இலக்கியம்கவிதைகள்

பிள்ளைக்காக…

செண்பக ஜெகதீசன்umbrella

அரைகுறை நம்பிக்கையுடன்

ஆர்ப்பாட்டமாய்

மழைக்காகக்

கூட்டுவழிபாடு செய்வோரைவிட,

நம்பிக்கையுடன்

குதூகலமாய்க்

குடை எடுத்துவந்தக்

குழந்தையை நேசிப்பவன்தான்

இறைவன்..

 

பெய்கிறது மழை

அந்தப்

பிள்ளைக்காக…!

படத்துக்கு நன்றி

http://www.thisnext.com/browse/pink/rain/ 

Print Friendly, PDF & Email
Share

Comments (7)

 1. Avatar

  குழந்தையைப் போல இரு!
  வைராக்கியம் கலந்த நம்பிக்கையோடு தொழு!

  நான்கு வரின்னாலும் நறுக்குன்னு சொல்லி இருகிறீங்க.

  நன்றியும் வாழ்த்துக்களும் கவிஞரே!

 2. Avatar

  அற்புதமான பகிர்வு!!. நம்பிக்கை.. அதானே எல்லாம்!!. பகிர்வுக்கு மிக்க நன்றி!.

 3. Avatar

  குழந்தைகளின் மேல் இருக்கும் பேரன்பினால் தான் இறைவனும் பாலமுருகன், பாலகிருஷ்ணன், குழந்தை இயேசு என்று குழந்தை வடிவில் இருப்பதையோ பெரிதும் விரும்புகிறானோ? நல்ல கவிதை. வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன் அவர்களே!

 4. Avatar

  மழைத்துளி போல ஜில்லென்று ஒட்டியது கவிதையும், கருவும், காட்சியும், அருமை.

 5. Avatar

  சொட்டு சொட்டாய் துளிகள்
  மெட்டு  விட‌மேக வரிகள்
  படித்து குனிந்து பார்க்கிறேன்
  ஓ…..ஒரே வெள்ளம்
  நம்பிக்கையும் ஒருபள்ளம்!
  பிள்ளையார் சுழி அருமை.

 6. Avatar

  ‘பிள்ளைக்காக..’ நல்ல கருத்துரைகள் வழங்கிச்
  சிறப்பித்த திருவாளர்கள,
  ஆலாசியம்,பார்வதி இராமச்சந்திரன், சச்சிதானந்தம், தனுசு
  ஆகியோருக்கு மிக்க நன்றி…!

 7. Avatar

  திரு. சத்தியமணி அவர்களின்
  கருத்துரைக் கவிதை அருமை..
  மிக்க நன்றி…!

Leave a Reply to Alasiam G Cancel reply