தென்மராட்சிக் கல்வி வலையம் – மறவன்புலவு க. சச்சிதானந்தன்

0

பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய  தவத்திரு ஐயா மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுக்கு வல்லமையின் மனம் நிறைந்த பாராட்டுகள்! இன்னும் பல நூறு ஆண்டுகள் தங்களுடைய இந்த அரிய தமிழ்ப்பணி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற மனமார்ந்த வாழ்த்துகள்!!

அன்புடன்

பவள சங்கரி

2014 மார்கழி முதல் நாள் (16. 12. 2013)

மதி நிறை நன்னாள். முழுநிலா நாள் கலைவிழா. யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரியில் தென்மராட்சிக் கல்வி வலையத்தினரின் விழா.

இலங்கையின் வடமாகாணத்தின் 12 கல்வி வலையங்களில் தென்மராட்சிக் கல்வி வலையம் ஒன்று.

ஆசிரியர், தொடக்க, இடைநிலை, மேனிலை, உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களும் முதல்வர்களும் இணைந்து நடத்திய, பெரும் எண்ணிக்கையில் கூடி மகிழ்ந்த விழா.

தென்மராட்சியில் ஒருவரைப் பாராட்டிப் போற்றி மகிழ்வது அவர் கடமை. யாவரும் கல்வியாளர்கள். எனவே கல்வி சார்ந்த ஒருவரை, என்றும் மாணவனாக உள்ள என்னைப் பாராட்ட எண்ணினர். விழா நாளன்று யாழ்ப்பாணத்தில் இருப்பேன் என்பதை உறுதி செய்தனர். எனக்கும் தெரிவித்தனர்.

விழாவின் நெடிய நிகழ்ச்சிகளில் நான் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் காணொலியாக்கினேன். பார்க்க, பகிர்க. http://youtu.be/EHGsS4bSAIU

வணக்கம் தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் 30 ஆண்டுகள் பதிப்புத் துறையில் இருந்தவர்களை 10.1.14 சென்னைப் புத்தகக் காட்சித் தொடக்கவிழாவில் விருது வழங்கிப் பாராட்டுகிறது.

1952 தொடக்கம் என் தந்தையாரிடம் யாழ்ப்பாணத்தில் அச்சுத்தொழில், புத்தகப் பதிப்புத் தொழில் புத்தக விற்பனைத் தொழில் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன்.

1977 தொடக்கம் யாழ்ப்பாணத்திலும் 1980 தொடக்கம் சென்னையிலும் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் ஈடுபட்டேன்.

இன்றுவரை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் புத்தகப் பதிப்பாளனாக, விற்பனையாளனாகத் தொடர்கிறேன்.

1. சென்னை தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பாளருக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருது (கிஆபெ விசுவநாதம் கையால் பெற்றேன்) 2. சென்னைக் கம்பன் கழகம் சிறந்த பதிப்பாளருக்கான மர்ரே ராசம் விருது (நீதிபதி இஸ்மயில் கையால் பெற்றேன்) 3. மதுரை திருவள்ளுவர் சங்கம் சிறந்த பதிப்பாளருக்கான விருது (பழ. நெடுமாறன் கையால் பெற்றேன்) 4. அறவாணன் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (குன்றக்குடி அடிகளார் கையால் பெற்றேன்) 5. மணிவாசகர் அறக்கட்டளை சிறந்த பதிப்பாளருக்கான விருது (சிலம்பொலி செல்லப்பனார் கையால் பெற்றேன்)

இப்பொழுது தென்னிந்திய புத்தக மற்றும் விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் பாராட்டி விருது வழங்குகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *