எங்கே போகிறது காலம்-சுதந்திரதின நல் வாழ்த்துகள்

3

சத்தியமணி

 

சுதந்திரதின நல் வாழ்த்துகள்
வாழிய பாரதம்!வாழியத் தமிழ்!

எங்கே போகிறது காலம்

இங்கே யேன‌லங் கோலம்

மேலே எழுகிறது நாசம்

கீழே  விழுகிறது தேசம்….ஓ..()

 

குழிகள்பறித்து   முடமானார்

விழிகளிருந்தும் குருடானார்

செவிகளிருந்தும் செவிடானார்

அறிவுசெழித்திருந்தும் ஊமையானார் ஓ..()

 

கற்ற    கல்வி  தரும் பட்டம்

உற்ற  வேலை யின்றி கட்டம்

வரிகள் போக வருமானம்-அவ

மானம் இங்கு வெகுமானம் ……ஓ..()

 

மதங்கள்  பிரித்து பெறும் ஓட்டு

மதிக்கும் பெரியவர்கள்   கூட்டு

சாதி பெயரில் வாக்கு சீட்டு

மதச்சார்பின்மை என்றும் பாட்டு ……ஓ..()

 

நீதிநியாயம் வெறும் பேச்சு

பாதிதர்மம் எங்கு போச்சு

வாய்மைவெல்லுமெனும் சிங்கம்

என்று தீர்க்கும் இந்த அசிங்கம்……ஓ..()

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “எங்கே போகிறது காலம்-சுதந்திரதின நல் வாழ்த்துகள்

  1. அன்புள்ள ஐயா,
    உங்களின் அன்பு கருத்துகளில் தான் என் உடன்பாடு. விருப்பமும்கூட,
    ஒவ்வொருமுறையும் உற்சாக வார்த்தைகளையும் புத்துணர்வு சொற்களையும் உதிர்ப்பதில்தான்  அமையும் எம்கவிதை.  வாழிய பாரதம். வாழியத் தமிழ் என்று தான் ஆரம்பித்தேன். என்ன செய்ய? சலித்துவிட்டது மனது.
    எல்லோரும் செய்திதாட்களிலும் தொலைகாட்சிகளிலும் தான் சில நிகழ்ச்சிகளை காண்கிறார்கள். நானோ நேரில் தினமும்  காணும் கொடுமைகள் வக்கிரங்கள் பல. அவைகளின் விளைவுகள் இன்னும் வரும் ஆண்டுகளில்
    உணரப்போகுது பாரதம். பாரதம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது. தன் நிலம்  இழந்து கொண்டிருக்கிறது,
    ஆள்பவர்களுக்கும் தேசிய உணர்வு இல்லை.  தேசியப் பற்று  துளியும் இல்லை. பிறவல்லரசுகளுக்கு அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது. சரி. குடிமக்களுக்கு?  பொருளாதாரம், விலைவாசி, பாதுகாப்பு,சுகாதாரம்,நீதி,காவல்,தொழிற்வளர்ச்சி,கல்வி என்று எதில் எடுத்தாலும் சூனியம். முன்னேற்றம் என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆய்ந்து அறிந்தவர்கள்
    அறிவார்கள். ஒரு சில நேர்மை அதிகாரிகள், மனசாட்சி கொண்ட மந்திரிகள் அறிவார்கள். உண்மையைக்
    கிளறி கொட்ட கசப்பான வரிகள். என் கனம் குறைத்தது. குடிமக்களாய் நம் நிலமை முதற்பகுதி. இளையபாரதத்தின் எதிர்காலம் இரண்டில். ஈற்றில் தலைவர்களின்  தனித்துவம். பதவிக்காக வரப்போகும் தேர்தலுக்கு கீழ்தரமான 
    உத்திகளை கையாள முனைந்துவிட்ட வேளையில் தட்டி எச்சரிப்பே இது. இருந்தும் இதை விட என்ன செய்ய முடியும் ஒரு வளரும் கவிஞனால் ? பதிவு செய்து விட்டு நான் நாட்டுக்காக அழுது கொண்டிருக்கிறேன். 

  2. தங்களின் உணர்வுகளை ஒரு சக இந்தியனாக முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தங்களைப் போலவே பெரும்பாலான இந்தியக் குடிமக்கள் நாட்டுக்காக அழுதுகொண்டு தான் இருக்கிறார்கள். எதிர்மறைக் காட்சிகள் எங்கெங்கும் நிறைந்திருக்கும் பொழுதும், உள்ளத்தின் ஆழத்தில் ஏதோ ஒரு நம்பிக்கை ஒளி, காட்சிகள் மாறும் என்று உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அதிகார வர்கத்தின் மையத்தில் இருப்பவர்களின் தவறான அணுகுமுறையாலும், முறையற்ற ஆசைகளாலும் சில காலம் நாடு தவறான பாதையில் சென்றாலும், கால ஓட்டத்தின் மாற்றத்தில் அதிகார மையங்கள் மாறிக் கொண்டே இருக்கும் பொழுது, நேர்மறையான, பெரும்பாலான சாமானிய மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் வந்தே தீரும் என்று நாம் அனைவரும் ஆணித்தரமாக நம்புவோம். அதுவரை நாம் நமது கடமைகளை நம்பிக்கையுடன்
    தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம்.

    வாழிய பாரதம்!வாழிய தமிழ்!

  3. ஒரு விளக்குமாறின்(விளக்-குமாரின்) கதை

    ஒருவரை அடிக்க எழும்பிய விளக்குமாறு, அவரின் கையில் தஞ்சம்….இவர்களும் இ..    எய்திய மாய அம்பு……மக்களை ஏய்க்கும் ஏய்க்கும்  இந்திரஜித்தின் மாய அம்பு ….’எனது எங்கே போகிறது காலம்’ என்ற கவிதையில் எழுதிய டிசம்பர் க்ளைமாக்ஸ்…இன்னும் தொடரும்
     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *