அவர் இருந்த வரையிலும்
எப்பவும் வரவும் போகவுமா
இருப்பாங்க ஆளுக!
காலையில வந்து உக்காந்துட்டு
இட்லி தோசை வேணாம்
பசிக்குது சோறுதான் வேணும்பாங்க!
மத்தியான நேரத்துல வந்துட்டு
குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க!
கூட வந்தவனே சொல்வான்
காப்பி வேண்டாங்க அண்ணி
மோர் குடுங்கன்னு சொல்லுவான்!
ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!!
ராத்திரி நேரத்துல இரவையையோ
சேமியாவையோ கிளறிப் போட்டாக்க
இரசமும் பழையசோறும்
போடுங்கன்னு சொல்லிட்டு உக்காருவாங்க
இதுக எல்லாமே
அவர் இருந்த வரையிலுந்தான் தம்பி
இப்பெல்லாம் யாருமே வர்றதில்லை
எப்பவாச்சும் ஒருக்கா
புது ஆளுங்க வர்றாங்க
சாப்பாடெல்லாம் வேண்டாம்
கைச்செலவுக்குப் பணம் குடுங்க
அண்ணன் இருந்தா குடுப்பார்தானேன்னுவாங்க
அம்பது குடுத்தா நூறு குடுன்னுவாங்க
நூறு குடுத்தா இரநூறு குடுன்னுவாங்க
நானும் எடுத்தாந்து குடுப்பேன்
எல்லாம் தெரிஞ்சே குடுக்குறதுதாந் தம்பீ
அவிங்களாவது வந்திட்டுப் போறாங்கல்ல?!
நீங்க உங்கப்பாவைக் கவனிச்சிக்கோங்க தம்பீ!!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பிரசரெண்ட் ஊட்டு அக்கா!

  1. அன்பு  பழமைபேசி   மிகவும் நிதரிசனமாக இந்தக்கால வாழ்க்கையை எடுத்துக்காட்டியுள்ளீர்கள் . மனதைத்தொட்டது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *