தனுசு

Gandhiji-wallpaper

தடி ஊன்றிய கிழவன்
எங்கள் பாரதத்துப் பெருங்கிழவன்
சுதந்திரப்
பயிர் செழிக்க
பாடுபட்ட ஒப்பற்ற உழவன்

சாந்தியம் என்பது
இவனது கொள்கை
உலகம்
காந்தியம் என சொல்லும்
இவனது வாக்கை

இவன்
வெடி தூக்கிய கூட்டத்தை
வடிகட்டிப் படியவைத்து
அஹிம்சையில் கான் தீ என்ற காந்தி.
அவன் பெயர் உச்சரித்தால்
கிடைக்குது சாந்தி.

அரை ஆடையும்
பொக்கை வாயும்
இவன் கவர்ச்சியின் சின்னம்
சைவம் தின்ற
சிங்கம் என்பது
இவனைப்பற்றிய உலகத்தின் எண்ணம்

இவனின்
தடி கண்டு
ஓடி ஒளிந்தான் எதிரி
வெடிகுண்டு மார் துளைத்தும்
இவன் அஹிம்சையைப் போடவில்லை உதறி

ஐயன் இவன்
அவதரித்த நன்னாள் இன்று
அப்பன் இவனே
என்றழைக்கும்
ஒப்பற்ற பாரதம்
என்றென்றும் ஒன்று.

 

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “காந்தி ஜெயந்தி

  1. சைவம் தின்ற சிங்கத்தின்
    கர்ஜனை(கவிதை) நன்று…!

  2. மகாத்மாவின் புகழ் கூறும் கவிதை ஆத்மாவைத் தொட்டது.
    நன்று கவிஞரே….பாராட்டுக்கள்!!

  3. ///அப்பன் இவனே
    என்றழைக்கும்
    ஒப்பற்ற பாரதம்
    என்றென்றும் ஒன்று.///

    காந்தியின் வாழ்க்கையை சித்தரித்து, நாட்டின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் வரிகள் அருமை தனுசு.

    அன்புடன்
    ….. தேமொழி

  4. காந்தி ஜெயந்தி அன்று அவரை நினைக்காமல் விடுமுறையில் முறையாக மயங்கி கிடப்பவர்கள் தான் அதிகம். அன்று கப்பலில் இருந்தாலும் காந்திக்கு கவிதை கொடுத்ததற்கும் அதைப் படித்து பாராட்டியவர்க்கும் நன்றி. சில ஆண்டுகள் முன் இதே தினத்தில் ஒரு கவியரங்கத்தில் விளம்பிய சில வரிகள்..
    காந்தியா? என்றதுமே மகாத்மா ஆகிடுமோ ?
    இந்தியா! இப்படியா? அவராத்மா நோவுருமோ ?
    தனக்கென்று வாழாது தாயகத்தை வாழவைத்தார்
    தன்குலத்தை சேர்க்காது தான்மட்டும் கால்வைத்தார்
    பகட்டாடை பட்டாடை துறந்திடவே கணையானார்
    பொய்யோடு சேராது வாய்மைக்கு துணையானார்

    தந்திரமாய் நடக்காது சுதந்திரமாய் சொற்பயின்றார்
    மந்திரியாய் ஆளுனராய் வேண்டாது தனிநின்றார்
    கோலூன்றி நடந்தாலும் கோளுரைக்க விழையாது
    சோர்வின்றி சத்தியத்தை தோளேற்றி படைவென்றார்………
     
    மற்றவை  http://sathiyamani.blogspot.in/search?updated-max=2013-08-14T01:21:00-07:00&max-results=7&start=7&by-date=false

  5. கவிதையை படித்து ரசித்து பாராட்டிய மதிப்பிற்குரிய சென்பக ஜெகதீசன், தேமொழி, மேகலா, சத்தியமனி ஆகியோருக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

    sathiyamani wrote///
    ///அன்று கப்பலில் இருந்தாலும் காந்திக்கு கவிதை கொடுத்ததற்கும் அதைப் படித்து பாராட்டியவர்க்கும் நன்றி///

    கப்பலில் இருந்தாலும் , கரையில் இருந்தாலும், இந்தியா, காந்தி, தமிழ், பாரதி இந்த 4 யும் நான் என்றுமே மறப்பதில்லை மறந்ததில்லை.

    காந்தியயைப்பற்றிய தாங்களின் கவிதையும் அருமை. காந்தியை எத்தனை புகழ்ந்தாலும் நமக்கு சலிப்பதில்லை.
    .

  6. கவிதை மிகவும் அருமை நண்பரே!

    //கப்பலில் இருந்தாலும் , கரையில் இருந்தாலும், இந்தியா, காந்தி, தமிழ், பாரதி இந்த 4 யும் நான் என்றுமே மறப்பதில்லை மறந்ததில்லை.//

    என்ற தங்களின் கூற்றுக்கு தங்களின் கவிதையே சான்று. வாழ்த்துக்கள்.

  7. “சைவம் தின்ற
    சிங்கம் என்பது
    இவனைப்பற்றிய உலகத்தின் எண்ணம்

    இவனின்
    தடி கண்டு
    ஓடி ஒளிந்தான் எதிரி
    வெடிகுண்டு மார் துளைத்தும்
    இவன் அஹிம்சையைப் போடவில்லை உதறி”

    அற்புதமான கவிதை! 
    தன்னைச்சுட்டு வீழ்த்தும் போதும் கோட்சேயைப் பார்த்து தனது கைகளை உயர்த்தி ஆசிர்வத்தித்தப் படியே கீழேச் சரிந்ததாம் இந்த மகாத்மாவைத் தாங்கி இருந்த அந்தப் புனித உடல்!  அவர் கடவுளாக்கப் பட்டார் அதனால் அவரது வாழ்வை கடவுளரின் வாழ்வென்றுக் கூறி சாமன்ய மனிதன் தப்பித்து கொண்டு தனது மனம் போனப்படியெல்லாம் வாழ்கிறான்… அந்நிலை மாறும் நாள் எதுவோ?!

  8. கவிதையை படித்து பாராட்டிய நண்பர் சச்சிதானந்தம், ஐயா இன்னம்பூரான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள்.

  9. காந்தி ஜெயந்தி அன்று ஒரு தனுசு ஸ்பெஷல். நன்று. சைவம் தின்ற சிங்கம் – நல்ல சொல்லாட்சி, வாழ்த்துக்கள் நண்பரே.

  10. கவிதையை படித்து மனம் நிறைந்து பாராட்டிய நண்பர்கள் ஆலாசியம், புவனேஷ்வர் ஆகியோருக்கு என் நன்றிகள்.

Leave a Reply to sathiyamani

Your email address will not be published. Required fields are marked *