே

இனிக்கும் கற்கண்டுகள் !!!

 

கற்ற கல்வியையும் -பெற்ற

அனுபவத்தையும் நாளும்

போதனை மூலம் உலகிற்கு

பரப்பிடும் ஒளி விளக்குகள் !!!

 

அன்றாடம் கற்பித்தலின் மூலம்

தானும் கற்றுக் கொண்டே

இருக்கும் வளர்ந்து விட்ட

பிள்ளைகள் -ஆசான்கள்!!

 

படத்திற்கு நன்றி :  http://teachingwithcontests.com/wp-content/uploads/2011/03/comp.jpg

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

  ஆசான் என்னும் சூரியனிடமிருந்து அறிவு என்னும் ஒளியைப் பெரும் வெண்ணிலவுகளே மாணவச் செல்வங்கள் என்பதைச் சொல்லும் அழகான கவிதை. வாழ்த்துக்கள் திருமதி. தமில்முகில் நீலமேகம் அவர்களே.

 2. Avatar

  தங்களது வாழ்த்துக்கட்கு மிக்க நன்றி சச்சிதானந்தம் அவர்களே !!!

 3. Avatar

  ஆசிரியத் தொழில் ஆம் சிறியத் தொழில் அல்ல !
  ஆசைவிரிய பணம்தேடும் பதவியும் அல்ல !!
  அன்னையாய் பின் தந்தையாய் பின் ஆசானாய்..
  முன் அனுபவத்தால் தெய்வமாய் கற்பித்த‌வைகள்
  பின்   வாழ்க்கையில் கற்றவைகள்   பெற்றவைகள்
  உன்னதமான உத்தமமான மேன்மை பொருந்தியது
  //*தானும் கற்றுக் கொண்டே வளர்ந்த மாணவர்கள்  -ஆசான்கள்!! *//
  ஆனால் இன்று பள்ளி-ஆசான்-மாணவர் உறவு 
  பேருந்தின் பயணச் சீட்டைப் போல  
  Recommendation Donations  Fees  Tutions  
  நாம் மாற்றபட்டு கொண்டிருக்கிறோம் ??

 4. Avatar

  // *ஆனால் இன்று பள்ளி-ஆசான்-மாணவர் உறவு
  பேருந்தின் பயணச் சீட்டைப் போல
  Recommendation Donations Fees Tutions
  நாம் மாற்றபட்டு கொண்டிருக்கிறோம் ??*

  ஆம் சகோதரி.இந்நிலை எங்கு போய் முடியுமென்றெண்ணும் போது சற்று கலக்கமாய்த்தான் உள்ளது.நாளை வரும் நாட்களில் கல்வி, பொருள் படைத்தோர் வீட்டுச் சொத்தானாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சகோதரி !!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க