சூரியா

எல்லையில் நமது வீரர்கள் சுட்டு கொல்லப்படுகிறார்கள்..! மீன் பிடிக்கப் போனவனை ஒரு நாட்டவன் பிடித்துச் செல்கிறான்..! இந்தியப் பொருளாதாரம் சரிகிறது..! நமது அரசிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை. இப்படியே போனால் என்னவாகும் என் தேசத்தின் நிலை.

சில மாதம் முன்பு நம் வீரர்கள் இருவரின் தலையை வெட்டிச் சென்றனர். அதற்கு கண்டனம் தெரிவித்தார் நமது பிரதம மந்திரி. இப்போது ஐவரை சுட்டுக் கொன்றுள்ளனர் இப்போதும் அதே கண்டனம். பாகிஸ்தானோ வருத்தம் தெரிவிக்கிறது. நமது வெளிவுறவுத் துறை அமைச்சரோ ஒரு படி மேலே போய் நம்மவர்களைச் சுட்டுக் கொன்றது பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதிகள் என்கிறார். எனக்கு ஒரு சந்தேகம் அவர் நமது நாட்டின் அமைச்சரா இல்லை பாகிஸ்தானுக்கா?.

இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு அரசு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அதை ஏற்க மறுத்த ஒரு குடும்பம் ,இது வேண்டாம் அவர்களுக்குப் பதிலடி கொடுங்கள் என்று சொல்கிறார்கள். சாமானியனுக்கு வரும் கோபம் ஏன் பதவியில் இருப்பவர்களுக்கு வரவில்லை.

எப்போதும் இராணுவத்திற்குத்தான் பட்ஜட்டில் அதிகப் பணம் ஒதுக்கப்படுகிறது எதற்கு அது. இத்தாலியில் ஹெலிஹாப்டர் வாங்குவதற்கு மட்டும் தான் அதைப் பயன் படுத்துவார்களோ என்னவோ?

அடுத்ததாக சிங்கள அமைச்சர் பொது மேடையில் நாங்கள் பிடித்து சென்ற மீனவர்களுக்கு எங்கள் நாட்டு சட்டதிட்டத்தின் படி தான் தண்டணை தருவோம் என்கிறார். கட்சத்தீவைத் தர முடியாது என்கிறார். எல்லாம் கேட்டு விட்டு அவரிடம் பேச்சு வார்த்தையும் நடத்துகிறார் மன்மோகன் சிங். உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படி கிடையாது கடலில் என்ன கோடு போட்டா எல்லை வகுக்க முடியும்? சீக்கியர்களின் தலைமுடிக்காக ஃபிரான்ஸ் சென்ற மன்மோகன் சிங் தமிழனின் உயிருக்காக ஒரு முறைகூட வாய்திறந்து பேசவில்லையே. இவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழ்நாட்டை தனி நாடாக பிரித்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா , ரஷ்யா அதிபரின் சந்திப்பை தவிர்த்தார் காரணம் அவர்களது தகவல்களைப் பகிரங்கப்படுத்திய ஸ்னோடனுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக. எல்லா விசயத்திலும் அமெரிக்காவைப் பின்பற்றும் காங்கிரஸ் அரசு ஏன் இதே போல் சிங்கள அமைச்சரைத் தவிர்க்கவில்லை?. அங்கே வெறும் தகவலுக்கே அப்படி நடந்து கொள்கிறார்கள் இங்கே உயிரே போகிறது கவனி்ப்பார் இல்லை.

கடைசியாக நம்ம பொருளாதாரம், ஏன் இந்த நிலை டாலரை சார்ந்திருக்க முக்கிய காரணம் திரவ தங்கமான பெட்ரோல் தான் , இது போக நாம் ஒவ்வொருவரும் இதற்கு காரணம் தான். காலை முதல் இரவு வரை நாம் பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை இந்திய தயாரிப்புகள் இருக்கும் என்று ஒரு கணக்கு போட்டுப் பாருங்கள். ஒன்றோ இரண்டோ தான் இருக்கும். (நான் இப்போது தட்டச்சு செய்யும் மடிக்கணிணி கூட இந்திய தயாரிப்பு கிடையாது) இப்படி நாம் பயன் படுத்துவதிலும், உண்பதிலும் (Lays,KFC..),குடிப்பதிலும் (Pepsi, Coca cola..etc) இந்தியன் அல்லாத யாரோ இலாபம் அடைகிறார்கள். இதற்கு எல்லாரும் தான் காரணம். எல்லாரும் மாற வேண்டும். உடனே எப்படி மாற்றம் நிகழும் என்று நீங்கள் கேட்கலாம், எல்லாரும் நினைத்தால் முடியும் இன்றிலிருந்து ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்வோம் முடிந்த வரை அன்னிய பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்போம் என்று.

முன்பு மாவோ சீனாவை மறு கட்டமைப்பு செய்தது போல் இப்போது இந்தியாவை மாற்றுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “எங்கே போகிறது என் தேசம்?

  1. இது போன்ற தெரிந்த உண்மைகளும் இன்னும் தெரியாத உண்மைகளையும்
    கண்டதால்/பார்த்ததால் வந்த குருதி வரிகளே https://www.vallamai.com/?p=37626 ,சூரியா

  2. நெத்தியடி.. சிந்திக்க வேண்டிய விடயம்…

  3. “சாமானியனுக்கு வரும் கோபம் ஏன் பதவியில் இருப்பவர்களுக்கு வரவில்லை.”

    “எப்போதும் இராணுவத்திற்குத்தான் பட்ஜட்டில் அதிகப் பணம் ஒதுக்கப்படுகிறது எதற்கு அது. இத்தாலியில் ஹெலிஹாப்டர் வாங்குவதற்கு மட்டும் தான் அதைப் பயன் படுத்துவார்களோ என்னவோ?”

    “சீக்கியர்களின் தலைமுடிக்காக ஃபிரான்ஸ் சென்ற மன்மோகன் சிங் தமிழனின் உயிருக்காக ஒரு முறைகூட வாய்திறந்து பேசவில்லையே.”

    “(நான் இப்போது தட்டச்சு செய்யும் மடிக்கணிணி கூட இந்திய தயாரிப்பு கிடையாது)”

    இந்த கேள்விகளுக்கு பாராளுமன்றமே பதில் சொல்ல முடியாதுங்க.

    ஒன்னு மட்டும் நிச்சயம் ஓட்டு போடும் போது விரலில் மை வாங்கும் நாம் முகத்திலும் கரி வாங்கி வந்துவிடுகிறேம். அதனால் தான் இவர்கள் இப்படி ஆடுகிறார்கள்.

  4. மகாபாரதம், பக-வத பர்வம்: “மக்கள் முதலில் தகுதியான அரசனை தேடிக்கொள்ள வேண்டும். அதன் பின் பின் செல்வம் சேர்த்து மனைவியை (பின் அவள் மூலம் மக்களை) அடைய வேண்டும். தகுந்த அரசனை அடைந்து, அதன் பின்னரே தனது சுற்றத்தையும் பித்ருக்களையும் ஒருவன் திருப்திப்படுத்த முடியும்”………

    +++++

    புவனேஷ்

Leave a Reply to புவனேஷ்வர்

Your email address will not be published. Required fields are marked *